news

News April 16, 2025

கூட்டணி ஆட்சி குறித்து பதிலளிக்க மறுப்பு

image

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா என்ற கேள்விக்கு பதிலளிக்க பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுத்துவிட்டார். கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் அமித் ஷாதான் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் கூட்டணி ஆட்சி குறித்தும் அவரே முடிவெடுப்பார் எனவும் நயினார் நாகேந்திரன் பேசினார். மேலும், கூட்டணி ஆட்சி அல்ல என்று EPS பேசியது குறித்த கேள்விக்கு, அது தொடர்பாக கருத்து கூற இயலாது என்றார்.

News April 16, 2025

இடைக்கால உத்தரவுகள் நிறுத்தி வைப்பு

image

வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் <<16118424>>பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.<<>> வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்கள் தவிர வேறு யாரும் இடம்பெறக் கூடாது என்ற முக்கிய உத்தரவை பிறப்பித்த சில நிமிடங்களில் தலைமை நீதிபதி அமர்வு அதனை நிறுத்தி வைத்தது. நாளை முழுமையான விசாரணைக்குப் பின்னர் உத்தரவுகள் அனைத்தும் பிறப்பிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

கூலி படத்துக்கு புது வைப் கொடுத்த பூஜா ஹெக்டே

image

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் ‘ரெட்ரோ’, ‘ஜனநாயகன்’ என அடுத்தடுத்து படங்களை கையில் வைத்துள்ள அவர் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதுகுறித்து பேசியவர் ரஜினி சாருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் ஸ்பெஷல் என தெரிவித்துள்ளார். கூலி படத்தில் தான் ஆடிய நடனம் ‘காவாலா’ போன்று இல்லாமல் வேறு வைப்பில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

News April 16, 2025

திமுக ஆட்சியை அகற்றுவதே தீர்வு: சீமான்

image

திமுக ஆட்சியில் சாதிய மோதல்களும், கொலைவெறித் தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறும் கூடாரமாக பள்ளிக்கூடங்கள் மாறியுள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். சட்ட – ஒழுங்கு சீர்கெட்டு நிற்பதற்கான சான்றுதான் பாளையங்கோட்டை பள்ளியின் கொலைவெறித் தாக்குதல் என்றும் அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சியை அகற்றுவதே இதற்கு ஒரே தீர்வு எனவும் சீமான் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

News April 16, 2025

பாஜக தலைவர் பொறுப்பேற்பு

image

தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சிக் கொடியேற்றி நயினார் நாகேந்திரன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

News April 16, 2025

குஜராத்தில் தொடங்கும் அழிவுப் பாதை: ராகுல்

image

RSS, BJP-ஐ தோற்கடிக்கும் பாதை குஜராத்தில் இருந்து தொடங்குவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் நிர்வாகிகளிடையே பேசிய அவர், RSS – காங். இடையே இருப்பது அரசியல் சண்டை மட்டுமல்ல, கொள்கை சண்டை எனவும், கட்சியில் பல மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், காங். கட்சியால் மட்டும்தான் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

பாங்காக்கில் ஆவி பறக்கும் ‘இட்லி கடை’

image

தனுஷ் இயக்கி நடிக்கும் படம் ‘இட்லி கடை’ அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இடம்பெற்றுள்ளது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்காக படக்குழு பாங்காக் சென்றுள்ள நிலையில் அங்கு சத்யராஜ், அருண்விஜய், பார்த்திபன் இருக்கும் புகைப்படம் வைரலாகிறது.

News April 16, 2025

வக்ஃப் சட்டத்தில் புதிய நடைமுறை ஏன்?!

image

இந்து அறநிலையத்துறையை இந்துக்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் என்ற சட்டம் இருக்கும்போது வக்ஃப் வாரியத்துக்கு மட்டும் ஏன் புதிய நடைமுறை என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வக்ஃப் சொத்துகள் எவை என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வது நியாயமானதா என்றும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. வக்ஃப் வாரிய சட்டதிருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

News April 16, 2025

வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்கள் மட்டும்: கோர்ட்

image

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கில் பரபரப்பு உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது. வக்ஃப் வாரியத்தில் 2 ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருக்கலாம் என்றும் மற்றவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா என்றும் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், விரிவான பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது

News April 16, 2025

21 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவாரூர், நீலகிரி & தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் & ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

error: Content is protected !!