India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான JIO, அதன் வாடிக்கையாளருக்கு பல மலிவு திட்டங்களை நடைமுறையில் வைத்துள்ளது. அதில் ₹198 குறைந்த விலை புதிய திட்டமும் ஒன்று. இத்திட்டம் 14 நாள்கள் வேலிடிட்டி கொண்டதாகும். இதில் 5ஜி சேவை எனில் அன்லிமிடெட் டேட்டாவும், 4ஜி சேவை எனில் தினமும் 2ஜிபி டேட்டாவும் வழங்குகிறது. இதுதவிர, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்பும் JIO அளிக்கிறது.
தவெக கொடியை வெளியிட்ட விஜய்க்கு, பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இனி ஒவ்வொரு அடியையும் விஜய் யோசித்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், பல சர்ச்சைகள், சவால்களை சந்திக்க வேண்டியது தான் அரசியல் என்றும் கூறினார். மேலும், தங்கள் வீட்டுக்கு விஜய் வருவது புதிதல்ல என்று கூறிய அவர், மகன் விஜய பிரபாகரனுக்கு அவர் நல்ல நண்பர் எனவும் நட்பு பாராட்டினார்.
அணுகுண்டு சோதனையில் உலகமே இந்தியாவை எதிர்த்தபோது, அரணாக நின்ற ஒரே நாடு ரஷ்யா. எனவேதான், உக்ரைன் போரில் ரஷ்யாவை இந்தியா எதிர்க்கவில்லை. ஆனாலும், போரை நிறுத்தும்படி புடினுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும், ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி உக்ரைனுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. உக்ரைன் அதிபருக்கு மோடி கூறுவது இதுதான், “ரஷ்யா எங்கள் நண்பன். அதற்காக உங்களை விட்டுவிட மாட்டோம் ஜெலன்ஸ்கி”.
ஆதார் எண் தெரிந்தால், அதை வைத்து வங்கிக் கணக்கை கண்காணிக்க முடியுமா? ஹேக் செய்ய முடியுமா? என சந்தேகம் எழுவதுண்டு. இதுகுறித்து தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அளித்த விளக்கத்தை காணலாம். அப்படி வங்கி கணக்கை கண்காணிக்க, ஹேக் செய்ய முடியாது என்று UIDAI கூறியுள்ளது. வங்கிகள் அளிக்கும் ஓடிபி, பின்னை பிறரிடம் பகிராதவரை வங்கிக் கணக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
முத்தமிழ் முருகன் மாநாடு ஓட்டுக்காக நடத்தப்படும் ஒரு உத்திதான் என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு CM நேரில் செல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், பெயரளவுக்கு மாநாடு நடத்திவிட்டு தங்கள் நிலைப்பாட்டில் அப்படியே தான் இருப்போம் என திமுக அரசு உள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும், சிறுபான்மையினர் மாநாடு என்றால், அவர் நேரில் செல்லாமல் இருந்திருப்பாரா என்றும் சாடினார்.
காதல் தம்பதியர் நயன்தாரா & விக்னேஷ் சிவன் பசுமை நிறைந்த பூங்காவொன்றில் நடந்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்களது 2 குழந்தைகளுடன் வெளிநாட்டு சுற்று பயணத்தின்போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘Mine’ என்ற கேப்ஷனுடன் நயன் பதிவிட்டுள்ளார். கண்களில் காதலொழுக விக்னேஷ் சிவனை அவர் பார்க்கும் அந்தப் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, லைக்ஸ்களை அள்ளியுள்ளது.
பாஜகவுடன் அணுக்கமாக இருக்கும் OPS மீது அவரது மூத்த மகன் ரவீந்திரநாத் (OPR) கடும் அதிருப்தியில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் இருந்து முழுமையாக விலக்கப்பட்டு, அரசியல் எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் OPR, விஜய்யின் கட்சியில் இணைய காய்களை நகர்த்தி வருகிறாராம். OPS பாஜக தலைமையிடம் பேசி OPR-க்கு மத்திய அமைச்சர் பதவி, ராஜ்ய சபா சீட் வாங்கி தராததே இதற்கு காரணமெனக் கூறப்படுகிறது.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய்க்கு, உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த டெல்லி ஐகோர்ட்டில் சிபிஐ அனுமதி கேட்டிருந்தது. அப்போது, “இந்த சோதனைக்கு நீங்கள் சம்மதித்து ஏன்? என நீதிபதி கேட்டார். இதற்கு கதறி அழுத சஞ்சய் ராய், “நான் நிரபராதி. சிபிஐ என்னை எப்படியாவது சிக்க வைக்க நினைக்கிறது. உடனே என்னை சோதனை செய்யுங்கள். அப்போதாவது உண்மை தெரியும்” எனக் கூறினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையதாகத் தேடப்படும் ரவுடி மொட்டை கிருஷ்ணணுக்கு <<13898071>>நெல்சன் <<>>மனைவி மோனிஷா தொலைபேசியில் பேசியது தெரிந்ததால் அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தியது. பிறகு அவருக்கு தொடர்பில்லை என போலீஸ் தெரிவித்தது. இருப்பினும், அவரின் CELL அழைப்புகள், வங்கி பணப் பரிவர்த்தனை விவரத்தை கைப்பற்றி போலீசார் ரகசியமாக ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மஞ்சு வாரியரிடம் ₹5.75 கோடி இழப்பீடு கேட்டு Footage பட நடிகை ஷீத்தல் தம்பி நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மூவி பக்கெட் நிறுவனம் சார்பில் அவர் தயாரித்த Footage படத்தின் படப்பிடிப்பை பாதுகாப்பின்றி காட்டுக்குள் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய ஷீத்தல், இதனால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைப் பெற பல லட்சம் செலவானதாகக் கூறியுள்ளார். இப்படத்தில் நடிக்க ₹1.8 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.