news

News September 23, 2024

கொடூரம்: சிறுமியை வன்புணர்வு செய்த சிறுவர்கள்

image

உத்தரபிரதேசத்தில் 7,8 வயதுள்ள இரண்டு சிறுவர்கள், 7 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிறுமி குளித்துக் கொண்டிருந்ததை பார்த்த சிறுவர்கள், தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி உடல் சோர்வாக காணப்பட்டதைக் கண்ட பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, உண்மை தெரியவந்துள்ளது. 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

News September 22, 2024

முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

image

பேராயர் <<14169127>>எஸ்றா சற்குணம்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், சற்குணம் மறைவு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மாறாத அன்போடு தன்னுடன் பழகியவர் என்றும், அவருடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட தருணங்கள் நெஞ்சில் நிழலாடுவதாகவும் நினைவுகூர்ந்தார். அவரது மறைவு சமூகநீதியின் பால் அக்கறை கொண்ட அனைவருக்கும் பேரிழப்பு என்றும் உருகியுள்ளார்.

News September 22, 2024

லட்டு விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

image

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News September 22, 2024

இலங்கை அதிபரால் இந்தியாவிற்கு சிக்கல்?

image

இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுரா குமார திசநாயகேவின், JVP கட்சி கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டது. 1980-களில் விடுதலை புலிகள் விவகாரத்தில், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடுவதாக கடுமையாக எதிர்த்தது. இடதுசாரியான JVP, கொள்கை அளவில் சீன கம்யூனிச அரசுக்கு நெருக்கமாக உள்ளது. அதானியின் ஆற்றல் திட்டப் பணிகளை ரத்து செய்வோம் எனக் கூறியவர் தான் அனுரா.

News September 22, 2024

TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு.. புதிய மாற்றம்

image

TNPSC குரூப்-1, குரூப்-2 தேர்வுகள் முதல்நிலை (Prelims), முதன்மை (Mains) ஆகிய 2 நிலைகளில் நடத்தப்படுகின்றன. இதில், முதன்மைத் தேர்வுகளின் விடைத்தாள்கள் சரியாக மதிப்பீடு செய்யப்படுவதில்லை என புகார் எழுகிறது. இதனால், புதிய மென்பொருள் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்ய TNPSC முடிவு செய்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குரூப்-2 தேர்வில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

News September 22, 2024

தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து

image

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்த்ததைக் காண்பது மனதிற்கு இதமாக இருக்கிறது எனவும், சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடங்கி, 45வது புடாபெஸ்ட் செஸ் ஒலிம்பியாட் வரை நமது வீரர்களின் வெற்றிப்பயணம் தொடர்கிறது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

News September 22, 2024

ஜெயம் ரவியுடனான நட்பு குறித்து பாடகி விளக்கம்

image

பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவியை தொடர்புபடுத்தி வெளியான கிசுகிசுக்களை நேற்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில், ரவி பேசிய வார்த்தைகளை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார் பாடகி கெனிஷா. மேலும், ‘நட்பிலும் அதீத அன்பு உண்டு, ஆனால் அதை மக்கள் மறந்துவிடுகின்றனர்’ என பதிவிட்டு தங்களுக்கு இடையே இருப்பது நட்புதான் என விளக்கம் கொடுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

News September 22, 2024

இலங்கையில் புதிய மறுமலர்ச்சி தொடங்கும்: அநுர குமார

image

இலங்கையின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அநுர குமார திசநாயகே நாளை (செப்.23) புதிய அதிபராக பதவியேற்கிறார். இந்நிலையில், தனது வெற்றியையடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வலிமை மற்றும் புதிய கண்ணோட்டத்துடன் நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி தொடங்கும் என தெரிவித்துள்ளார். மேலும், சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என அனைவரின் ஒற்றுமையே புதிய தொடக்கத்தின் அடித்தளம் என்றும் கூறியுள்ளார்.

News September 22, 2024

திருச்சபை பேராயர் எஸ்.ரா.சற்குணம் காலமானார்

image

இந்திய சுவிசேஷ திருச்சபை (ECI) பேராயர் எஸ்.ரா.சற்குணம் (86) உடல்நலக் குறைவால் காலமானார். கருணாநிதி, திருமா, வைகோ என பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக அறியப்படும் இவர், பேராயராக மட்டும் இல்லாமல் அரசியல் ஞானமிக்கவராகவும் திகழ்ந்தார். பல நேரங்களில் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான தூதுவராகவும் செயல்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இவரது பிறந்தநாளுக்கு CM ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து கூறினார்.

News September 22, 2024

திருச்சபை பேராயர் எஸ்.ரா.சற்குணம் காலமானார்

image

இந்திய சுவிசேஷ திருச்சபை (ECI) பேராயர் எஸ்.ரா.சற்குணம் (86) உடல்நலக் குறைவால் காலமானார். கருணாநிதி, திருமா, வைகோ என பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக அறியப்படும் இவர், பேராயராக மட்டும் இல்லாமல் அரசியல் ஞானமிக்கவராகவும் திகழ்ந்தார். பல நேரங்களில் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான தூதுவராகவும் செயல்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இவரது பிறந்தநாளுக்கு CM ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து கூறினார்.

error: Content is protected !!