news

News August 24, 2024

மத்திய நிலக்கரி அமைச்சக நிறுவனத்தில் வேலை

image

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் COAL MINES PROVIDENT FUND நிறுவனத்தில் காலியாகவுள்ள வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் பணி நடக்கிறது. ஜூனியர் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் (10 இடங்கள்), சோசியல் செக்யூரிட்டி உதவியாளர் (126) பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இதற்கு CMPFO ஆள்சேர்ப்பு இணையதளத்தின் https://cmpfo.gov.in/இல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை பகிரலாமே.

News August 24, 2024

விஜய் வருகை யாருடைய வாக்கு வங்கிக்கு ஆபத்து?

image

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ADMK-வின் வாக்குவங்கி கரைந்து வருகிறது. அந்த DMK எதிர்ப்பு வாக்குகளைத் தான் BJP, NTK, AMMK கட்சிகள் பெற்று வருகின்றன. இந்த சூழலில் விஜய்யின் வரவு, ADMK வாக்குகளை மற்ற கட்சிகளுக்கு செல்லவிடாமல் தடுக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் என தமிழகத்தின் களமறிந்து விஜய் அரசியல் பேசுவதும் அவருக்கு சாதகமாக அமையும் என கருதப்படுகிறது.

News August 24, 2024

செங்கோட்டை – மைசூர் சிறப்பு ரயில்கள்

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கர்நாடகாவின் மைசூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மைசூரில் இருந்து செப் 4, 7ஆம் தேதிகளில் இரவு 9.20 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மாலை 4.50க்கு செங்கோட்டை வந்து சேரும். செங்கோட்டையில் இருந்து செப். 5,8 தேதிகளில் இரவு 7.45 புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 2.20 மணிக்கு மைசூர் சென்றடையும். இந்த ரயில்கள் தென் மாவட்டங்களில் நின்று செல்லும்.

News August 24, 2024

சனி தோஷத்தை நீக்கும் ஆதியந்த பிரபு

image

சங்கர நாராயணர் வடிவம்போல பிள்ளையாரும் அனுமரும் இணைந்து ஆதியந்த பிரபுவாக காட்சித்தரும் திருத்தலம் சேலம் கந்தகிரி திருக்கோயிலாகும். சனியின் வக்கிர பார்வையை வலுவிழக்கச் செய்து, பக்தரை காக்கும் இரு தெய்வங்களும் ஒன்றாக அருளும் இக்கோயிலுக்கு சனிக்கிழமை விரதமிருந்துச் சென்று, வெண்ணை காப்பு செய்து, நெய் விளக்கேற்றி, துளசியால் அர்ச்சித்து, மிளகு வடை படைத்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

News August 24, 2024

தினமும் 50 பேர் பாதிப்பு.. மக்களே உஷார்!

image

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் தினமும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தாண்டில் இதுவரை 7,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை, கோவை, மதுரை, நெல்லை மாவட்டங்களில் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. இதனால், காய்ச்சல், உடல் சோர்வு இருந்தால் உடனடியாக டாக்டரின் பரிந்துரைப்படி சிகிச்சை பெற சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News August 24, 2024

சைக்கோ ஆட்சியில் ஆந்திரா பாதிப்பு.. ஜெகன் மீது CBN தாக்கு

image

YSR காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை சைக்கோ என்று ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆந்திரா கடந்த 5 ஆண்டுகளாக சைக்கோ தலைவர் ஆட்சியில் கடும் பாதிப்பை சந்தித்ததாகக் கூறினார். அப்படியிருந்தும் ஜெகன் மீண்டும் முதல்வராக ஆசைப்படுகிறார் என்றும் தெரிவித்தார். ஆந்திர நலனுக்காக ஜென்ம பூமி 2.0 திட்டம் 2025 ஜன.இல் தொடங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

News August 24, 2024

CISF படைப்பிரிவில் 1,130 கான்ஸ்டபிள் வேலை

image

CISF படைப்பிரிவில் 1,130 கான்ஸ்டபிள் பயர்மேன் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு வருகிற 30ஆம் தேதி முதல் CISF இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அந்த வேலைக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாகும். 1,130 இடங்களில் பொதுப் பிரிவினருக்கு 466, OBC 236, எஸ்சி 161, எஸ்டி 153 , EWS பிரிவினருக்கு 114 இடங்கள் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News August 24, 2024

மேட் இன் இந்தியா பொருள்: உக்ரேன் வாங்கத் தயார்

image

மேட் இன் இந்தியா பொருள்களை வாங்க உக்ரேன் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின் பேட்டியளித்த அவர், உக்ரேன் நிறுவனங்களை இந்தியாவில் அமைக்கவும், இந்திய நிறுவனங்களை உக்ரேனில் அனுமதிக்கவும் தயார் என்றார். உக்ரேனுக்கு மோடி வந்தது மகிழ்ச்சி என்று கூறிய அவர், மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு விரைவில் வர இருப்பதாகவும் அறிவித்தார்.

News August 24, 2024

ஆட்டோ வாங்க பெண்களுக்கு ₹1 லட்சம் மானியம்

image

1,000 பெண்கள், திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்க ₹1 லட்சம் மானியம் வழங்கும் அரசாணையை தமிழக அரசு அடுத்த வாரம் வெளியிடவுள்ளது. சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில், இந்தத் திட்டத்தை கடந்த 2022ஆம் ஆண்டு CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, கடந்த 2023இல் 500 பேருக்கு ₹1 லட்சம் மானியம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2024இல் 1,000 பெண்கள், திருநங்கைகளுக்கு இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.

News August 24, 2024

கிங் மேக்கர் ஆவாரா விஜய்?

image

2026 MLA தேர்தலில் தவெக தனித்து போட்டியிட்டு 10% வாக்குகளை பெற்றாலே விஜய் கிங் மேக்கராக முடியும். ADMK, DMK தவிர வேறு கட்சிகள் கூட்டணி இல்லாமல் இவ்வளவு வாக்குகளை பெற்றதில்லை. 2006 தேர்தலில் மைனாரிட்டி திமுக அரசு அமைய, DMDK பிரித்த 8.5% வாக்குகளே காரணம். அதனால் தான் அடுத்தடுத்த தேர்தல்களில் அவரை கூட்டணியில் சேர்க்க இரு கட்சிகளும் முயன்றன. 10% வாக்குகள் என்பது தமிழக அரசியல் போக்கை மாற்றும் நம்பர்.

error: Content is protected !!