India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 14 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், 1000க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் ஊழியர்கள் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அடுத்தடுத்து அரசியலில் திருமா புயலை கிளப்பினார். அமெரிக்காவில் CM ஸ்டாலின் இருந்தபோதுதான் இவை அனைத்தும் நடந்தன. ஆனால் அமெரிக்காவில் இருந்து CM திரும்பியபிறகு நேரில் சென்று அவரை திருமா சந்தித்தார். அதன்பிறகு சைலண்ட் ஆகிவிட்டார். இதைவைத்து விசிக பதுங்கி இருக்கிறதா என அரசியல் ஆர்வலர்கள் கேள்விகேட்கின்றனர்.
➤Swiss Road Para-Cycling: C5 தனிநபர் பிரிவில் சாரா ஸ்டோரி சாம்பியன் பட்டம் வென்றார். ➤Sydney Rugby Championship: AUS அணியை 31-28 என்ற கணக்கில் வீழ்த்தி NZ அணி பிளெடிஸ்லோ கோப்பையை வென்றது. ➤Poland Open Badminton: இந்திய வீரர் அன்மோல் கார்ப் சாம்பியன் பட்டம் வென்றார். ➤Snooker English Open: சீனாவின் வு யிஸை வீழ்த்தி ஆஸி வீரர் நீல் ராபர்ட்சன் 7-1 என்ற கணக்கில் 2ஆவது முறையாக பட்டத்தை வென்றார்.
நாடு முழுவதும் புதிதாக 60 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு தனது ஒப்புதலை அளித்துள்ளது. ஏற்கெனவே நாடு முழுவதும் 706 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. புதிதாக அமைக்கப்படும் மருத்துவ கல்லூரிகளையும் சேர்த்து அந்த எண்ணிக்கை 766ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 387 மருத்துவ கல்லூரிகளே இருந்தன. இது கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 98% அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பூமியை நாளை 2 எறிகற்கள் நெருங்குவதாக நாசா எச்சரித்துள்ளது. அவற்றுக்கு 2020 GE , 2024 RO11என்று நாசா பெயரிட்டு உள்ளது. இதில் 2020 GE எறிகல், பேருந்து சைஸ் உடையது. இது பூமியை 4.10 லட்சம் மைல் தொலைவில் கடக்கும். 2024 RO11 எறிகல், விமானம் அளவுக்கு பெரியது. அது 45.80 லட்சம் மைல் தொலைவில் கடக்கும். இந்த 2 எறிகற்களால் பூமிக்கு பாதிப்பு இருக்காது என்று நாசா தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியை சேர்ந்த இவர்கள், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில், இன்று மீண்டும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் கைது நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மோடி ஆட்சியை, காமராஜர் ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசிய தமிழிசைக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற வெறுப்பு அரசியலையும், அதிகாரங்களை குவித்து வைத்துக்கொண்டு சர்வாதிகார பாசிச முறையில் செயல்பட்டு வரும் மோடியின் ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவது தமிழிசையின் அறியாமையை காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
➤இங்கிலாந்து: ஆக்ஸ்போர்டு பல்கலை. செயல்பாடுகளில் தலையிட்ட சீன ஆதரவு பெற்ற 30 கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும் மானியத்தை நிறுத்த இங்கிலாந்து கல்வித்துறை முடிவு. ➤ரஷ்யா: நவம்பரில் உக்ரைன் நடத்தும் 2ஆவது அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்க போவதில்லை என ரஷ்யா அறிவிப்பு. ➤அமெரிக்கா: அலபாமா மாகாண பல்கலைக்கழகம் அருகே ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி – மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. வட தமிழகம், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் 2 நாளைக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் RMC குறிப்பிட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
அம்மா உணவகம் குறித்த திமுக அமைப்பு செயலாளர் <<14167794>>ஆர்.எஸ். பாரதி<<>> கருத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சி அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்ட X பக்க பதிவில், ஆர்.எஸ்.பாரதியை கார்ப்பரேட் கைக்கூலி என சாடியுள்ளார். மேலும் அம்மா உணவகம் குறித்த ஆர்.எஸ்.பாரதியின் எண்ணம் திமுகவின் அழிவுக்கான பாதை என்றும் ஜெயக்குமார் சாடியுள்ளார். அம்மா உணவகம் குறித்து உங்கள் கருத்து என்ன? கீழே பதிவிடுங்க
Sorry, no posts matched your criteria.