India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கவிஞர் வைரமுத்து இன்று வெளியிட்ட பதிவில், “வாழ்வியல் தோல்விகளால் மூளைப் பிறழ்வு அடையும் சிலர் ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள் மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் பேசுவர். இந்த நோய்க்கு Messianic Delusion Disorder என்று பெயர். இதற்கு உரிய சிகிச்சையும், மருந்துகளும் உண்டு” எனக் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு வைரமுத்து பற்றி பிரபல பாடகி ஒருவர் சில குற்றசாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘பஞ்சாயத்’ வெப் தொடரின் தமிழ் ரீமேக் ‘தலைவெட்டியான் பாளையம்’. மொத்தம் 8 எபிசோடுகள் அடங்கிய இத்தொடர் அமேசான் பிரைம் OTT தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. நடிகை காயத்ரி சங்கரின் நடிப்பில் வெளியான திரில்லர் படமான ‘பேச்சி’, இனியா நடித்துள்ள படம் ‘காஃபி’, எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் ‘மெட்ராஸ்’ வினோத் நடித்துள்ள ‘சாலா’ ஆகியவை ஆஹா OTT தளத்தில் வெளியாகி உள்ளன.
விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும், நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாக இம்மாநாடு நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பாதையை அமைப்போம் என்று சூளுரைத்த அவர், முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த மண்ணின் மகனான தனக்கு, மக்கள் ஆதரவு தருமாறும் கேட்டுக்கொண்டார்.
1) சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன? 2) நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றல் கொண்ட பறவை எது? 3)
நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 4) பைசா கோபுரத்தில் மொத்தம் எத்தனை படிகள் உள்ளன? 5) உலகின் மிகப்பெரிய பூ எது? 6) DNA என்பதன் விரிவாக்கம் என்ன? 7) நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்ட (ஊர்வன) உயிரினம் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ₹55,000-ஐ கடந்தது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 உயர்ந்து ஒரு சவரன் ₹55,080க்கும், கிராமுக்கு ₹60 உயர்ந்து ஒரு கிராம் ₹6,885க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு ₹1.50 உயர்ந்து ஒரு கிராம் ₹97.50க்கும், கிலோ ₹97,500க்கும் விற்கப்படுகிறது.
மத்திய அரசின் வருமான வரித்துறையில் 25 Canteen Attendant பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செப். 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. பணி இடம்: தமிழகம் மற்றும் புதுவை. கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு. வயது வரம்பு: 18 முதல் 25. தேர்வு முறை: எழுத்து தேர்வு & நேர்முகத்தேர்வு. தேர்வு நடைபெறும் நாள்: 06.10.2024. தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள: https://www.tnincometax.gov.in/ என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
உலகளாவிய மோட்டார் சைக்கிள் பிராண்டான ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் Classic 350 என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் 5 கியர், 20.2 Bhp பவர், 27 NM டார்க் இழுவிசை, 349cc திறன் சிங்கிள் சிலிண்டர் என்ஜின், ABS டிஸ்க் பிரேக், இடம் பெற்றுள்ளது. 4.20 வினாடிகளில் 60 Km வேகத்தை எட்டும். லிட்டருக்கு 41.55 Km மைலேஜ் தரும்.195 Kg எடையில், 11 புது வண்ணங்களில் கிடைக்கும் இதன் ஷோரூம் விலை ₹1.99 லட்சமாகும்.
வேலூர் குடியாத்தம் அருகே இரு சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நண்பனின் குழந்தைகளை யோகித் (5), தர்ஷன் (4) கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறி வசந்தகுமார், அடித்துக்கொலை செய்துள்ளார். கோயில் அருகாமையில் இருந்து சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதால் நரபலி முயற்சி நடந்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகித்துள்ளனர். மனைவியை பிரிந்து வாழும் அவர், கடந்த சில நாள்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், உள்ளாட்சி தேர்தலில் 20% இடங்களை தந்தால், திமுகவுடன் கூட்டணி வைக்கலாம், இல்லையெனில் தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு ஒருசேர வலியுறுத்தினர். திருமாவை போல் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், திமுக அமைச்சர்கள் காங்கிரசாரை கண்டுகொள்வதில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.
IAS, IPS பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 24 மையங்களில் இன்று முதல் செப். 29 வரை இத்தேர்வுகள் நடைபெற உள்ளது. 1,056 காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்நிலை தேர்வு நடத்தி 14,627 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில், 650 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சென்னையில் உள்ள தேர்வு மையத்தில் இவர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர். வெற்றி பெற வாழ்த்துகள்.
Sorry, no posts matched your criteria.