news

News August 24, 2024

தவானின் ஓய்வுக்கு என்ன காரணம்? பரபர பின்னணி

image

2010இல் ஆஸி.க்கு எதிராக அறிமுகமான தவான், ரோஹித்துடன் சேர்ந்து பல போட்டிகளில் ஓபனிங் விளையாடியுள்ளார். சச்சின்-கங்குலி ஜோடிக்கு பிறகு, இந்த ஜோடியே அதிக ரன் (5148 ரன்) குவித்துள்ளது. 2015 உலக கோப்பையில் 412, 2017 சாம்பியன்ஸ் கோப்பையில் 338 ரன்களை தவான் சேர்த்துள்ளார். கில்லின் விஸ்வரூபத்தால் ஓரங்கட்டப்பட்ட தவானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவே அவரின் ஓய்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

News August 24, 2024

மத்திய அரசு திட்டத்திற்கு நிதிஷ் திடீர் எதிர்ப்பு

image

சிராக் பஸ்வான், சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து, வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவுக்கு பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதலில் இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அவர், தற்போது முஸ்லிம்கள் இதற்கு அச்சம் தெரிவிப்பதாக கூறி, நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். பிஹாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதும், அம்மாநில மக்கள் தொகையில் 18% பேர் முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

News August 24, 2024

ஆண்களை விட பெண்கள் ஆயுள் கெட்டி

image

ஆண்களை விட பெண்களின் ஆயுள்காலம் கடந்த 30 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 1990-94இல் 59.4ஆகவும், பெண்கள் ஆயுள்காலம் 60.4ஆகவும் இருந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் ஆண்கள் ஆயுள்காலம் 10 ஆண்டுகள் அதிகரித்து 69.4ஆகவும், பெண்கள் ஆயுள்காலம் 12 ஆண்டுகள் அதிகரித்து 72.2ஆகவும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? கீழே பதிவிடுங்க

News August 24, 2024

நேபாள பேருந்து விபத்து: பலி 41ஆக உயர்வு

image

நேபாளத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து நேபாளத்துக்கு பேருந்தில் ஆன்மிக சுற்றுலாவாக 43 பேர் சென்றிருந்தனர். காத்மாண்டு நோக்கி பேருந்து சென்றபோது, மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நேற்று 27 பேர் பலியான நிலையில் இன்று மேலும் 14 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.

News August 24, 2024

தனிநபரை அவமதிப்பது SC, ST சாதியை அவமதிப்பதாகாது

image

தனிநபரை அவமதிப்பது SC, ST சாதியையே அவமதித்தது ஆகாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எஸ்சி பிரிவைச் சேர்ந்த கேரள சிபிஎம் எம்எல்ஏ ஸ்ரீநிஜன் அளித்த புகாரில் ஆன்லைன் டிவி எடிட்டர் மீது வழக்குப்பதியப்பட்டது. இதில் அவர் தொடுத்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரையே எடிட்டர் விமர்சித்துள்ளார். இதை வைத்து எஸ்சி எஸ்டி சாதியை விமர்சித்ததாகக் கருத முடியாது எனக் கூறி முன்ஜாமின் அளித்துள்ளது.

News August 24, 2024

3 நாள்கள் தொடர் விடுமுறை

image

தமிழகத்தில் இன்று முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை தினமாகும். சனி, ஞாயிறு வார விடுமுறை மற்றும் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதால் அன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் குவிய தொடங்கியுள்ளது. இன்று காலை குமரியில் சூரிய உதயத்தைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீங்க எங்க போறீங்க? கமெண்ட் பண்ணுங்க.

News August 24, 2024

₹40 லட்சத்துக்கு ஏலம் போன கோலி ஜெர்ஸி

image

கிரிக்கெட் உலகின் ‘கிங்’ விராட் கோலியின் ஜெர்ஸி ₹40 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்கு உதவ இந்திய அணியின் வீரர் KL ராகுல் & அதியா ஷெட்டி தம்பதி ‘கிரிக்கெட் ஃபார் சேரிட்டி’ ஏலம் மூலம் நிதி திரட்டி வருகின்றனர். இந்த ஏலத்தில், டிராவிட், தோனி & ரோஹித் ஷர்மாவின் பேட் & ஜெர்ஸி போன்ற உயர்மதிப்பு கொண்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ₹1.9 கோடி திரட்டப்பட்டுள்ளது.

News August 24, 2024

சுங்கச்சாவடியில் வாகன நெரிசலா? NHAI உத்தரவு வாபஸ்

image

சுங்கச்சாவடியில் வாகன நெரிசலை சீராக்குவது தொடர்பான உத்தரவை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) வாபஸ் பெற்றுள்ளது. 100 மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நின்று நெரிசல் நிலவினால், போக்குவரத்தை சீராக்க கட்டணம் வசூலிக்காமல் உடனே அனுமதிக்கலாம் என 2021ஆம் ஆண்டில் NHAI அறிவித்திருந்தது. இது அமலான நிலையில், சுங்கச்சாவடி கட்டண விதிகள் அதை அனுமதிக்கவில்லை எனக் கூறி NHAI தற்போது வாபஸ் பெற்றுள்ளது.

News August 24, 2024

AIR INDIA-க்கு ₹98 லட்சம் அபராதம்.. ஏன் தெரியுமா?

image

ஏர் இந்தியா நிறுவனம், 2 அதிகாரிகளுக்கு டிஜிசிஏ ₹98 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மும்பையில் இருந்து சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு இயக்கிய விமானத்தை விமானியுடன் பயிற்சி விமானியை வைத்து இயக்கியதாகக் கூறி, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 முதல் ஏர் இந்தியாவுக்கு விதிக்கப்படும் 8ஆவது அபராதம் இதுவாகும். இதனுடன் சேர்த்து ₹4.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2024

தனியாரிடமிருந்து மின் மீட்டர் வாங்கி கொள்ளலாம்

image

தனியார் நிறுவனங்களிடம் இருந்து நுகர்வோர் நேரடியாக மீட்டர் வாங்க, மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது. புதிய மின் இணைப்பு வழங்கும்போது, மின் வாரியமே மீட்டர்களை பொருத்துகிறது. எனினும், கொள்முதல் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் மின் இணைப்பு வழங்க தாமதம் ஏற்படுவதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நிறுவனங்களில் மீட்டர்கள் வாங்கலாம் என்ற விவரம், EB இணையதளத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!