India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அணி இதுவரை 580 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 179 போட்டிகளில் வெற்றியும், 178 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக தோல்விகளை விட வெற்றிகளை இந்திய அணி அதிகம் கொண்டுள்ளது. மேலும், 222 போட்டிகள் டிராவிலும், 1 போட்டி சமனிலும் முடிந்துள்ளன. இன்று நடந்த BAN-க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 280 ரன்கள் வித்தியாசத்தில் IND வெற்றி பெற்றது.
பெங்களூருவில் பெண் ஒருவர் 30 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேபாளத்தைச் சேர்ந்த மகாலட்சுமி (29), கணவரைப் பிரிந்து பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவர் வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே, பூட்டியிருந்த கதவை உடைத்து பார்த்தபோது, ஃபிரிட்ஜில் 30 துண்டுகளாக அவரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நகைச்சுவை உணர்வுடன் இனிமையாகப் பேசி, பிறர் மனதைக் கவர்ந்துவிடுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உடல் வலிமை, அறிவுக்கூர்மை, செயல் திறமை, மனோதிடம் கொண்டிருப்பீர்கள். நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் அதே நேரம் தவறான வழியில் அதனை ஈட்ட நினைக்க மாட்டீர்கள் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமக்ரா சிக்ஷா கல்வி திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டது, நீட் விலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. தனது 2ஆம் கட்ட வழித்தடத்தில் 3 பெட்டிகளை கொண்ட 36 ரயில்களை இயக்க CMRL முடிவெடுத்துள்ளது. அதற்காக Alstom நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, ₹1,215.92 கோடி வழங்கியிருந்தது. இந்நிலையில், ஒப்பந்தத்தின்படி உற்பத்தி செய்யப்பட்ட முதல் ரயில், சோதனை தடத்திற்கு இன்று மாற்றப்பட்டது.
USA-வில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் பலியாகினர். அலபாமாவின் பர்மிங்காமில் ஹோட்டலுக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மத்திய அரசின் வருமான வரித்துறையில் நிரப்பப்படவுள்ள உணவுப் பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. பணியில் சேர தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் இன்றே விண்ணப்பியுங்கள். கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18-25. பணி இடம்: தமிழகம் & புதுவை. சம்பளம்: ₹56,000. தேர்வு நடைபெறும் நாள்: அக்.6, 2024. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
இன்று 10 மணிக்கு <<14164170>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) 85 கி.மீ 2) கிரீன்லாந்து 3) Anno Domini & Before Christ 4) சியாங்சம் & சியாங்சன் 5) அக்ரிடோதெரஸ் டிரிஸ்டிஸ் 6) எரடோஸ்தீனஸ் 7) சோடியம் கார்பனேட் இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
தமிழகத்தில் 3 நாள்களுக்கு இடி -மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. இன்று முதல் 24ம் தேதி வரை வடதமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது. வருகிற 25 முதல் 28ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது. SHARE IT.
BAN எதிரான டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் அஷ்வின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன் விவரம்: ➤உலகிலேயே அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர். ➤இந்திய அணிக்காக 2ஆவது அதிகபட்சமாக 522* விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர். ➤அதிகமுறை FIFER (5wkt) வீழ்த்திய இந்திய வீரர். ➤37 முறை FIFER எடுத்து, 20 முறை 50+ ரன்கள் எடுத்த ஒரே வீரர். ➤அதிக முறை ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்.
Sorry, no posts matched your criteria.