India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பதவிகளை காப்பாற்றி கொள்ள திமுக, மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாக TTV தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆளுநரின் பதவிக்காலம் முடிந்தும் திமுக அதை பற்றி வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், பதவிக்காக எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடுவார்கள் என விமர்சித்துள்ளார். மேலும், பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்புக்கு காரணமான போதைப் புழக்கத்தை அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவராக 11 ஆண்டுகள் பணியாற்றி வந்த ஸ்ரீலா வெங்கடரத்னம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஏப்ரலில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவின் மூத்த தலைவராக 18 ஆண்டுகள் பணியாற்றி வந்த ட்ரியோ பாக்ளினா ராஜினாமா செய்தார். அதேபோல் பொது கொள்கை மற்றும் தொழில் மேம்பாட்டு பிரிவின் துணைத் தலைவராக இருந்த ரோகன் படேலும் அண்மையில் விலகினார்.
ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். ‘வாழை’ படம் பார்க்கும் அனைவரையும் மனம் கனத்து போகச் செய்யும் எனவும், இது மாதிரியான சூழலில் இருந்துதான் மாரி செல்வராஜ் என்பவன் வந்தான் என்பதை இந்த படம் உணர்த்தும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த காலத்திலும் இது போன்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்வதாக தெரிவித்துள்ளார்.
▶ஆகஸ்ட் – 24 ▶ஆவணி – 08 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 07:31 AM – 09:00 AM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 09:30 PM – 10:30PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM ▶குளிகை: 06:00 AM – 7:30 AM >▶திதி: திதித்துவம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: உத்திரம். ▶நட்சத்திரம்: ரேவதி
யானையை கட்சிக் கொடியில் வைக்க தன் தம்பி விஜய்க்கு உரிமை இல்லையா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். யானை என்பது தனி மனிதனுக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சொந்தமானது இல்லை எனவும், தமிழர் பண்பாட்டு மரபுப்படி கொடி வடிவமைத்ததற்காக விஜய்யை பாராட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், யானைப் படை வைத்து, போரில் வென்று வெற்றி வாகை மலரை சூடும் தமிழர் மரபை புறநானூறு படித்தால் தெரியும் என கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவின் மிகவும் ஆடம்பரமான இயல்பு மற்றும் அவரைச் சுற்றி மட்டுமே கவனம் செலுத்துவதுமே அவரது மனைவி நடாஷா பிரிந்ததற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. ஹர்திக்கின் அதீத சுறுசுறுப்பான மனநிலை, சுதந்திரமான பெண்ணான நடாஷாவிற்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. எப்போதும் புகழ் வெளிச்சத்தில் இருக்க விரும்பிய பாண்டியாவை நாளடைவில் அவருக்கு பிடிக்காமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
*ஒரு சமூகத்தின் பெரும் பகுதியினர் ஏழைகளாகவும் துன்பத்திலும் இருக்கும் போது, எந்தவொரு சமூகமும் நிச்சயமாக செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது. *குற்றவாளிகளுக்குக் கருணை காட்டுவது அப்பாவிகளுக்குக் கொடுமை பண்ணுவதாகும். *எங்கெல்லாம் அதிக சொத்து இருக்குமோ அங்கெல்லாம் அதிக ஏற்றத்தாழ்வு இருக்கும். *முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உங்களைத்தான்.
பிரபல செய்தி நிறுவனம் 30 மாநிலங்களில் 1.36 லட்சம் பேரிடம் எடுத்த கருத்து கணிப்பில், சிறப்பாக செயல்படும் முதல்வராக 33% மக்கள் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தேர்வு செய்துள்ளனர். 13.8 சதவீதத்துடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2ஆவது இடத்திலும், 9.1 சதவீதத்துடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3ஆவது இடத்திலும் உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4.7 சதவீதத்துடன் 4ஆம் இடத்தில் உள்ளார்.
இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பெருமை வாய்ந்த பெரிய நாடான இந்தியாவை பற்றி நிறைய படித்துள்ளதாகவும், போர் காரணமாக இந்தியாவிற்கு வர நேரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடு முக்கிய பங்களிப்பை செலுத்தும் என்பதால் தங்களுடன் நிற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
▶1608 – இந்தியாவுக்கான முதலாவது அதிகாரபூர்வ பிரிட்டன் பிரதிநிதி வில்லியம் ஹாக்கின்ஸ் சூரத் நகரை வந்தடைந்தார். ▶1690 – பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஜாப் சார்னொக் கல்கத்தாவில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தார். இதுவே கல்கத்தாவின் நிறுவன நாளாகக் கருதப்படுகிறது. ▶2006 – புளூட்டோ ஒரு கோள் அல்ல எனவும், அது குறுங்கோள் எனவும் உலகளாவிய வானியல் ஒன்றியம் அறிவித்தது.
Sorry, no posts matched your criteria.