news

News September 22, 2024

உடலில் உள்ள தேமல் நீங்க…. சித்த மருத்துவம்

image

தேமல் “டீனியா வெர்சி கோலர்” என்னும் வகையைச் சார்ந்தது. இவ்வகை தேமல் உடலில் பெரும்பாலும் கழுத்து, முதுகு, வயிறு ,கை போன்ற பகுதிகளில் அதிகமாக காணப்படும். சித்த மருத்துவத்தில்; முதலில் கந்தக ரசாயனம்-250-500 மிகி காலை, இரவு என இருவேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும். பின்னர் சீமை அகத்தி களிம்பு- தேமல் உள்ள பகுதிகளில் பூச வேண்டும். இப்படி செய்து வந்தால் தேமல் குணமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

News September 22, 2024

6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: RMC

image

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், இதனால் தமிழகத்தில் இன்று முதல் 24ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

News September 22, 2024

மீண்டும் மோதும் கமலா- டிரம்ப்?

image

டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். கடந்த 10-ந் தேதி நடைபெற்ற விவாதத்தில் டிரம்பை விட கமலா சிறப்பாக செயல்பட்டதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் விவாதம் நடத்த அழைத்துள்ளார்.

News September 22, 2024

செப்டம்பர் 22: வரலாற்றில் இன்று

image

1931-தமிழக எழுத்தாளர் அசோகமித்திரன் பிறந்தநாள்
1965- இந்தியா- பாக்., இடையில் காஷ்மீர் தொடர்பாக நடைபெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.
1995 – நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை: யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 2014 – நாசாவின் மாவென் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.

News September 22, 2024

இந்த மாவட்டங்களில் காலை 7 மணிவரை மழை

image

இன்று காலை 7 மணிவரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்ற விவரத்தை சென்னை மண்டல வானிலை மையம் (RMC) வெளியிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம், தி. மலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலோடு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் RMC குறிப்பிட்டுள்ளது.

News September 22, 2024

Chess Olympiad: தங்கத்தை உறுதி செய்த இந்தியா

image

45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவின் 10ஆவது சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றது. USAக்கு எதிராக களமிறங்க இந்திய அணியில் பிரக்ஞானந்தா சீன வீரரிடம் தோல்வியடைய, குகேஷ், அர்ஜூன் வெற்றி பெற்றனர். விதித் போட்டியை சமன் செய்தனர். இதன் மூலம் 2.5 – 1.5 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வென்றது. ஒரு சுற்று மீதமுள்ள நிலையில் நாளை டிரா செய்தால் இந்தியா தங்கத்தை உறுதி செய்யும்.

News September 22, 2024

இந்தியாவுடனான உறவு வலுவாக உள்ளது: ஜோ பைடன்

image

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது. இருவரும் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதெல்லாம், புதிய விவகாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கண்டறிகிறோம். இன்றும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை என பதிவிட்டுள்ளார்.

News September 22, 2024

வதந்திகளை பரப்பினால் நடவடிக்கை – அமைச்சர்

image

பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவில்களுக்கு தேவையான நெய், ஆவின் நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யப்படவேண்டுமென ஆணையரால் 2021-ம் ஆண்டே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்ற அவர், பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜனதாவை சேர்ந்த வினோஜ், செல்வக்குமார் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

News September 22, 2024

இலங்கையில் நாளை பொது விடுமுறை அறிவிப்பு

image

இலங்கையில் நாளை செப்டம்பர் 23-ம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், மாலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. புதிய அதிபர் யார் என நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும் என்பதால் தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கம் விசேஷ பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

News September 22, 2024

ஜோசப் ஸ்டாலினின் பொன்மொழிகள்

image

*வாக்காளர்கள் எதையுமே தீர்மானிப்பதில்லை. வாக்கு எண்ணுபவர்களே அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள்.
*துப்பாக்கியை விட யோசனைகள் சக்தி வாய்ந்தவை. நாம் நம் எதிரிகளை துப்பாக்கிகளை வைத்திருக்க விடமாட்டோம், நாம் ஏன் அவர்கள் யோசனைகளை வைத்திருக்க விடவேண்டும்.
*முட்டாளாக இருக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் சிலர் அந்தச் சலுகையை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

error: Content is protected !!