news

News August 23, 2024

ஓராண்டுக்கு மகப்பேறு விடுமுறை: CM ஸ்டாலின்

image

பெண் காவலர்களுக்கான மகப்பேறு விடுமுறை, ஓராண்டுக்கு அளிக்கப்படும் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில், சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கினார். பின்னர் பேசுகையில், மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள் விரும்பும் இடத்தில் வேலை தரப்படும் என்றார். மேலும், கணவர், பெற்றோர் வசிக்கும் இடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

News August 23, 2024

காங்கிரஸை கேள்விகளால் துளைத்த அமித்ஷா

image

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் JKNC – காங். கூட்டணி தொடர்பாக அமித்ஷா பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். JKக்கு தனிக்கொடி வேண்டும் என்ற அக்கட்சியின் வாக்குறுதியை காங். ஆதரிக்கிறதா? 370, 35A பிரிவை மீட்டு காங். மீண்டும் அமைதியின்மைக்கு வழிவகுக்கிறதா? பாக். உடன் வர்த்தகம் செய்ய நினைக்கும் அக்கட்சியின் வாக்குறுதியை ஏற்கிறீர்களா? என 10 கேள்விகளை அடுக்கியுள்ளார்.

News August 23, 2024

பங்களா வன்முறை: கைதாகிறார் ஷகிப் அல் ஹசன்?

image

வங்கதேச கிரிக்கெட் வீரரும், MPயுமான ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் நடந்த கொலை தொடர்பாக Ex PM ஷேக் ஹசீனா, ஷகிப் உள்ளிட்ட 156 பேர் மீது புகாரளித்துள்ள நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது கிரிக்கெட் போட்டியில் விளையாடிவரும் அவர், எப்போது நாடு திரும்பினாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

News August 23, 2024

எலி மருந்து சாப்பிட்டவர்களை காப்பாற்ற முடியாதா?

image

எலி மருந்து சாப்பிட்ட ஒருவரை உடனே ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வந்தால், அவரது உயிரை காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆரம்ப கட்டத்தில் Gastric lavage முறையில் மூக்கு வழியாக Tube போட்டு, வயிற்றை சுத்தம் செய்து உயிரை காப்பாற்றலாம். அடுத்த கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பை தவிர்க்க plasma exchange செய்ய வேண்டும். கடைசி கட்டத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்கிறார்கள்.

News August 23, 2024

S.VE.சேகருக்கு தீவிர உடல் நலக்குறைவு

image

நடிகரும், Ex BJP நிர்வாகியுமான S.VE.சேகர், மூச்சுத் திணறலால் பாதித்துள்ளதாகக் கூறியுள்ளார். முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்தவாறு, Xஇல் Photoவை பகிர்ந்துள்ள அவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருவதாகத்
தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த S.VE.சேகர், ADMK, BJPஇல் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.

News August 23, 2024

முஸ்தபா.. முஸ்தபா… Don’t Worry முஸ்தப்பா…

image

சமீபத்தில் ரஷ்யா சென்ற PM மோடி, அந்நாட்டு அதிபர் புடினை கட்டியணைத்து கை குலுக்கிய காட்சியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்திருந்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஈவு, இரக்கமற்ற குற்றவாளியை கட்டி அணைப்பதா எனக் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், தற்போது உக்ரைன் சென்ற மோடி, ஜெலன்ஸ்கியை கட்டி அணைத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நீங்கள் என்ன நினைக்கிறீங்கனு கமெண்ட் பண்ணுங்க.

News August 23, 2024

ஜெய்ஷா கனவை நிஜமாக்குமா இந்திய அணிகள்?

image

இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணி ஹாட்ரிக் கோப்பை வெல்லும் என ஜெய்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பார்படாஸ் மண்ணில் ரோஹித் மூவர்ணக் கொடியை நிலை நாட்டுவார் என முன்னரே தான் கூறியதை நினைவுகூர்ந்தார். அதேபோல, சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் என்றார்.

News August 23, 2024

APPLY NOW: மத்திய அரசில் 1,130 பணியிடங்கள்

image

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 1,130 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 39 பணியிடங்கள் உள்ளன. 12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற 18 – 23 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு செப்.30க்குள் <>https://cisfrectt.cisf.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News August 23, 2024

பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற உடை வேண்டாம்: CG

image

மருத்துவக் கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழாவில் இனி, கருப்பு நிற உடை அணிய வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான சுகாதார அமைச்சக உத்தரவில், அந்தந்த மாநிலத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப, பட்டமளிப்பு விழாவில் உடை அணியலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆங்கிலேயே ஆட்சியாளர்கள், தங்களது காலணி ஆதிக்கத்திலிருந்த நாடுகளில் கருப்பு நிற உடை அணிந்து பட்டமளிப்பு விழா நடத்துவதை அமல்படுத்தியிருந்தனர்.

News August 23, 2024

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நித்யா மேனன்

image

‘மகாராஜா’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார். கிராமத்து கதை களத்தில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். இத்தகவலை தயாரிப்பு நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. மேலும், இப்படத்தில் பணியாற்றும் பிற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

error: Content is protected !!