India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘கங்குவா’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யாவின் அடுத்த படத்தை RJ பாலாஜி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சிறிய பட்ஜெட் படமாக இருக்கும் என்றும், ‘வாடிவாசல்’ படத்திற்கு முன்பாகவே இப்படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
புனே விமான நிலையத்திற்கு ‘ஜகத்குரு சாந்த் துக்காராம் மகராஜ் சர்வதேச விமான நிலையம்’ என பெயரை மாற்றும் திட்டத்திற்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இறுதி ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்தமானில் உள்ள போர்ட் பிளேயர் விமான நிலையம் ‘ஸ்ரீ விஜயபுரம்’ என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா இன்று காலை என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், ஸ்ரீரங்கத்தில் ரவுடி ஜம்புகேஸ்வரம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கைது செய்யும்போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
தமாகாவின் முக்கிய தலைவர் சூளை த.பிரகாசம் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். பாஜக உடன் ஜி.கே.வாசன் கூட்டணி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒவ்வொருவராக விலகி வருகின்றனர். இந்நிலையில், அக்கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பிரகாசம், செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, நெய் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான்கு நிறுவனங்களின் மாதிரிகளை சோதித்ததில், அதில் ஒரு நிறுவனத்தின் மாதிரியில் கலப்படம் இருந்ததும் தெரியவந்துள்ளது.
திருப்பதி கோயில் சொத்துகளின் நிலை குறித்து விசாரிக்க வேண்டும் என, Deputy CM பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார். கோயில் நிலத்தை காக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்றும், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்களை முந்தைய அரசு பாதுகாத்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். லட்டு விவகாரத்தில், குண்டூர் ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் அவர் 11 நாள் தியானம் மேற்கொள்ள உள்ளார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் புகழ்ந்துள்ளார். இவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் விளையாடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது என கூறியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், 6 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார் அஸ்வின்.
பெங்களூரை விட்டு வட இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது. சோசியல் மீடியா பிரபலம் சுகந்த் ஷர்மா, வட இந்தியர்கள் பெங்களூரை உருவாக்கியதாகவும், அவர்கள் இல்லாமல் அங்குள்ள மக்களால் வாழ முடியாது எனவும் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையான நிலையில், தயவு செய்து அனைவரும் கிளம்புங்க, நீங்க இல்லாம எங்களால வாழ முடியும் என நடிகைகள் சைத்ரா ஆசார், வர்ஷ பொல்லம்மா காட்டமாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது. இதை கண்டித்தும், திமுக அரசுக்கு எதிராகவும் அதிமுக நாளை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அறப்போராட்டத்தில், மாணவிகள், தாய்மார்கள் என அனைத்து மகளிரும் கலந்துகொள்ளுமாறு அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக அரசின் மூலம் அன்னை தெரசா ஆதரவற்ற மகளிர் திருமண உதவித் திட்டம், முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட 4 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், இத்திட்டங்களின் கீழ் வழங்குவதற்காக ரூ.48.13 கோடி செலவில் 16 கிலோ தங்கத்தை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. 8 கிராம் எடையுள்ள 8,000 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.