news

News September 21, 2024

துணை CMஆகும் உதயநிதி: இந்தத் தேதியில் அறிவிப்பு?

image

வருகிற 28ம் தேதி நடைபெறவுள்ள திமுக பவள விழா பொதுக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 மாதங்களாகவே உதயநிதி விரைவில் துணை முதல்வராவார் என செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இதை மூத்த அமைச்சர்கள் சிலரும் உறுதி செய்தனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் 28ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

News September 21, 2024

அவருடன் என்னை சேர்த்து பேசாதீர்கள்: ஜெயம் ரவி

image

தனது மனைவி ஆர்த்தியை பிரியப் போவதாக ஜெயம் ரவி அறிவித்திருந்தார். இதனிடையே, பாடகி கெனிஷாவுடன் தொடர்பில் இருப்பதால்தான் மனைவியை அவர் பிரிவதாக தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்த ஜெயம் ரவி, “பாடகி கெனிஷாவுடன் என்னை இணைத்து பேசாதீர்கள். அது தவறு. அவருடன் இணைந்து ஆன்மீக மையம் ஒன்றை தொடங்க இருந்தேன். அதை தடுப்பதற்காக சிலர் இப்படி பேசுகிறார்கள்” எனக் கூறினார்.

News September 21, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் மீது 140 ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. ➤மியான்மர் யாகி புயலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்தது. ➤ஈரானில் சிறையில் உள்ள 2,887 கைதிகளுக்கு அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி பொதுமன்னிப்பு வழங்கினார். ➤உக்ரைன் போரில் இதுவரை 70,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக BBC கூறியுள்ளது.

News September 21, 2024

பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கும் தமிழக அரசு

image

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை சத்யவாணி முத்து அம்மையார் திட்டம் என்ற பெயரில் தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பெண்கள் பெறலாம். கைம்பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 20-40 ஆகும். தையல் தெரிந்திருப்பதோடு, ஆண்டு வருமானம் ₹72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். SHARE IT

News September 21, 2024

விளையாட்டு துளிகள்

image

➤தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்க தவறிய இந்திய கபடி கூட்டமைப்பை, சர்வதேச கபடி ‘சஸ்பெண்ட்’ செய்தது. ➤ENG அணிக்கு எதிரான முதலாவது ODI போட்டியில் AUS அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ➤செஸ் ஒலிம்பியாட்: 9ஆவது சுற்றில் அமெரிக்காவுடனான போட்டியை இந்திய பெண்கள் அணி ‘டிரா’ செய்தது. ➤சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்தியாவின் மாள்விகாவை ஜப்பானின் யமகுசி 2-0-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

News September 21, 2024

BREAKING: இலங்கையில் வாக்குப்பதிவு தொடங்கியது

image

இலங்கை அதிபர் பதவித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 – மாலை 4 மணி வரை இத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, 13,421 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் மொத்தம் 1.7 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர். தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர்கள் சஜித் பிரேமதேசா, திசநாயகே ஆகியோர் முக்கியமானவர்கள்.

News September 21, 2024

காங்கிரசுக்கு பேய் பிடித்துள்ளது: மோடி

image

காங்கிரஸ் கட்சிக்கு வெறுப்பு பேய் பிடித்திருப்பதாக PM மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரசிடம் இருந்த தேசப்பற்று என்ற உயிர் மரணித்து விட்டதாகவும், அக்கட்சியை பேய் பிடித்து உள்ளதாகவும் சாடினார். சோனியா காந்தி குடும்பமே மிகவும் ஊழல்மிக்க ராஜ குடும்பம், வெளிநாடு சென்று இந்திய எதிர்ப்பை செயல்படுத்துகிறது என்றும் விமர்சித்தார்.

News September 21, 2024

சகுனிகள் இருக்கும் சமூகம் இது: ரஜினி தெறி பேச்சு

image

‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், “ஒருபடம் தோல்வி அடைந்து விட்டால், அடுத்த படம் ஹிட் கொடுக்கும் வரை தூக்கம் இருக்காது. சகுனிகள் அதிகம் வாழும் சமூகம் இது. இங்கு நாம் நியாயவாதியாக மட்டும் இருந்தால் போதாது. சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் நிச்சயம் இருக்க வேண்டும். இந்த இரண்டுமே இருந்தால்தான் இங்கு நாம் பிழைக்க முடியும்” எனக் கூறினார்.

News September 21, 2024

உக்ரைன் போர்: ரஷ்ய வீரர்கள் 70,112 பேர் இதுவரை பலி?

image

உக்ரைன் போரில் ரஷ்யத் தரப்பில் இதுவரை 70,112 பேர் பலியாகி உள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசு வெளியிட்ட அறிவிப்புகள், பிற செய்திகளை மேற்கோள்காட்டி பலி எண்ணிக்கையை உறுதி செய்திருப்பதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த மீடியாஜோனா, மெடுசா ஆகியவை 1.20 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் உக்ரைன் தரப்பு பலி குறித்து அவை தகவல் வெளியிடவில்லை.

News September 21, 2024

இன்று விரதமிருந்தால் சகல துன்பங்களும் நீங்கும்

image

மாதங்களில் சிறப்பு வாய்ந்தது புரட்டாசி என்றும், அது பெருமாளுக்குரிய மாதம் என்றும் ஆன்மிகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த மாத சனிக்கிழமை (இன்று) விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால், அனைத்து கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்று கூறப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது என்றும், நமக்கான புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது என்றும் சொல்லப்படுகிறது.

error: Content is protected !!