India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜூன் மாத கணக்கெடுப்பின்படி உலகின் வேகமான இணைய சேவை வழங்கும் நாடுகளின் பட்டியலை Ookla நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 1.கத்தார் – 334.63 Mbps, 2.UAE – 323.61 Mbps, 3.குவைத் – 226.56 Mbps, 4.நார்வே -145.19 Mbps, 5.டென்மார்க் – 144.93 Mbps. இந்த பட்டியலில் இந்தியா 107.03 Mbps இணைய வேகத்துடன் 12ஆவது இடத்தில் உள்ளது. உலகின் சராசரி இணைய வேகம் 56.43 Mbps ஆகும். உங்க மொபைலின் Net Speed என்ன?
சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை என சீமான் கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் போலி NCC முகாம் நடத்தி, மாணவிகளை வன்கொடுமை செய்த புகாரில் கைதான அவர், பாய்ஷன் சாப்பிட்டு இறந்ததாக போலீஸ் கூறியுள்ளது. இதுபற்றி பேட்டியளித்த சீமான், வருத்தம் கேட்டு அவர் தனக்கு கடிதம் எழுதியதாகவும், தற்கொலை செய்யவுள்ளதை அதில் கூறியிருந்ததாகவும் தெரிவித்தார். சிவராமன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக EPS, அண்ணாமலை கூறியிருந்தனர்.
பாலியல் வழக்கில் கைதான முன்னாள் நாதக நிர்வாகி சிவராமன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக EPS தெரிவித்துள்ளார். அவர் எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பாலியல் வழக்கில் முக்கிய பிரமுகர்களின் பெயரை மறைப்பதற்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாக அவர் கூறியுள்ளார். சிவராமன், அவரது தந்தை மரணம், காவல்துறையின் நாடகமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பள்ளி கல்வித்துறையுடன் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் இணைக்கப்படாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், 299 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
AI போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியால் சந்தை முன்னெப்போதைவிடவும் வேகமாக மாறி வருகிறது. இதனால், தற்போது நடைமுறையில் இருக்கும் பல வேலைகள் நாளை இல்லாமல் போகலாம். அதே நேரத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான Green Jobs போன்ற புதிய துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். பசுமை நகர்ப்புறத் திட்டமிடுதல், கட்டடக் கலைஞர்கள் &ஸ்மார்ட் வீடுகளை உருவாக்குபவர்களின் தேவையும் அதிகமாகக் கூடும்.
சூர்யா ₹120 கோடி மதிப்பில் ஜெட் விமானம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது நவீன தொழில்நுட்பம், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ள Dassault Falcon 2000 ரக விமானம் எனக் கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் வதந்தி என சூர்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து “யாரு பார்த்துவிட்ட வேலைடா இது” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
புதிய ரேஷன் அட்டைகள் வழங்க தாமதிப்பதாக, தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், மகளிர் உரிமைத் தொகைக்கு அதிக விண்ணப்பங்கள் வருவதை தவிர்க்கவே, அரசு இவ்வாறு செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், ரேஷன் அட்டைகள் பெறுவது மக்களின் உரிமை என்பதால், இதுவரை விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உடனே ரேஷன் அட்டைகள் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ரயில்வேயில் (கொங்கன் பிரிவு) காலியாக உள்ள 190 இடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி ஆன்லைனில் நடைபெறுகிறது. டெக்னீசியன், தண்டவாள பராமரிப்பாளர், சரக்கு ரயில் மேலாளர், உதவி லோகோ பைலட் உள்ளிட்ட இடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டு உள்ளன. இதற்கான பதிவு konkanrailway.com இணையதளத்தில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க செப்.16 கடைசி நாளாகும். SHARE IT
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய்க்காக வாதாட எந்த வழக்கறிஞரும் முன்வராத நிலையில், 25 ஆண்டுகள் அனுபவம் கொண்ட வழக்கறிஞர் கபிதா சர்க்கார் அவருக்காக வாதாடுவதாக அறிவித்துள்ளார். “குற்றவாளியாகவே இருந்தாலும் நியாயமான விசாரணையை பெற அவருக்கு உரிமை இருக்கிறது. குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையில் ஒருவர் அப்பாவிதான் என நம்புபவள் நான்” என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர் தோல்விகளை கண்டுவரும் EPS மீது அதிருப்தியில் உள்ள அதிமுக சீனியர்ஸ் & நிர்வாகிகளை தன் பக்கம் ஈர்க்க, சசிகலா அரசியல் 2ஆம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது தெரிந்ததே. தொண்டர்களை உற்சாகப்படுத்த நினைத்த அவர், பயணத்தின் முடிவில் சோர்ந்து போய்விட்டதாக அவரது நெருங்கிய வட்டாரம் கூறுகிறது. எவ்வளவு முன்னேற்பாடுகள் செய்தாலும் கூட்டத்தைக் காட்ட முடியவில்லை என்பதுதான் இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.