India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்ஸ்) இருப்பதாக ISRO தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஏலியன்ஸ் உள்ளனவா? என ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் சோம்நாத் அளித்துள்ள பேட்டியில், பிரபஞ்சத்தில் ஏலியன்ஸ் நிச்சயம் இருப்பதாகவும், அவர்கள் பூமிக்கு வந்து சென்றிருக்க வாய்ப்பு உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார். ஏலியன்ஸ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்க.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 70 ஈரான் பக்தர்களை ஏற்றிக்கொண்டு இன்று பஞ்சாப் மாகாணத்தை நோக்கி சென்ற பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். அதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில், குழந்தைகள், பெண்கள் என 23 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது படங்கள் பிரச்னைகள் இன்றி வெளியாக வேண்டும் என்பதற்காக ரஜினி, திமுகவை புகழ்வதாக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக, பாஜக இடையே ரகசிய கூட்டணி உருவாகியுள்ளதாகவும், இரண்டு கட்சிகளும் அரசியல் ரீதியாக மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். நேற்று நடைபெற்ற ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் முதல்வரை, ரஜினி பாராட்டி பேசினார்.
‘G.O.A.T’ படத்தின் ஸ்பெஷல் சாங் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், செப்.5ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளோடு திரைக்கு வரவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், விஜய், த்ரிஷா இணைந்து நடனமாடிய சாங் சர்ப்ரைஸாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
விடுமுறை என்றாலே ரிலாக்ஸ் செய்வது தான். பிடித்த படங்களை பார்ப்பது; பிடித்த உணவுகளை ஒரு புடி புடிப்பது என்று பலரும் இருப்பார்கள். அப்படி ஹெவியான உணவுகளை எடுக்கும்போது வயிறு மந்தமாகிவிடும். எனவே, விடுமுறை தினத்தின் மாலை நேரங்களில் 3 கப் பைன் ஆப்பிள், சிறிது எலுமிச்சை சாறு, 3 ஸ்பூன் தேன், ஒரு இளநீர், 6 ஐஸ் கட்டிகளை மிக்சியில் அடித்து சூப்பரான ஸ்மூதியை தயார் செய்து குடிக்கலாம். வயிறு லேசாகிவிடும்.
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘படைத்தலைவன்’ படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. ஒரு யானைக்கும், கதாநாயகனுக்கும் இடையே உள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அன்பு இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
பொறியியல் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தற்போது கட்டக்கூடிய தேர்வு கட்டணமே இனி நடைமுறையில் இருக்கும் .தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதால், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டும், வரும் ஆண்டும், இனி வரக்கூடிய நாட்களிலும் தேர்வு கட்டணம் அதிகரிக்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை விட்டு 17 ஆண்டுகளில் 1 கோடி பேர் வெளியேறி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பல்ஸ் கன்சல்டன்ட் என்ற அமைப்பின் ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அதில் நல்ல வேலை தேடி 1 கோடி பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டதாகவும், இதில் பிஎம்எல்-என் கட்சி ஆட்சிகாலமான 2015-18இல் அதிகம் பேர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியை, அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல்முறையாக வங்கதேசம் வீழ்த்தியது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்டில், முதல் இன்னிங்ஸில் PAK 448/6 டிக்ளர், BAN 565 ரன்களும் எடுத்தது. 2ஆவது இன்னிங்ஸில் PAK, 146 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், 30 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய BAN எளிதில் வெற்றிபெற்றது. 191 ரன்கள் குவித்த BAN அணியின் முஷ்பிகுர் ரஹீம், ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மறைந்த விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா, தேமுதிக தலைமை அலுவலகம் இனி “கேப்டன் ஆலயம்” என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், கட்சிக்கு என்று புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது என்றும் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார்.
Sorry, no posts matched your criteria.