news

News September 20, 2024

செப்டம்பர் 20: வரலாற்றில் இன்று

image

*1857 – கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விசுவாசமான படைகள் டெல்லியை கைப்பற்றின. *1932 – மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார். *1933 – பெண்ணிய செயற்பாட்டாளர் அன்னி பெசன்ட் காலமானார். *1977 – ஐநாவில் வியட்நாம் இணைந்தது. *1966 – சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனை நோக்கி விண்ணில் பாய்ந்தது. *1971 – இயக்குநர் மிஷ்கின் பிறந்த நாள். *1984 – செளந்தர்யா ரஜினிகாந்த் பிறந்த நாள்.

News September 20, 2024

சு.வெங்கடேசன் கதையில் விஜய்!

image

சு.வெங்கடேசனின் கதையில் விஜய்யை இயக்க இருந்ததாக சசிக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், எழுத்தாளர் சு.வெங்கடேசன் உடன் சேர்ந்து ஒரு சூப்பர் ஹீரோ ஸ்கிரிப்டை தயார் செய்ததாக கூறினார். ‘பாகுபலி’ படத்திற்கு முன்பே ₹100 கோடி பட்ஜெட்டில் தயாராக இருந்த அதன் கதை விஜய்க்கு பிடித்திருந்ததாகவும், தயாரிப்பாளர் கிடைக்காததால் அப்படத்தை எடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

News September 20, 2024

கடவுள் யாருன்னு யார் பார்த்தா? திரையில் காட்டுது சினிமாதான்

image

உலகளவில் அதிக சினிமா காதலர்களை கொண்ட நாடு எது தெரியுமா? அது நமது இந்தியாதான். உலகளவில் அதிகளவில் திரைப்படங்களை தயாரிக்கும் நாடும் இந்தியாதான். ஆண்டுதோறும் 20க்கும் மேற்பட்ட மொழிகளில், சுமார் 2,000 திரைப்படங்கள் இந்தியாவில் தயாராகிறது. இந்நிலையில், தேசிய சினிமா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இன்று மட்டும் முன்னணி திரையரங்குகளில் வெறும் ₹99க்கு டிக்கெட் கிடைக்கும்.

News September 20, 2024

Chess Olympiad: தோற்றாலும் முதலிடத்தில் இந்தியா

image

45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 8ஆவது சுற்றில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. போலந்து அணிக்கு எதிராக களம் இறங்கிய இந்திய அணி 1.5 – 2.5 என்ற புள்ளி கணக்கில் தோற்றது. திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்ற நிலையில், வந்திகா அகர்வால் டிரா செய்தார். ஆனால், ஹரிகா, வைஷாலி தோல்வி அடைந்ததால், இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. எனினும் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.

News September 20, 2024

சுயமாக சிந்தித்து மக்கள் முடிவெடுப்பார்கள்

image

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு சரத்குமார் வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்த சிறப்பான செயல் முறையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், போலி தகவல்களை நம்பாமல் மக்கள் சுயமாக சிந்தித்து தங்கள் கருத்துகளை கருத்துக் கேட்பின்போது பதிவு செய்வார்கள் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

News September 20, 2024

கார்ல் மார்க்ஸின் பொன்மொழிகள்

image

*மன வலிக்கு ஒரே ஒரு சிறந்த மாற்று மருந்து உடல் வலி. *மக்களை அவர்களின் வரலாற்றிலிருந்து விலக்கிவையுங்கள், அவர்கள் எளிதில் கட்டுப்படுவார்கள். *ஒரு நாட்டின் பாரம்பரியத்தை பறித்துவிடுங்கள், அவர்கள் இன்னும் எளிதாக சம்மதித்துவிடுவார்கள். *நாத்திகம் தொடங்கும் இடத்தில் கம்யூனிசம் தொடங்குகிறது. *எனக்கு பணத்தைப் பிடிக்காது, நாங்கள் போராடுவதற்கு பணம் தான் காரணம். *இசை என்பது யதார்த்தத்தின் கண்ணாடி.

News September 20, 2024

மஞ்சள் சேலை புகழ் இயக்குநருக்கு பிறந்தநாள்

image

தமிழ் சினிமா எத்தனையோ திரைப்படங்களை வழங்கியுள்ளது. ஆனால், சில இயக்குநர்களின் தனித்துவமான படைப்புகள் மட்டுமே காலம் கடந்தும் கொண்டாடப்படுகின்றன. அந்த வரிசையில், இயக்குநர் மிஷ்கினும் ஒருவர். ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், ‘லியோ’, ‘மாவீரன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் நடிகராகவும் வென்றுள்ளார். 53ஆவது பிறந்தநாள் காணும் அவருக்கு வாழ்த்துகள்.

News September 20, 2024

சைபர் மோசடியை தடுக்க TRAI ஐடியா!

image

அக். 1ஆம் தேதி முதல் செல்போன் பயனாளர்களுக்கு SMS மூலம் அங்கீகரிக்கப்படாத இணைய இணைப்புகள் வராது என TRAI தெரிவித்துள்ளது. சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், பயனர்களை பாதுகாக்க TRAI பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வரிசையில், மோசடி இணையதளங்கள் மூலம் மக்கள் பணத்தை இழக்கும் வாய்ப்பை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதிக்கப்பட்ட இணையதள லிங்க் மட்டுமே SMSஆக வரும்.

News September 20, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் ▶ குறள் எண்: 58 ▶ குறள்: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. ▶ பொருள்: நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்களுக்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

News September 20, 2024

வாக்கி டாக்கி, பேஜர் கொண்டு வராதீங்க!

image

பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்யும் பயணிகள் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பல்வேறு இடங்களில் வாக்கி டாக்கி, பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 35 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!