news

News August 23, 2024

சென்னை மெட்ரோவில் ₹1.45 லட்சம் சம்பளத்தில் வேலை

image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ₹1.45 லட்சம் சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. JGM, DGM (ஆர்கிடெக்ட்) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதில் JGM வேலைக்கு மாதம் ₹1.25 லட்சம், DGM வேலைக்கு மாதம் ₹1.45 லட்சம் சம்பளம் ஆகும். வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <>https://chennaimetrorail.org/<<>> தளத்தில் செப்டம்பர் 6 வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT

News August 23, 2024

இதுதான் எங்க Stand… ஓபனா சொன்ன மோடி

image

ரஷ்யா – உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும், அமைதியின் பக்கம் நிற்பதாகவும் PM மோடி தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க பயணமாக உக்ரைன் சென்ற அவர், அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். அப்போது, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலமே மோதலுக்கு தீர்வு காண முடியும் என்பதே இந்தியாவின் நிலைபாடு எனக் கூறினார்.

News August 23, 2024

கண்ணை நம்பாதே… TRAI எச்சரிக்கை

image

TRAI அதிகாரிகள் எனக் குறிப்பிட்டு, மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. KYC புதுப்பிக்காவிட்டால் மொபைல் எண் துண்டிக்கப்படும் எனக் கூறி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக TRAI எச்சரித்துள்ளது. மேலும், KYC காரணமாக மொபைல் எண்ணை TRAI துண்டிக்க முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளது. சைபர் புகார்களுக்கு Call 1930. Share it.

News August 23, 2024

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய என்ன வேண்டும்?

image

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய டீமேட் A/C, ட்ரேடிங் A/C மற்றும் வங்கி A/C தேவைப்படும். பங்குகளை ட்ரேடிங் கணக்கு மூலமே வாங்கி, விற்க முடியும். அவ்வாறு வாங்கிய பங்குகள் டீமேட் கணக்குகளில் வரவு வைக்கப்படும். பணப்பரிவர்த்தனைக்கு வங்கி கணக்கு தேவைப்படுகிறது. இவற்றை விட முக்கியமானது முதலீட்டிற்கான பணம் என்பதை மறந்துவிட வேண்டாம். நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கிறீர்களா என கமெண்ட் பண்ணுங்க.

News August 23, 2024

இலங்கை, நியூசி., இடையே 6 நாள் டெஸ்ட் போட்டி?

image

பொதுவாக சர்வதேச டெஸ்ட் போட்டிகள் 5 நாள்கள் நடைபெறும் நிலையில், இலங்கை – நியூசிலாந்து இடையே டெஸ்ட் போட்டி 6 நாள்கள் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செப்.18 – 23 வரை நடைபெற உள்ளது. இதனிடையே செப்.21 ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் போட்டி நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2001இல் பவுர்ணமி, 2008இல் பார்லி. தேர்தலையொட்டி 6 நாள் டெஸ்ட் நடந்துள்ளது.

News August 23, 2024

போரை நிறுத்த சொன்ன மோடி..!

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் PM மோடி போர் நிறுத்தம் குறித்து பேசியதாக MEA ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். போரை நிறுத்த உக்ரைன் – ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியதாகவும் கூறினார். மேலும், உக்ரைனுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டார். இதனிடையே, உக்ரைனுடன் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

News August 23, 2024

மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் சூரி

image

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘விடுதலை’ படம் சூரியின் நடிப்பை வேறுவிதமாக காட்டியது. இப்படத்திற்கு பின் கதையின் நாயகனாக, நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சூரி. தற்போது வெற்றிமாறனின் விடுதலை 2ஆம் பாகத்தில் நடித்துவரும் சூரி, அடுத்ததாக அவருடன் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படமும் வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

News August 23, 2024

நாளை முதல் 3 நாள் தொடர் விடுமுறை

image

தமிழகத்தில் நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. நாளை சனி, நாளை மறுநாள் ஞாயிறு என்பதால் வழக்கமான 2 நாள் வார இறுதி விடுமுறை. திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் விடுமுறை. சுற்றுலா, ஆன்மிகப் பயணம் போன்றவை செல்ல முடிவு செய்தவர்கள் விடுமுறையை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம்.

News August 23, 2024

இபிஎஸுக்கு புது தலைவலி கொடுத்த புகழேந்தி

image

அதிமுக அவசர செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்கக் கூடாது என ECஇல் பெங்களூரு புகழேந்தி மனு அளித்துள்ளார். கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், இபிஎஸ்ஸை பொதுச்செயலாளராக நியமித்ததை எதிர்த்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அவர் கூட்டத்தை கூட்டியது சட்டத்திற்கு புறம்பானது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

News August 23, 2024

கேரளாவில் தீவிரமெடுக்கும் எலி காய்ச்சல்

image

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் சமீப காலமாக எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 2021ல் இதற்கு 121 பேர் பலியான நிலையில், நடப்பாண்டில் ஆக.21 வரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,916 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!