news

News September 19, 2024

ஜம்மு காஷ்மீரில் 61.13% வாக்குகள் பதிவு

image

ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 61.13% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதிகபட்சமாக கிஷ்த்வாரில் 80.14%, குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.65% வாக்குகள் பதிவாகியுள்ளன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின், தேர்தல் நடந்துள்ளது. வரும் 25, அக்.1 தேதிகளில் அடுத்த இரு கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.

News September 19, 2024

வாடகைக்கு குடியிருப்போர் கவனத்திற்கு..

image

வீடு, கடை வாடகை உள்ளிட்ட சாதாரண ஒப்பந்த ஆவணங்களுக்கு ₹200 மதிப்புள்ள முத்திரை தாள்களை பயன்படுத்த பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. வீட்டு வாடகைக்கு பலரும், ₹20 பத்திரங்களையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், குறைந்த மதிப்பிலான பத்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஒப்பந்தங்களை பதிவு செய்யாமல் வைத்துக் கொள்வதாக இருந்தாலும், ₹200 முத்திரைத் தாளையே பயன்படுத்துமாறு கூறியுள்ளது.

News September 19, 2024

ஒரே நாளில் விற்று தீர்ந்த கருணாநிதி நாணயங்கள்..!

image

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது. இந்த நாணயங்கள் மத்திய அரசின் இணையதளத்தில் விற்பனைக்கு வந்தன. நாணயம் ஒன்று ரூ.4,180 மற்றும் ரூ.4,470-க்கு விற்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் மொத்தமுள்ள 1,500 நாணயங்களும் விற்றுத் தீர்ந்தன. இதையடுத்து, அடுத்த வாரம் நாணயங்கள் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளன.

News September 19, 2024

விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது

image

தமிழகத்தின் வட மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவில் பரவலாக மழை பெய்துள்ளது. தொடர்ந்து, காலையிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்திய நிலையில், தற்போது மழை பெய்வது மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?

News September 19, 2024

NPS வாத்சல்யா திட்டம் அறிமுகம்

image

NPS வாத்சல்யா திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு குறைந்தது ₹1,000 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. இது ஒரு பென்சன் திட்டம் என்பதால், குழந்தைகளின் ஓய்வு காலத்திற்கு முதலீடு செய்யலாம். பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்கு இத்திட்டம் உகந்தது அல்ல.

News September 19, 2024

Breaking: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை

image

தங்கத்தின் விலை வரலாற்று உச்சமாக அவுன்ஸ் ஒன்றுக்கு $2,592.39ஆக உயர்ந்தது. அமெரிக்க பெடரல் <<14137150>>ரிசர்வ் வட்டி விகிதம்<<>> அதிரடியாக 0.5% குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக டாலரின் மதிப்பு குறைந்ததால், தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் தாக்கம் பங்குச்சந்தையிலும், இந்திய தங்க சந்தையிலும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

News September 19, 2024

28 லட்சம் மின் இணைப்புகளுக்கு மீட்டர் இல்லை

image

தமிழகத்தில் 3.04 கோடி மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக மத்திய மின்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட 3.32 கோடி மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், 28 லட்சம் இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர்கள் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 23.43 லட்சம் விவசாய இணைப்புகளில், 4.23 லட்சத்துக்கு மட்டுமே மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

News September 19, 2024

சென்னை டெஸ்ட் போட்டி: இன்று டிக்கெட் விற்பனை

image

இந்தியா – வங்கதேச அணிகள் மோதவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. ₹200, ₹400, ₹1,000 என 3 பிரிவுகளில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டிக்கான டாஸ் காலை 9 மணிக்கு போடப்படும்.

News September 19, 2024

செப்டம்பர் 19: வரலாற்றில் இன்று

image

*1778 – அமெரிக்காவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. *1893 – உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. *1898 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் புகழ் பெற்ற சொற்பொழிவு நிகழ்த்தினார். *1944 – பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. *1965 – அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார்.

News September 19, 2024

என்னை இயக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை: திருமா

image

தன்னை ஆதவ் அர்ஜுனா பின்னால் இருந்து இயக்கவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தன்னை இயக்கி, படம் வெளியிடுவதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை என்றார். மது ஒழிப்பு மாநாட்டை நடத்தி சர்ச்சையை ஏற்படுத்த ஆதவ் அர்ஜுனாதான் ஐடியா கொடுத்தார் என்பது உண்மையில்லை எனக் கூறினார். மேலும், இது மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுதானே தவிர, எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!