news

News August 23, 2024

கொட்டுக்காளி: ஆதிக்கத்தில் இருந்து மீனா மீள்வாளா?

image

கால் கட்டப்பட்ட சேவல் தப்பிக்கும் முயற்சியில் போராடுகிறது. அதை போலவே பெண்ணொருத்தியும் தவிக்கிறாள். அடுக்கில் கீழே உள்ள சாதி ஆணை காதலிக்கும் மீனா (அன்னா பென்), அவளது முறைமாமன் (சூரி) & அவர்களது குடும்பத்தில் நடக்கும் கதைப் பின்னணியில் உலகத் தரத்தில் ஒரு படத்தை இயக்குநர் வினோத் ராஜ் உருவாக்கியுள்ளார். பேயாகத் துரத்தும் ஆணாதிக்கத்தில் இருந்து மீனா மீள்கிறாளா என்பதே முடிவு? (W2N 3/5)

News August 23, 2024

புதிய லுக்கில் அசத்தும் ஸ்டைலிஷ் ஷமி

image

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் ஸ்டைலிஷான புதிய லுக் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மொட்டை அடித்தது போல ஷார்ட் ஹேர் கட்டில் விண்டேஜ் தோற்றத்தில் இருந்த அவரை, 2K ஸ்டைலுக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் மாற்றியுள்ளார். முற்றிலும் மாறுபட்ட தோற்றத்திலான அவரது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

News August 23, 2024

ஆளுநரின் தாமதமே காரணம்: தமிழக அரசு

image

செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விசாரிக்க தாமதமாவதற்கு ஆளுநரின் ஒப்புதல் தாமதமாவதே காரணம் என உச்சநீதிமன்றத்தில் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமித்து விசாரணை நடத்த ED கோரியது. இதையடுத்து, வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? விசாரணை அனுமதிகோரி எந்த தேதியில் ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன? என்ற விவரத்தை 1 வாரத்தில் தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News August 23, 2024

வேலைக்கு போகாதீங்க… டிராவிட்டிடம் மனைவி கெஞ்சல்

image

வேலைக்கு போக வேண்டாம், வீட்டில் இருந்து மகன்களை கவனித்து கொள்ளும்படி மனைவி தன்னிடம் வலியுறுத்துவதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற திறமை மட்டும் போதாது, அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது என்றார். உங்கள் சுயசரிதையில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு, சம்பளம் நன்கு வழங்கப்பட்டால் தாமே நடிப்பதாக பதிலளித்தார்.

News August 23, 2024

ஆப்கன் பெண்கள் பேசக் கூடாது – தலிபான் புது ரூல்ஸ்

image

ஆப்கனில் தலிபான் ஆட்சி அமைந்தது முதல், பெண்கள் படும் அவஸ்தை ஏராளம். பெண்கள் பர்தா அணிய வேண்டும்; கல்லூரி செல்லக்கூடாது, ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெறக் கூடாது என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஆப்கன் பெண்கள் பொது இடங்களில் பேசவோ, பாடவோ கூடாது என்றும், அந்நிய ஆண்களை பார்க்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் குரலில் கவர்ச்சி உள்ளதால் இந்த உத்தரவு போடப்பட்டதாக தெரிகிறது.

News August 23, 2024

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ராஜினாமா?

image

உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி அளிக்காதபோதும், திரைப்படங்களில் நடிக்க போவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே, 22 படங்களில் தான் நடிக்க ஒப்புக்கொண்டதால், அதில் நடிக்க அனுமதி கோரி அவர் எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் கிழித்து எறிந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

News August 23, 2024

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு…

image

வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு எச்சரிக்கை அனுப்பி வருகிறது. அதில், மர்ம எண்களில் இருந்து சுய விவரம் கேட்டோ, பணம் தருவது (அ) சந்தேகப்படும்படி லிங் வந்தாலோ, அந்த செய்திகளுக்கு பதிலளிக்கவோ, பார்வர்டு செய்யவோ வேண்டாம். மர்ம எண்ணை பிளாக் செய்து, புகார் அளிக்கவும். யார் உங்களுக்கு மெசேஜ் அனுப்புவது என்ற அனுமதியை அளித்து செட்டிங்ஸில் மாற்றம் செய்யலாம் எனக் கேட்டுள்ளது. SHARE IT

News August 23, 2024

லிஸ்டில் தோனி பெயர் இல்லை.. மன்னிப்பு கேட்ட டி.கே.

image

தாம் வெளியிட்ட சிறந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் தோனி பெயர் இல்லாததற்கு முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் (டி.கே.) மன்னிப்பு கேட்டுள்ளார். டி.கே. அண்மையில் வெளியிட்ட 12 வீரர்கள் கொண்ட பட்டியலில், உலகக் கோப்பையை வென்று கொடுத்த தோனி பெயர் இல்லாதது சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்புக் கேட்டுள்ள டி.கே., தவறால் இது நடந்து உள்ளதாகவும், தனது அணியில் தோனிக்கு 7ஆவது இடம் என்றார்.

News August 23, 2024

EPSக்கு எதிராக ECல் மனு

image

அதிமுக அவசர செயற்குழு முடிவுகளை ஏற்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி தரப்பு புகார் மனு அளித்துள்ளது. EPS தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எனக் கூறுவதை ஐகோர்ட் தவறு என்று கூறியுள்ளதாகவும், இணை ஒருங்கிணைப்பாளர் என பயன்படுத்துவதாக அவர் கோர்ட்டில் ஒப்புக் கொண்டதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால், பொதுச்செயலாளர் என்ற முறையில் EPS வழங்கும் ஆவணங்களை ஏற்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News August 23, 2024

வாழை: தொழிலாளர்களின் வலியைக் கடத்துகிறது!

image

சுவையான வாழைப்பழத்தின் சுவையை மட்டுமே அறிந்தவர்களுக்கு அதன் தார்களை தூக்கிச் சுமக்கும் கூலிகளின் கசப்பான வாழ்க்கையை மாரி செல்வராஜின் ‘வாழை’ படம்பிடித்து காட்டியுள்ளது. வறுமை காரணமாக பள்ளி விடுமுறை நாள்களில் வாழைத்தார் சுமக்கும் பால்யம், சமூக ஏற்றத்தாழ்வு என கூலி வாழ்வின் ரணத்தை தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், நடிகர்களின் எதார்த்த நடிப்பும் படம் பார்ப்பவர்களின் மனதிலும் ஏற்படுத்துகிறது. (W2N 3/5)

error: Content is protected !!