India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
US ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் இன்று தொடங்கி, செப். 8 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ₹629 கோடி. இது கடந்த ஆண்டை விட 15% அதிகம். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ₹30 கோடியும், இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடிக்கு ₹6.25 கோடியும் அளிக்கப்படும். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்கள் 2,5 ஒளிபரப்புகின்றன.
தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் வருகிற 1ஆம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் உயருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பரில் இக்கட்டணம் உயர்த்தப்படும். அதன்படி, கடந்த ஏப்ரலில் அமலாக இருந்த கட்டண உயர்வு தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஜூனில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து வருகிற செப்.1இல் 5%-7% வரை கட்டணம் உயருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் ₹5 முதல் ₹150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்
தமிழ்நாட்டில் ஆக. 31 முதல் செப். 1 வரையில் F4 கார் பந்தயம் நடைபெறவிருப்பது அறிந்ததே. ஆனால், உலகின் முதல் வாகனப் பந்தயம் சுவாரஸ்யமான தகவல் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பாரிஸில் ஜூலை 22, 1894 இல், ‘குதிரை இல்லா வாகனப் பந்தயம்’ என்ற பெயரில் 79 மைல் தூரம் நடந்தது. 21 கார்கள் (பெட்ரோல் & நீராவி) பங்கேற்ற இப்பந்தயத்தில் வென்ற பியூஜியோட்டுக்கு 5,000 பிராங்க் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.
தலித் CM ஆக முடியாது என வேட்கையிலோ, இயலாமையிலோ கூறவில்லை என திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். இன்றைக்கு சாதிய கட்டமைப்பு வலுவாக உள்ளதால் அப்படி கூறியதாக தெரிவித்த அவர், அந்த கட்டமைப்பை தகர்க்கும் சூழல் இன்னும் கனியவில்லை. அதை தகர்க்க தயாராக வேண்டும் என்று ஊக்கம் அளித்தார். மேலும், SC, ST வகுப்பைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக முடியும். ஆனால், பிரதமராக முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
பூவுலகின் நன்மைக்காக, பெருகிவந்த தீயவர்களின் கொட்டத்தை அடக்கப் பிறந்ததே கண்ணனின் அவதாரம். திருமாலின் 9ஆவது அவதாரமான கிருஷ்ணர், ஆவணி அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தின் நள்ளிரவில் இருட்டைக் கிழிக்க வந்த சுடராய் அவதரித்தார். அத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான இன்று திருச்சி வேணுகோபால கிருஷ்ணன் திருக்கோயிலுக்கு சென்று, இறைவனை தரிசிப்போருக்கு அனைத்து யோகங்களும் கிட்டும்.
விஜய் கட்சியின் மாநாட்டுக்கு தன்னை அழைக்க மாட்டார், அழைக்கவும் கூடாது என சீமான் கூறியுள்ளார். நாதக எப்போதும் தனித்து போட்டியிட தான் முடிவெடுத்துள்ளதாக திட்டவட்டமாகக் கூறிய அவர், தேர்தல் காலத்தில் தம்பிகள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பொறுத்து யோசிக்கலாம் என்றார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 50 தொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வு செய்துவிட்டதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது T20 போட்டியில், மே.இ.தீவுகள் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் விளையாடிய WI, 179/6 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 180 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய SA, 19.4 ஓவர்களில் SA 149 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. ஆக.24இல் நடந்த முதல் போட்டியில் வென்ற WI, 2ஆவது போட்டியிலும் வெற்றி பெற்று T20 தொடரை கைப்பற்றியது. 3ஆவது போட்டி ஆக.28இல் நடக்கிறது.
அரசுப் பள்ளிகளில் செய்ய வேண்டிய தற்காலிக பராமரிப்பு பணி குறித்த விவரங்களை சமர்பிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளி கட்டடங்கள் 100% உறுதியுடன் உள்ளதா என்பதை ஆராய்வதுடன், பராமரிப்புப் பணி தேவைப்படும் வகுப்பறை, கட்டடங்களின் விவரங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலை 2 வாரத்தில் அனுப்பவும், அனைத்துப் பள்ளிகளுக்கும் தொடக்கக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க, CM ஸ்டாலின் நாளை USA செல்கிறார். நாளை இரவு சென்னையிலிருந்து புறப்படும் அவர், அங்கு 17 நாள்கள் USAவில் தங்குகிறார். ஆக.28இல் San Franciscoவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் அவர், ஆக.31இல் புலம்பெயர் தமிழர்களுடன் உரையாடுகிறார். செப்.2-12 வரை சிகாகோவில் பல்வேறு முதலீட்டாளர்களை சந்திக்கும் அவர், செப்.12இல் அங்கிருந்து தமிழகம் திரும்புகிறார்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட, பகவான் பூலோகத்தில் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் பக்தர்கள் மகிழ்வர். இன்று உங்கள் குழந்தைக்கு வேடமிட்டு எடுக்கும் Photoக்களை way2tamilusers@way2news.com என்ற இ-மெயில் முகவரிக்கு இன்று மதியம் 3 மணிக்குள் அனுப்புங்கள்.
Sorry, no posts matched your criteria.