India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு இதுவரை நெய் விற்பனை செய்ததில்லை என அமுல் நிறுவனம் கூறியுள்ளது. திருப்பதி கோயிலுக்கு அமுல் நெய் சப்ளை செய்தாக சில ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அமுல் விளக்கமளித்துள்ளது. அமுல் நெய் தூய பால் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சைக்கு எழுந்தது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ₹6,885க்கும், 1 சவரன் தங்கம் ₹55,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை கிராமுக்கு இன்று ₹75 உயர்ந்து ₹6,960ஆக விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் தங்கம் ₹55,680க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு அதிகரித்து ₹98க்கும், 1 கிலோ ₹500 உயர்ந்து ₹98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார்களாக இருப்பவர்கள் மம்மூட்டி, மோகன்லால். இந்த இருவரும் 16 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிக்கவுள்ளனர். டேக் ஆஃப், மாலிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இப்படத்தை இயக்கவுள்ளார். தலைப்பிடப்படாத இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் அவர்கள் இணையும் 8வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சுயதொழில் செய்வோருக்கும், நிச்சயமற்ற வருமானம் கொண்டவர்களுக்கும் மாதந்தோறும் வருமானம் ஒரே மாதிரி இருக்காது. இது பணம் & மன நெருக்கடிகளை உண்டாக்கலாம். எனவே, சீரான வருமானத்தை உறுதி செய்ய வர்த்தக வாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். அதிக வருவாய் வரும்போது, கிடைக்கும் உபரி தொகையை சேமிக்க வேண்டும். அத்துடன் அதை மாற்று நிதி சாதனங்களில் முதலீடு செய்து, பெருக்குவதிலும் முழு கவனம் செலுத்த வேண்டும்.
கர்ப்பிணி, சிறார்களுக்கான தடுப்பூசிகளை ஆவணப்படுத்தும் புதிய செயலியான U-WINஐ PM மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கவுள்ளார். இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, அந்த செயலியின் சோதனை நிறைவடைந்து விட்டதாகவும், செயலி பயன்பாட்டுக்கு வந்ததும் தடுப்பூசி போட வேண்டிய நேரத்தை முன்பதிவு செய்வது, தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்வது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தலாம் என்றார்.
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சில உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமாக செரிமானக் கோளாறுகள் அல்லது உடல் அசௌகரியம் ஏற்படும். அதன்படி, அதிக அமிலம் கொண்ட சிட்ரஸ் பழங்கள் (ஆரஞ்சு, எலுமிச்சை), காபி, வெள்ளைச் சர்க்கரை, அதிக நார்ச்சத்து உள்ள காய்கறிகள், காரமான தின்பண்டங்கள், கார்பன் டைஆக்ஸைடு கலந்த குளிர்பானங்கள் (சோடா), வாழைப்பழம் போன்றவற்றை காலையில் எழுந்தவுடன் சாப்பிடக்கூடாது.
PM பதவியிலிருந்து மோடி விலகும் சூழல் ஒரு மாதத்தில் வரும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மோடியின் 3ஆவது அரசின் முதல் 100 நாள் ஆட்சி குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், 100 நாள் நிர்வாகத்தில் மோடி அரசு தோல்வியடைந்து விட்டது, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சாடினார். பிரதமர் பதவியிலிருந்து மோடியை மாற்ற ஆர்எஸ்எஸ் முடிவு செய்து விட்டது என்றும் தெரிவித்தார்.
இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசானின் முக்கிய மின்சாதன சந்தையாக 35% வளர்ச்சியுடன் தமிழகம் உருவெடுத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தையொட்டி அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘ஃபெஸ்டிவ் பாக்ஸ்’ திட்டத்திற்கு சென்னையில் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் குறிப்பாக, ஸ்மார்ட்ஃபோன் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் ஊழியர் சுபாஷ் திருடியதாக பார்வதி நாயர் 2022இல் அளித்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. பதிலுக்கு பார்வதி நாயர் உள்ளிட்டோர் தாக்கியதாக சுபாஷ் தொடுத்த மனுவை விசாரித்து தேனாம்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் பார்வதி நாயர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவிப்பவரா நீங்கள்? உங்களுக்கான மூலிகை தேநீர் இதோ… துளசி, பட்டை, ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, அதிமதுரம், ஜாதிக்காய், சித்தரத்தை இவற்றை சம அளவு எடுத்து வறுத்து, இடித்து பொடியாக்கி அதை நீரில் போட்டு கொதிக்க வைத்து, இறக்கி தேன் கலந்து குடியுங்கள். சளி தன்னால் நீங்கிவிடும். அத்துடன் உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
Sorry, no posts matched your criteria.