India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்மா உணவகம் குறித்த திமுக அமைப்பு செயலாளர் <<14167794>>ஆர்.எஸ். பாரதி<<>> கருத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சி அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்ட X பக்க பதிவில், ஆர்.எஸ்.பாரதியை கார்ப்பரேட் கைக்கூலி என சாடியுள்ளார். மேலும் அம்மா உணவகம் குறித்த ஆர்.எஸ்.பாரதியின் எண்ணம் திமுகவின் அழிவுக்கான பாதை என்றும் ஜெயக்குமார் சாடியுள்ளார். அம்மா உணவகம் குறித்து உங்கள் கருத்து என்ன? கீழே பதிவிடுங்க
NHAI-இல் அறிவிக்கப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். தொழில்நுட்ப பிரிவு பொது மேனேஜர் (20 இடங்கள் ), தொழில்நுட்ப பிரிவு துணை மேலாளர் (20), மேலாளர் (20) பதவிகளில் காலியாக இருந்த 60 இடங்களுக்கு டெபுடேஷன் அடிப்படையில் விண்ணப்பம் வரவேற்கப்பட்டு இருந்தது. இதற்கு www.nhai.gov.in இணையதளத்தில் இன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
பஞ்சபூத தலங்களில் வளி தலமான ஆந்திராவின் சித்தூர் திருக்காளத்தி காளத்தீஸ்வரர் கோயில் சம்பந்தரால் பாடப் பெற்ற தலமாகும். கண்ணப்ப நாயனாருக்கு ஈசன் முக்தி அளித்த இந்த திருத்தலத்திற்கு பல்லவர் அரசு கோயில் கட்டி எழுப்பியதாக ஸ்தல புராணம் கூறுகிறது. இங்கு சென்று, வாயு லிங்கத்த்திற்கு வில்வ மாலை சாற்றி, தீபமேற்றி வணங்கி, ராகு – கேது பரிகார பூஜைகள் செய்தால் கிரக தோஷ நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் இந்திய அரசு இனியும் பொறுமை காக்க கூடாது என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை கண்டித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அன்புமணி, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை இலங்கை அரசு பறித்துக் கொண்டிருப்பதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான திருவேங்கடம் ஏற்கெனவே என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி <<14170391>>சீசிங்<<>> ராஜாவை போலீஸ் தேடி வந்தது. மேலும் இன்னொரு ரவுடி சி.டி. மணியையும் போலீஸ் நேற்று கைது செய்தது. இந்த சூழ்நிலையில் நீலாங்கரை அருகே சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் <<14170391>>சீசிங் <<>>ராஜாவை போலீஸ் நேற்று கைது செய்து விசாரணைக்கு அழைத்து வந்தது. நீலாங்கரை அருகே வந்தபோது மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து போலீசை சீசிங் ராஜா சுட்டதாகவும், இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக நடத்திய என்கவுன்ட்டரில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சீசிங் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி சீசிங் ராஜா, போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். ஆந்திராவில் நேற்று அவரை தனிப்படை போலீஸ் கைது செய்தது. இதையடுத்து விசாரணைக்கு அழைத்து வந்தபோது, அவர்களை சீசிங் ராஜா தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியானதாக கூறப்படுகிறது.
நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினருடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பூ என்று பொருள்படும் Pushp என்ற வார்த்தைக்கு புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், ”P-முன்னேறும் பாரதம்: U-தடுக்க முடியா பாரதம்: S-ஆன்மிக பாரதம்: H-மனிதநேயமே முதன்மை என்ற கோட்பாடு: P-வளம் மிக்க இந்தியா; ஆகியவற்றை குறிக்கும். Pushp-ன் இந்த 5 இதழ்களும் வளமான பாரத்தை உருவாக்கும்” என தெரிவித்தார்.
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் ’OG’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘They Call Him OG’ என்ற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். இதை அப்படத்தின் இசையமைப்பாளர் தமன் சிம்பு, சுஜித் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பகிர்ந்துள்ளார். பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, வில்லனாகவும் நடிக்கின்றனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி பொம்மை அரசு இத்தாலிய சோசலிசக் குடியரசு உருவானது.
1966 – நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.
1973 – நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெருடா இறந்த தினம்
1983 – கல்ஃப் ஏர் விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
2004 – எயிட்டியில் சூறாவளி, வெள்ளம் காரணமாக 3,000 பேர் உயிரிழந்தனர்.
Sorry, no posts matched your criteria.