India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை, பாஜக ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளன. 90 தொகுதிகளை கொண்ட J&Kவில் செப்.18, 25, அக்.1 என 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக 24 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக 16, ஆம் ஆத்மி 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
ஆதார் அட்டையில் இலவசமாக புதுப்பிக்க, செப்.14 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆதார் அட்டை, முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இந்நிலையில், பெயர், முகவரி, புகைப்படம் மாற்றம் போன்ற பணிகளை செய்ய அவகாசம் தரப்பட்டுள்ளது. மாற்றம் செய்ய உள்ளவர்கள், ஓட்டர் ஐடி, லைசென்ஸ் போன்ற ஆவணங்களுடன், அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம். <
*ராஜபாளையம் – பருத்தி நகரம்
*செஞ்சிக் கோட்டை – கிழக்கின் டிராய்
*போடி – ஏலக்காய் நகரம்
*மணப்பாடு – சின்னஜெருசலேம்
*புளியங்குடி – எலுமிச்சை நகரம்
*தளி – குட்டி இங்கிலாந்து
*சிவகாசி – குட்டி ஜப்பான்
*குற்றாலம் – தென்னிந்தியாவின் ஸ்பா
*கூடுதுறை – தென்னிந்தியாவின் திரிவேணி
*ராமேஸ்வரம் – தென்னிந்தியாவின் காசி
*ஆக.27-சென்னையிலிருந்து USA செல்கிறார்.
*ஆக.28-San Francisco செல்லும் அவர், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
*ஆக.31-புலம்பெயர் தமிழர்களுடன் பேசவுள்ளார்.
*செப்.2-12 வரை சிகாகோவில் தங்கும் CM, ‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் உள்ள நிறுவன அதிகாரிகள், கூகுள் CEO சுந்தர் பிச்சை ஆகியோரை சந்தித்து உரையாடுகிறார்.
*செப்.7-அயலகத் தமிழர்களை சந்திக்கிறார்.
*செப்.12 மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.
மும்பை அருகே 70 வயது மூதாட்டி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிடா கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் ஷேக் என்பவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பாக மக்கள் அளித்த புகாரின்பேரில், போலீசார் சென்று பார்த்தபோது மூதாட்டி கற்பழித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. சம்பவத்தை அடுத்து தலைமறைவான மன்சூரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
மனிதர்களுக்கு பல் வலி வந்தால் மட்டும் உயிர் போகும் அளவுக்கு துடிப்பதுண்டு. இந்த பிரச்னையை நொடியில் போக்குவதற்கான டிப்ஸ்.
*அரை லிட்டர் தண்ணீரில், 23 குறுமிளகு, சிறிதளவு பட்டையை சேர்த்து கொதிக்கவிடவும்.
*வெந்நீர் வற்றி ஒரு டம்ளர் ஆனவுடன் அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்.
*இறுதியாக சிறிய இஞ்சித் துண்டை நறுக்கி, அதனை 10 நிமிடம் வெந்நீரில் ஊற வைத்து பருகினால் பல்வலி பறந்தோடும்.
ஜார்க்கண்ட் Ex CM சம்பாய் சோரன், ஆக.30இல் பாஜகவில் இணைகிறார். இது தொடர்பாக Union Min., அமித்ஷாவுடன், சம்பாய் சந்தித்த Photoவை, அசாம் CM ஹிமந்தா பிஸ்வா Xஇல் பதிவிட்டுள்ளார். முன்னதாக, ED வழக்கில் ஜார்க்கண்ட் CM ஹேமந்த் கைதானதால், சம்பாய் இடைக்கால முதல்வரானார். பிறகு ஜாமினில் அவர் வெளிவந்து மீண்டும் CM ஆனதால், சம்பாய் அதிருப்தி அடைந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகினார்.
உலகிலுள்ள தொழில்நுட்ப ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருந்த Apple Event, செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அப்போது, Apple தயாரிப்புகள் மற்றும் அம்சங்களை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறவுள்ள இந்த ஈவன்ட்டில், ஐபோஃன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் போன்ற தயாரிப்புகளை விளம்பரப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல் ▶குறள் எண்: 35 ▶குறள்: அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
▶பொருள்: பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
கொட்டுக்காளி திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்திருக்கக்கூடாது என இயக்குநர் அமீர் கூறியுள்ளார். சர்வதேச விருதுகளை பெற்ற ஒரு படத்தை, வெகுஜன சினிமாவுடன் போட்டியிட வைப்பதே ஒரு வன்முறை எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் படத்தை தான் இயக்கியிருந்தால் தியேட்டரில் ரிலீஸ் செய்திருக்க மாட்டேன் எனத் தெரிவித்தார். மேலும், வணிக நோக்கில் அந்தப் படத்தை திணிக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் அவர் வினவியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.