news

News September 20, 2024

Chess Olympiad: 8ஆவது சுற்றிலும் இந்தியா வெற்றி

image

45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 8ஆவது சுற்றிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. ஓபன் பிரிவில் ஈரான் அணிக்கு எதிராக களம் இறங்கிய இந்திய அணி 3.5 – 0.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. குகேஷ், அர்ஜூன், விதித் குஜ்ராத்தி வெற்றி பெற்ற நிலையில், பிரக்ஞானந்தா டிரா செய்தார். இதன் மூலம் 16 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. உஸ்பெகிஸ்தான் 14 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

News September 20, 2024

இன்றைய (செப்.20) நல்ல நேரம்

image

▶ செப்.20 (புரட்டாசி 4) ▶ வெள்ளி ▶ நல்ல நேரம்: 9.15 – 10.15AM & 4.45 – 5.45 PM ▶ கெளரி நேரம்: 12.15 – 1.15AM & 6.30 – 7.30PM ▶ ராகு காலம்: 10.30AM – 12.00PM ▶ எமகண்டம்: 3.00 – 4.30PM ▶ குளிகை: 7.30 – 9.00AM ▶ திதி: த்ரிதியை ▶ பிறை: தேய்பிறை ▶நட்சத்திரம்: ரேவதி காலை 9.38 மணி வரை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: மேற்கு ▶ பரிகாரம்: வெல்லம் ▶ யோகம்: அமிர்தயோகம் ▶ சந்திராஷ்டமம்: பூரம்

News September 20, 2024

அரியணை ஏறப்போவது யார்?

image

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் சுமார் 13,400 வாக்குச்சாவடிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் சுமார் 1.7 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அருரா குமார திசநாயகே ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

News September 20, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 20, 2024

முதல்முறையாக கார் வாங்குவோர் இவ்வளவு பேரா?

image

இந்தியாவில் கார் வாங்குவோரில் சுமார் 67% பேர் முதல் முறையாக கார் வாங்குபவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சில்லறை விற்பனை தளமான ஸ்பின்னி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கார் வாங்குவோரில் 30% பெண்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 83% பேர் பெட்ரோல் கார்களையும், 12% பேர் டீசல் கார்களையும், 5% பேர் சிஎன்ஜி கார்களையும் வாங்க விருப்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 20, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 20, 2024

‘பேச்சி’ படத்தை ஓடிடியில் பார்க்கலாம்

image

‘பேச்சி’ திரைப்படம் நாளை முதல் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது. ராமசந்திரன் இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் பால சரவணன் நடிப்பில் வெளியான இப்படம், திகில் நிறைந்த த்ரில்லர் ஜானரில் உருவாகி இருந்தது. இது சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக இருந்தது. இந்நிலையில், திரையங்குகளில் இப்படத்தை பார்க்க தவறியவர்கள் ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.

News September 20, 2024

போராட்டத்தை திரும்பப்பெற்ற மருத்துவர்கள்

image

கொல்கத்தாவில் கடந்த மாதம் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு நியாயம் கேட்டு ஜூனியர் மருத்துவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். சமீபத்தில் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போராட்டத்தை திரும்பப்பெறுவதாக தற்போது அறிவித்துள்ளனர். சனிக்கிழமை பணிக்கு திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

News September 20, 2024

ராசி பலன்கள் (20.09.2024)

image

*மேஷம் – போட்டி உண்டாகும் *ரிஷபம் – கவனமாக இருங்கள் *மிதுனம் – மகிழ்ச்சி நாளாக அமையும் *கடகம் – புதிய நட்பு கிடைக்கும் *சிம்மம் – சோர்வுடன் இருப்பீர் *கன்னி – மங்கலகரமான நாளாக அமையும் *துலாம் – சந்தோஷம் கிடைக்கும் *விருச்சிகம் – மற்றவர்களிடம் இருந்து தொல்லை ஏற்படும் *தனுசு – முயற்சியை கைவிட வேண்டாம் *மகரம் – பயம் உண்டாகும் *கும்பம் – ஜாக்பாட் அடிக்கும் *மீனம் – விவேகத்துடன் செயல்படுங்கள்.

News September 20, 2024

இன்ஸ்டா, FB, வாட்ஸ் அப் பயனர்களுக்கு Sad News

image

இன்றைய சமுதாயத்தில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். இதை பயன்படுத்துபவர்களுக்கு மெட்டா நிறுவனம் அதிர்ச்சி செய்தியை அளித்துள்ளது. அதாவது முகத்தை அழகுபடுத்திக் காட்டும் ‘Filter’ வசதியை 2025 முதல் நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இயற்கைக்கு மாறான இந்த தோற்றத்தால் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால் இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

error: Content is protected !!