news

News August 27, 2024

ஆசியாவிலேயே பணக்கார கிராமம் எது தெரியுமா?

image

ஆசியாவின் பணக்கார கிராமம் என்ற அந்தஸ்தை குஜராத்தின் கன்ச் மாவட்டத்தில் உள்ள மாதாபூர் என்ற கிராமம் பெற்றுள்ளது. இங்குள்ள 17 வங்கிகளில் ₹7,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில், பெரும்பாலானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். டெபாசிட் செய்யப்படும் 65% பணத்தை அவர்கள் தான் டெபாசிட் செய்கின்றனர். சொந்த ஊர் மீதுள்ள பிணைப்பால் இவ்வாறு செய்வதாக அவர்கள் கூறுகின்றனர்.

News August 27, 2024

துலீப் கோப்பை தொடரிலிருந்து ஜடேஜா விலகல்

image

துலீப் கோப்பை தொடரின் முதல் சுற்றிலிருந்து ஜடேஜா மற்றும் சிராஜ் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக சிராஜ் விலகியுள்ள நிலையில், மாற்று வீரராக நவ்தீப் சைனி விளையாட உள்ளார். ஜடேஜா விலகியது குறித்த காரணம் வெளியாகவில்லை. முன்னதாக இத்தொடரில் விளையாடுவதில் இருந்து கோலி, ரோஹித், அஷ்வின் மற்றும் பும்ராவுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த தொடர் வரும் செப்.5 தேதி தொடங்கவுள்ளது.

News August 27, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை : முக்கிய ரவுடி கைது

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சீசிங் ராஜா கூட்டாளியான பிரபல ரவுடி சஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். சஜித் மீது ஏற்கெனவே கொலை, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தாம்பரம் போலீசார் அவரை கைது செய்துள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவருக்கு தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இதுவரை 29 பேர் கைதாகியுள்ளனர்.

News August 27, 2024

‘ஆபரேஷன் ஹரோஃப்’ பெயரில் தற்கொலைப்படை தாக்குதல்

image

பலுசிஸ்தானில் உள்ள ராணுவ முகாம் மற்றும் சோதனை சாவடிகள் மீதான தாக்குதலுக்கு பலூச் விடுதலை ராணுவம் (BLA) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ‘ஆபரேஷன் ஹரோஃப்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தற்கொலை படை தாக்குதலில் 102 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். BLAஇன் ஃபிதாபீன் பிரிவு கடந்த 6 மணி நேரமாக ராணுவ முகாமின் கணிசமான பகுதிகளை கைப்பற்றியுள்ளது.

News August 27, 2024

கந்தர்பால் தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி

image

ஜம்மு & காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் கந்தர்பால் தொகுதியில் உமர் அப்துல்லா போட்டியிட உள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி, 51 இடங்களில் போட்டியிட உள்ளது. இதற்கான 32 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தற்போது வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிடுகிறது. 5 தொகுதிகளில் இருகட்சிகளும் நேரடியாக மோதுவது குறிப்பிடத்தக்கது.

News August 27, 2024

இனிஷியல் மட்டும் இருந்தால் பான் கார்டு செல்லாதா?

image

பான் கார்டுகளில் அப்பாவின் முழுப்பெயர் இல்லாமல், இனிஷியல் மட்டும் இருந்தால், அந்த பான் கார்டு செல்லாது என்றும் அவ்வாறு உள்ள கார்டுகளில் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறான தகவல், இதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

News August 27, 2024

PAN Card உண்மை என்ன?

image

pan cardகளில் இனிஷியல் மட்டும் இருந்தாலும், இணையதளத்தில் தந்தையின் பெயரும் இணைத்தே இருக்கும். இனிஷியலோடு இருக்கும் pan கார்டுகள், ஆதார் கார் கார்டுடன் இணைக்கும்போது மட்டும் சிக்கல் உருவாகலாம். மற்றப்படி இனிஷியலுடன் இருக்கும் பான் கார்டுகளில் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தகவல் பொய்யானது. ஐடி இணையதள பக்கங்களிலும் இனிஷியலுடன் இருக்கும் pan card செல்லாது என எங்கும் குறிப்பிடப்படவில்லை.

News August 27, 2024

சட்டம் அறிவோம்: தகவல் அறியும் உரிமைச் சட்டம்

image

அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை மக்கள் அறிந்து கொள்ளும் உரிமையை வழங்குவதற்காக, RTI சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. கேட்கப்படும் தகவல்களின் தன்மையை பொறுத்து, உடனடியாகவோ அல்லது 30 நாள்களுக்குள்ளோ தகவல் அலுவலர் பதில் அளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, தேச பாதுகாப்பு, தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தகவல்களை இச்சட்டத்தின் மூலம் பெற முடியாது.

News August 27, 2024

சாதனை படைத்த மின் வாரியம்

image

25.08.2024 ஞாயிறன்று தமிழகத்தில் அதிக பட்சமாக 43.20 மில்லியன் யூனிட் சூரிய சக்தியை மின் கட்டமைப்பில் நுகர்வு செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், அன்று 5648 மெகாவாட் சூரிய சக்தியை உற்பத்தி செய்துள்ளது. எனினும், 09.08.2024 அன்று உற்பத்தி செய்த 5979 மெகாவாட் அளவே இதுவரை செய்யப்பட்ட உச்சபட்ச சூரிய உற்பத்தியாகும். இவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாட்டின் ஒளி மயமான எதிர்காலத்தை குறிக்கின்றன.

News August 27, 2024

₹2,000 கோடி நிதி கேட்டு பிரதமரை சந்தித்த பினராயி

image

கேரள நிலச்சரிவு தொடர்பாக பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து பேசினார். வயநாட்டில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ₹2,000 கோடி நிதி ஒதுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். முதல் கட்டமாக ₹900 கோடியை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!