news

News September 20, 2024

நுரையீரலை பலப்படுத்த வேற லெவல் கசாயம்..!

image

1 வெற்றிலை, 10 மிளகு, 5 கிராம்பு, சிறு துண்டு இஞ்சி ஆகியவற்றை நன்றாக இடித்து, பின்னர் அந்த விழுதினை ஒரு பாத்திரத்தில் போட்டு, அரை ஸ்பூன் மஞ்சள் மற்றும் ஒரு ஸ்பூன் பனகற்கண்டு சேர்த்து 100 மி.லி. தண்ணீர் சேர்த்து 8 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் வடிகட்டிய கசாயத்தை வாரத்திற்கு ஒரு முறை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலே, மூச்சு வாங்குவது, சளி பிடிப்பது போன்ற பிரச்னைகள் கிட்டேயே வராது.

News September 20, 2024

சட்டம் அறிவோம்: BNS பிரிவு 329 என்ன சொல்கிறது?

image

குற்றம் புரிய (அ) மிரட்ட (அ) அவமதிக்க (அ) தொல்லை தர வேண்டும் என்ற எண்ணத்துடன் சட்டவிரோதமாக ஒருவருக்குச் சொந்தமான வீடு, நிலம் (அ) வழிபாட்டுக்கு உரிய இடத்தில் (அ) பண்டங்களைப் பாதுகாக்கும் இடத்தில் நுழைவதும் ‘அத்துமீறல்’ என சட்டம் வரையறுக்கிறது. இது BNS சட்டம் 329 இன் படி குற்றமாகும். 3 மாதம் முதல் 3 ஆண்டுவரை நீட்டிக்கப்படக் கூடிய சிறைத் தண்டனை & ₹5,000 அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

News September 20, 2024

ஹேக் செய்யப்பட்ட யூடியூப் பக்கம்

image

உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ரிப்பிள்’ என்ற பெயரில் உள்ள அந்த யூடியூப் பக்கம், உச்சநீதிமன்ற வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்புவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேனலை முடக்கிய மர்ம நபர்கள் கிரிப்டோகரன்சியை விளம்பரப்படுத்தும் வகையில் வீடியோக்களை ஒளிபரப்பி வருவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

News September 20, 2024

மூலிகை: வயோதிகத்தைத் தள்ளிப்போடும் செங்கற்றாழை

image

தமிழ், கிரேக்க, சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ‘அற்புதத் தாவரம்’ செங்கற்றாழை. அலோசின், லிக்னின்ஸ், எமோடின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த அதன் தோலை சீவிய பின், உள்ளிருக்கும் சதையை 7 முறை நீரில் சுத்தம்செய்து, வெட்டி தேனோடு கலந்து 45 நாட்கள் உண்டுவந்தால் தேகத்தில் உண்டாகும் வயோதிக மாற்றத்தைத் தள்ளிப்போடலாம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News September 20, 2024

தேங்காய் விலை உயர்வு

image

தமிழகம் முழுவதும் விளைச்சல் பாதிப்பு காரணமாக தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரையிலும் சீராக இருந்த தேங்காய் விலை, வரத்து குறைவால், கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளது. சென்னையில் மொத்த விற்பனை சந்தையில் தேங்காய் விலை கிலோவுக்கு ₹15 வரை உயர்ந்து ஒரு கிலோ ₹50க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் கிலோ ₹70 வரை விற்கப்படுவதால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

News September 20, 2024

திருப்பதி லட்டு: பவன் கல்யாண் சொன்ன வார்த்தை!

image

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பதி லட்டுகளில் பன்றி மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு சேர்க்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதுதொடர்பான பல கேள்விகளுக்கு தேவஸ்தான வாரியம் பதிலளிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க, தேசிய அளவில் சனாதன தர்ம ரக்ஷனா வாரியம் என்ற அமைப்பை நிறுவ வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.

News September 20, 2024

லெபனான் மீது பயங்கர தாக்குதல்..!

image

லெபனான் மீது நேற்று நள்ளிரவு முதலாக இஸ்ரேல் தீவிர வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா படையினரை குறிவைத்து நேற்று முன்தினம் பேஜர் குண்டு தாக்குதலை இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு நடத்தியது. இதில் பலர் பலியான நிலையில், விரைவில் இஸ்ரேலை பழிதீர்ப்போம் என ஹிஸ்புல்லா நேற்று சூளுரைத்தது. இந்த சூளுரை வெளியான சில நிமிடங்களிலேயே, இந்த தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.

News September 20, 2024

84,000+ வரலாற்று உச்சம் தொட்ட சென்செக்ஸ்

image

வாரத்தின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, முதல் முறையாக வரலாற்று உச்சமாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 890.52 புள்ளிகள் உயர்ந்து 84,075.31 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 252.60 புள்ளிகள் உயர்ந்து 25,668.40 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 28 முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.

News September 20, 2024

IELTS தேர்வு முடித்த பெண்களுக்கு Demand ஜாஸ்தி!

image

அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் குடியேற IELTS ஆங்கிலத் தேர்வில் வெற்றி பெற வேண்டியது அவசியம். இந்நிலையில், IELTS முடித்த பெண்கள் வரதட்சணை கொடுக்க வேண்டாம் என்றும், தாங்களே செலவு செய்து திருமணம் முடித்துக் கொள்வதாகவும் வரன் தேடும் விளம்பரங்களில் அதிகம் காண முடிகிறது. வெளிநாடுகளில் குடியேற விரும்பும் ஆண்கள் பலர், இத்தேர்வை முடித்த பெண்களுக்கு வலைவீசி வருகிறார்கள்.

News September 20, 2024

ஆல் அவுட் தான்… ஆனால் அதிரடி ஆட்டம்!

image

வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 91.2 ஓவரில் 376 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணியின் சார்பில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 113, ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் குவித்தனர்.

error: Content is protected !!