India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில் தான், விஜய் கட்சியை தொடங்கியதாக பாஜக மூத்த தலைவர் விஜயதாரணி கூறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ராகுலை விஜய் எப்போது சந்தித்தார்? அது நடந்து 10 வருடத்துக்கு மேல் இருக்கும். காங்கிரஸில் விஜய் பொறுப்பு கேட்டாரா என்று எனக்கு தெரியாது. வேண்டுமானால் ராகுலிடம் கேட்டு சொல்கிறேன்” எனக் கூறினார்.
நவீன தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை அழுத்தமாக கூறியவர்களில் எழுத்தாளர் ஜி.நாகராஜன் முக்கியமானவர். இவரது ‘குறத்தி முடுக்கு’, ‘நாளை மற்றுமொரு நாளே’ ஆகிய 2 நாவல்களும் தமிழின் ஆகச்சிறந்த படைப்பாக உள்ளது. இவரது கதைகளை போலவே, இவரது வாழ்வும் கசப்பான முடிவையே கொண்டுள்ளது. பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் செயல் இழந்து துணைக்கு ஆளே இல்லாமல் அநாதையாக உயிரிழந்தார்.
தவெக கொடியை அறிமுகம் செய்து அதிகாரப்பூர்வமாக அரசியல் களத்தில் குதித்துள்ளார் விஜய். இந்நிலையில், விஜய் அரசியலை மற்ற கட்சிகளை காட்டிலும் திமுக கடுமையாக விமர்சிக்கிறது. நிகழ்ச்சியொன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் நாசர், “ஏதோ கட்சிக் கொடியை அறிமுகப்படுத்துறாராம். குங்குமப் பொட்டு, சந்தனப் பொட்டு வெச்ச மாதிரி. நடுவுல தூங்கு மூஞ்சி பூ வேற. இதெல்லாம் ஒரு கொடியா?” எனக் கேள்வியெழுப்பினார்.
அருணகிரிநாதரை கம்பத்து இளையவராக தடுத்தாட்கொண்ட முருகன் அருள்பாலிக்கும் திருத்தலம் வயலூர் ஆதிநாதர் கோயிலாகும். குலோத்துங்கச் சோழன் திருப்பணிகள் செய்த இக்கோயிலில்தான் ‘திருப்புகழ்’ உருவானது. இத்தகைய குமரன் சிவனை வணங்கும் சிறப்புவாய்ந்த இத்திருத்தலத்திற்குச் சென்று, சக்தி தீர்த்தத்தில் நீராடி, வள்ளி மணாளனை செவ்வரளி மலரால் அர்ச்சித்து, நெய் தீபமேற்றி வழிபட்டால், நற்பலன்கள் அடையலாம் என்பது நம்பிக்கை.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த அவர்கள், தனுஷ்கோடி கடல் பகுதிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, மீனவர்கள் சென்ற விசைப் படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, விசாரணைக்காக அவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளது.
சூரி நடிப்பில் வெளியான ‘கொட்டுக்காளி’ படத்தை, NTK சீமான் பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் நல்ல கதைக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக வெளியாகும் விமர்சனங்களுக்கு இந்தப் படம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மகாராஜா, கருடன், தங்கலான், வாழை, கொட்டுக்காளி என அடுத்தடுத்து வெளியாகியுள்ள தமிழ்ப் படங்கள் அழுத்தமான கருப்பொருளோடு இருப்பது மனநிறைவை தருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அக்.9-13 வரை நடைபெற உள்ள துர்கா பூஜைக்காக மேற்கு வங்க அரசு வழங்கும் நிதியை ஏற்க மாட்டோம் என விழா கமிட்டி அறிவித்துள்ளது. இதுபற்றி ஹூக்ளி நகர துர்கா பூஜை கமிட்டி தலைவர் ரீனா தாஸ் கூறும்போது, பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கிடைக்கும் வரை நிதியை ஏற்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். துர்கா பூஜைக்கு பந்தல் அமைப்பது போன்ற பணிகளுக்காக மே.வங்க அரசு ஆண்டுதோறும் தலா ₹85,000 வழங்கும்.
*தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க, CM ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா செல்கிறார்.
*திமுக MP தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், எழும்பூர் கோர்ட்டில் இபிஎஸ் இன்று நேரில் ஆஜராகிறார்.
*ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம்.
*வங்கதேச கலவரத்தை கண்டித்து, இந்து மோர்ச்சா இன்று தமிழகம் முழுவதும் போராட்டம்.
மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை என, நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை குறித்து நடிகர் பிரித்விராஜ் கருத்து கூறியுள்ளார். புகாரில் உண்மை இருந்தால், அதற்கான தண்டனை முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பொய் என்றால், அதற்கும் தண்டனை வழங்குமாறு யோசனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த புகார்கள் குறித்து மிகவும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை, பாஜக ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளன. 90 தொகுதிகளை கொண்ட J&Kவில் செப்.18, 25, அக்.1 என 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக 24 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக 16, ஆம் ஆத்மி 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.