news

News April 16, 2025

தர்பூசணியில் எந்த ரசாயனமும் இல்லை – தமிழக அரசு

image

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய முன்னாள் உணவு பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க அதிகாரிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News April 16, 2025

IPL: DC முதலில் பேட்டிங்

image

இன்றைய IPL போட்டியில், RR அணியுடன் DC அணி மோதுகிறது. இதில், டாஸ் வென்ற RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், DC அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். நடப்பு சீசனில் வலுவான நிலையில் இருக்கும் DC அணி, இப்போட்டியில் வென்றால் முதலிடத்திற்கு முன்னேறும். அதேநேரம், புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் RR அணி, மீண்டு எழ முயற்சி செய்து வருகிறது.

News April 16, 2025

முதலமைச்சர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம்

image

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் முறையாக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு கவர்னர் வேந்தராக நீடித்துவந்த நிலையில், அதனை மாற்றும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையிலும், சட்டப்போராட்டம் நடத்தி அரசு அதனை வென்றது. இதனையடுத்து, வேந்தராக முதல்வர் இன்று கூட்டத்தை நடத்தினார்.

News April 16, 2025

அந்த டைரக்டர் படத்தில் நடிப்பது ஏன்? VJS விளக்கம்

image

தெலுங்கு மசாலா பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து VJS விளக்கம் அளித்துள்ளார். தன்னுடைய இயக்குநர்களின் முந்தைய படங்களை வைத்து அவர்களை மதிப்பிடமாட்டேன் எனவும், கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வதாகவும் VJS தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் இதுவரை தான் நடித்திராத வகையில், முழுமையான ஆக்‌ஷன் படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

News April 16, 2025

சீமானை கூட்டணிக்கு அழைத்தார் நயினார்

image

நாம் தமிழர் கட்சி, பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். மாறுபட்ட கொள்கைகளை கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய கதைகள் உள்ளன என்று சுட்டிக் காட்டிய அவர், திமுகவை வீழ்த்துவதற்காக சீமான் இதனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை சீமான் ஏற்பாரா!

News April 16, 2025

பெண் என்றால் யார்? கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

பெண்ணாகப் பிறந்தவர்கள் மட்டுமே பெண்களாக அனுமதிக்கப்படுவார்கள் என்ற அதிரடி தீர்ப்பை UK நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஆணாக பிறந்து பெண்ணாக தங்களை உணர்பவர்கள் (திருநங்கை) தங்களுக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான வழக்கில், பெண்ணாகப் பிறந்தால் மட்டுமே பெண் என்று கருதப்படுவார்கள் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News April 16, 2025

நாளையோடு பள்ளிகள் முடிகின்றன

image

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திற்கும் நாளையோடு (ஏப்ரல் 17) தேர்வுகள் நிறைவடைகின்றன. அடுத்த வாரம் இறுதி வரை திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகளை, கோடை வெயிலின் தாக்கத்தினால் ஏப்ரல் 17-ம் தேதியோடு நிறைவு செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, நாளை முதல் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது.

News April 16, 2025

IPL அணிகளுக்கு BCCI கொடுத்த அலெர்ட்

image

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஐபிஎல் அணிகளின் ஓனர்கள், வீரர்களை மோசடி வலையில் வீழ்த்த முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி ஃபிக்ஸிங் உள்ளிட்ட மோசடி செயல்களை செய்யத் தூண்டுவதாகவும், இதனால் விழிப்புணர்வுடன் செயல்படவும் அணிகளுக்கு BCCI அறிவுறுத்தியுள்ளது. மேலும், சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராவது தொடர்பு கொண்டால் உடனே தெரிவிக்கவும் கூறியுள்ளது.

News April 16, 2025

செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்கள் உள்ளன: ED

image

டாஸ்மாக் ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கினால், அதன் சங்கிலி என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா என சென்னை ஐகோர்ட்டில் ED கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்கள் தலைமை அலுவலகத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது. ஆனால், தற்போது டாஸ்மாக் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், இனி ஒவ்வொரு துறையாக குறிவைக்கப்படும் எனவும் டாஸ்மாக் தரப்பு வாதாடிய நிலையில், விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

மகளின் நிர்வாணத்தை வீடியோ எடுத்த கொடூரத் தாய்!

image

பெற்ற பிள்ளைகளுக்கு சிறு தீங்கு கூட வராமல் பார்த்துக் கொள்வது தாய்தான். ஆனால், புனேவில் 14 வயது சிறுமிக்கு தாயே வில்லியாக மாறி இருக்கிறார். 36 வயதான தாய், வேறொரு இளைஞருடன்(24) முறையற்ற உறவில் இருந்ததை மகள் கண்டுபிடித்து விட்டாள். இதனால், மகளை மிரட்ட அவள் குளிப்பது, உடை மாற்றுவதை வீடியோ எடுத்து தாயே வைரலாக்கியுள்ளார். சிறுமி அளித்த புகாரில் தாயும், அவரது காதலனும் கைதாகியுள்ளனர்.

error: Content is protected !!