India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் CM ஓபிஎஸ் வீட்டை மாற்ற முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியலில் அடுத்தடுத்து பிரச்னையை சந்தித்து வரும் ஓபிஎஸ், தனது ஆஸ்தான ஜோதிடரை அண்மையில் சந்தித்துள்ளார். அப்போது சென்னையில் தற்போது வசிக்கும் வீட்டை மாற்றும்படி ஆலோசனை அளித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து, ஆழ்வார்பேட்டையில் வேறு வீட்டில் ஓபிஎஸ் குடியேற இருப்பதாகக் கூறப்படுகிறது.
தலித்தை CM ஆக்குவதாக பாமக, நாதக கட்சிகள் பகட நாடகம் ஆடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் தலித் சமூகத்தவர் முதல்வராக முடியாது என திருமாவளவன் தெரிவித்திருப்பது குறித்து வன்னியரசிடம் கேட்கப்பட்டது. அதற்கு வன்னியரசு, தலித் விடுதலை குறித்து பேசக்கூடிய அம்பேத்கரிய இயக்கம் ஆட்சிக்கு வரக்கூடிய யதார்த்த சூழல் தமிழகத்தில் இல்லை என்றார்
ரஷ்யாவின் 100 குடியிருப்பு பகுதிகளை கைப்பற்றிய உக்ரைன், 600 வீரர்களையும் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா-உக்ரைன் இடையேயான சண்டை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் ஊடுருவியுள்ள உக்ரைன் படையினர், அங்கு பல பகுதிகளை கைப்பற்றி முன்னேறி வருவதாகவும், அப்போது நடந்த சண்டையில் 600 ரஷ்ய வீரர்களை கைது செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் இளம் நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில், நடிகர் சித்திக் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை ரேவதி சம்பத் அளித்த புகாரில், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் விடுத்த பிரிவில் திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மஸ்கட் ஹோட்டலில் 2016ல் நடந்த பலாத்கார சம்பவம் தொடர்பாக ரேவதி சம்பத் அளித்த புகாரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
CM ஸ்டாலின் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு CM அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில், அவர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், உச்சகட்ட பதற்றம் அடைந்த அதிகாரிகள், சுமார் 4 மணி நேரத்திற்கு திகைத்தனர். தொடர்ந்து, அந்த விமானம் துபாயில் தரையிறங்கிய பிறகே மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இப்போது கிட்டத்தட்ட எல்லா உணவு பாெருள்களிலும் கலப்படம் நடக்கிறது. இதை பரிசோதிக்காமல் உட்கொள்வது ஆரோக்கியத்தை பாதிக்கும். உப்பு, சர்க்கரையை சரிபார்க்க சில எளிய வழிகள் இங்கே உள்ளன.
– ஒரு ஸ்பூன் உப்பு (அ) சர்க்கரையை, ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து கலக்கவும். தண்ணீர் சுத்தமாக இருந்தால் பொருட்கள் கலப்படம் இல்லை என்று அர்த்தம். சுண்ணாம்பு தூள் சேர்ந்திருந்தால், தண்ணீர் சிறிது வெள்ளை நிறமாக மாறும்.
WYNK MUSIC செயலி செயல்பாட்டை இன்னும் சில மாதங்களில் ஏர்டெல் மூட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் MUSIC செயலி சேவை தொடர்பாக ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து, WYNK MUSIC செயலியை மூடிவிட்டு, அதில் பணிபுரியும் ஊழியர்களை தனது நிறுவனத்தில் ஏர்டெல் சேர்க்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. 2014இல் WYNK MUSIC செயலியை ஏர்டெல் ஆரம்பித்தது. அதை 10 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர்.
வாட்ஸ்அப் MSG-ஐ அழிப்பது குற்றமில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பிஆர்எஸ் மூத்த தலைவர் <<13951208>>கவிதா <<>>வழக்கு விசாரணையில், அவர் வாட்ஸ்அப் MSG-ஐ அழித்துவிட்டதாகவும், மொபைல் போனை பார்மட் செய்ததாகவும், இது ஆதாரங்களை அழிக்கும் செயல் என்றும் சிபிஐ வாதிட்டது. இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், MSG-ஐ அழிப்பது அன்றாடம் நடக்கும் செயலே, இது குற்றமாகாது எனக் கூறினர்.
பங்குச்சந்தை முதலீட்டிற்கு அதிக லாபம் உண்டு என்று தெரிவித்து அணுகுவோரை நம்ப வேண்டாம் என்று முதலீட்டாளர்களை தேசிய பங்குச்சந்தை (NSE) எச்சரித்துள்ளது. இதுகுறித்து NSE வெளியிட்டுள்ள அறிவிப்பில், பங்குச்சந்தையில் லாபத்திற்கான உத்தரவாதம் என எதுவும் இல்லை, அதுபோல வாக்குறுதி அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்வது சட்டவிரோதம், அவை எக்ஸ்சேஞ்ச் நஷ்ட ஈட்டின்கீழ் வருவதில்லை என NSE கூறியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி இன்று பாரிஸில் தொடங்குகிறது. இதையொட்டி, இன்றிரவு 11.30 மணிக்கு பாரிஸில் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. செப்.8 வரை நடக்கும் போட்டிகளில், 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில், இந்தியாவில் இருந்து 32 மகளிர் உள்பட 84 பேரும், தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், துளசிமதி, நித்ய ஸ்ரீசிவன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.