news

News September 19, 2024

பாம்பு கடியில் இருந்து தற்காத்துக் கொள்வோம்!

image

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாம்பு கடிக்கு உயிரிழப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 4 லட்சம் பேர் பாம்பு கடியால் நிரந்தர மாற்றுத்திறனாளி நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக சர்வதேச பாம்புக்கடி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் பாம்பு கடிக்கான முதலுதவி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது.

News September 19, 2024

தொட்டுப்பார்… மகுடம் சூடும் இந்தியா

image

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ஓபன் பிரிவு 7ஆவது சுற்றில் சீனாவை எதிர்கொண்ட இந்திய அணி, 2.5 – 1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் குகேஷ் வெற்றி பெற்ற நிலையில், பிரக்ஞானந்தா, அர்ஜூன், ஹரிகிருஷ்ணா ஆகியோர் டிரா செய்தனர். இதன் மூலம் 14 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தை தக்க வைத்தது. ஈரான் (13), உஸ்பெகிஸ்தான் (12) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

News September 19, 2024

வட்டியை அதிரடியாக குறைத்தது பெடரல் ரிசர்வ்

image

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.5% குறைத்துள்ளது. இதனால் அமெரிக்காவில் பென்ச்மார்க் வட்டி விகிதம் 4.75% – 5% வரம்பிற்குள் இருக்கும். கொரோனா பேரிடருக்கு பிறகு முதல்முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த எதிரொலியாக, தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்டுகள் போன்ற நுகர்வோர் கடன்களின் வட்டி விகிதமும் குறையும்.

News September 19, 2024

ரூமியின் சிறந்த பொன்மொழிகள்

image

*உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள், குரலை அல்ல. மழைதான் பூக்களை வளர்க்கிறது, இடி அல்ல. *கதவின் பூட்டு நீங்கள்தான் என்று நினைக்கிறீர்கள். ஆனால் சாவியே நீங்கள்தான். *நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும். *பயணம் உங்கள் வாழ்க்கையில் ஆற்றலையும் அன்பையும் மீண்டும் கொண்டுவருகிறது. *வருத்தப்படாதீர்கள். நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும்.

News September 19, 2024

Chess Olymbiad: மாஸ் காட்டும் மகளிர் அணி

image

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி 7ஆவது சுற்றிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ஹங்கேரியில் செஸ் ஒலிம்பியாட் தொடரின் 45ஆவது சீசன் நடந்து வருகிறது. இதில், ஜார்ஜியா அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 3 -1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 14 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. போலந்து (12), கஜகஸ்தான் (12) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

News September 19, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் ▶ குறள் எண்: 57 ▶ குறள்: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. ▶ பொருள்: தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.

News September 19, 2024

திருப்பதி லட்டில் கொழுப்பு கலந்த நெய்?

image

கடந்த ஆட்சியில் திருப்பதி கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர CM சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர்களின் சிறப்புக் கூட்டத்தில் பேசிய அவர், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன் மோகன் வெட்கப்பட வேண்டும் என்றார். மேலும், தான் ஆட்சிக்கு வந்ததும் சுத்தமான நெய் பயன்படுத்த உத்தரவிட்டதாகவும் கூறினார்.

News September 19, 2024

632 நாள்களுக்குப் பிறகு களமிறங்கும் பண்ட்

image

டெஸ்ட் போட்டியில் 632 நாள்களுக்குப் பிறகு ரிஷப் பண்ட் களமிறங்க உள்ளார். நாளை நடைபெறும் BAN-க்கு எதிரான போட்டியில் அவர் விளையாட உள்ளார். கார் விபத்து, சிகிச்சை என சுமார் 2 ஆண்டுகளாக அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. கடந்த 2022ல் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக அவர் விளையாடி இருந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு பண்ட் களமிறங்க உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

News September 19, 2024

இன்றைய (செப்.19) நல்ல நேரம்

image

▶ செப்.19 (புரட்டாசி 3) ▶ வியாழன் ▶ நல்ல நேரம்: 10.45 – 11.45AM ▶ கெளரி நேரம்: 12.15 – 1.15AM & 6.30 – 7.30PM ▶ ராகு காலம்: 1.30 – 3.00PM ▶ எமகண்டம்: 6.00 – 7.00AM ▶ குளிகை: 9.00 – 10.30AM ▶ திதி: துவிதியை ▶ பிறை: தேய்பிறை ▶நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 11.15 மணி வரை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: தெற்கு ▶ பரிகாரம்: தைலம் ▶ யோகம்: சித்தயோகம் ▶ சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

News September 19, 2024

விஜய்யால் திமுகவுக்குதான் ஆபத்து: ஹெச்.ராஜா

image

விஜய் அரசியலுக்கு வந்ததால் திமுக வாக்குகள் பிரியும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், திராவிடர் கொள்கைகளை சொன்னால்தான் தனக்கு வாக்குகள் கிடைக்கும் என விஜய் நினைப்பதாக கூறினார். அதனால் திமுக வாக்குகள்தான் பிரியும் எனக் கூறிய அவர், அது நல்லதுதான் என்றார். மேலும், விசிகவின் மது ஒழிப்பு மாநாடு, மத போதகர் மாநாடு போல மாறி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

error: Content is protected !!