news

News August 23, 2024

பாலியல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழந்தார்

image

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் உயிரிழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் கைதாவதற்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.

News August 23, 2024

OTT-யில் கல்கி ரிலீஸ்

image

அமேசான் ப்ரைம் OTT தளத்தில் கல்கி திரைப்படம் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கல்கி திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ₹1,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதையடுத்து, அமேசான் ப்ரைமில் நேற்று வெளியாகி உள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், விஜய் தேவர கொண்டா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

News August 23, 2024

தங்கத்தை தவற விட்ட நீரஜ்

image

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா, 2ஆவது இடம் பிடித்தார். தனது கடைசி முயற்சியில் அதிகபட்சமாக 89.49 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, வெள்ளி வென்றார். இது இந்த சீசனில் அவரது சிறந்த சாதனையாகும். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்ற கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், 90.61 தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

News August 23, 2024

திமுகவின் பாஜக எதிர்ப்பு மக்களிடம் எடுபடாது: ADMK

image

திமுகவின் பாஜக எதிர்ப்பு இனி மக்களிடம் எடுபடாது என்று ADMK மூத்த தலைவர் ஜெயக்குமார் சாடியுள்ளார். கருணாநிதி நாணய விழாவில் திமுக, பாஜக தலைவர்கள் இடையே நிலவிய இணக்கத்தை விமர்சித்த அவர், திமுக மூத்தத் தலைவர்கள் பலர் மீது வழக்குகள் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால், திமுகவின் ஊழல் தப்பும் என்ற எண்ணத்தில், திமுக இப்படி செய்கிறது என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார்.

News August 23, 2024

ராகுவின் வக்கிர பார்வை மறைய இதை செய்யுங்கள்!

image

சக்தி தேவியின் பல அவதாரங்களில், உக்கிரமும் கருணையும் கொண்டதாகத் திகழ்பவர் துர்க்கை தேவி என்கிறது புராணம். கும்பகோணம் கதிராமங்கலத்தில் வனதுர்க்கை பரமேஸ்வரியாக காட்சி தரும் அவருக்கு மாலை 4 முதல் 6 மணிக்குள் அபிஷேகம் & குங்கும அர்ச்சனை செய்து, சிவப்பு சேலை சாற்றி, எலுமிச்சை மாலை அணிவித்து, பசு நெய் விளக்கேற்றி வழிபட்டால், ராகுவின் வக்கிர பார்வை மறைந்து, வாழ்வில் நல்லவை கைக்கூடும் என்பது ஐதீகம்.

News August 23, 2024

இன்று இடி – மின்னலுடன் மழை: RMC

image

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை மையம் (RMC) தெரிவித்துள்ளது. நாளை முதல் 28 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் RMC கணித்துள்ளது. சென்னை நகரின் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் எனவும் RMC முன்னறிவித்துள்ளது.

News August 23, 2024

Alert: வங்கிகளுக்கு 3 நாள் தொடர் விடுமுறை

image

இந்த மாதத்தின் 4ஆவது சனிக்கிழமை என்பதால் நாளை வங்கிகளுக்கு விடுமுறையாகும். நாளை மறுநாள் ஞாயிறு என்பதால் வழக்கம்போல் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். அதையடுத்த நாளான திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விடுமுறை விடப்படுகின்றன. தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் முக்கியப்பணிகள் இருப்பின் இன்று முடித்துக்கொள்வது நல்லது.

News August 23, 2024

நாதகவை காங்கிரஸ் உதாசீனப்படுத்த கூடாது: K.C.

image

சீமானின் நாதக கட்சியை காங்கிரஸ் உதாசீனம் செய்யக் கூடாது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சீமான் கட்சியை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை அண்மையில் விமர்சித்திருந்தார். இந்நிலையில், கார்த்தி அளித்த பேட்டியில், இளைஞர்கள் சீமான் கட்சி நோக்கி செல்வது உண்மை. இதன் காரணத்தை ஆராய வேண்டும் என்று தெரிவித்தார். இளைஞர்களை காங்கிரஸ் பக்கம் கொண்டு வர முயல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

News August 23, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤உக்ரைன் தலைநகர் கீவ்வில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ➤17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இன்று நடைபெற உள்ள மகளிர் தங்க மெடலுக்கான போட்டியில், இந்திய வீராங்கனைகள் காஜல் (69kg), சிவாஜி பாட்டில் (46kg) பங்கேற்கின்றனர். ➤பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘கொட்டுக்காளி’, ‘வாழை’ படங்கள் இன்று ரிலீசாகிறது.

News August 23, 2024

இன்றே கடைசி: ₹1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

ஆவினில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 5 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். Marketing Consultant, Logistics Consultan, Consultant (Digital Transformation) உள்ளிட்ட 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ₹1 லட்சம் – ₹2.50 லட்சம் வரை ஊதியம். தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விரிவான தகவல்களை https://aavin.tn.gov.in/careers என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

error: Content is protected !!