news

News April 27, 2025

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் நீட்டிக்க வாய்ப்பு!

image

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் ED வழக்கில் சுப்ரீம் கோர்ட்(SC) நாளை ஜாமினை நீட்டிக்க வாய்ப்புள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜியை ED கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்.26-ம் தேதி அவருக்கு SC ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பதவியா? ஜாமினா? என முடிவெடுக்க SC கெடு விதித்திருந்தது.

News April 27, 2025

J&K-வில் புதிய அரசியல் கட்சி உதயம்

image

பஹல்காம் தாக்குதலை அடுத்து J&K-ல் பதற்றம் நிலவிவரும் நிலையில், தடைசெய்யப்பட்ட இயக்கமான ஜமாத்-இ-இஸ்லாமி(JeI) புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளது. த ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட் (JDF) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அக்கட்சிக்கு முன்னாள் JeI நிர்வாகி ஷமீம் அகமது தோக்கர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். J&K உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

உயிர் காத்த Artificial Intelligence

image

ChatGPT என்ற AI (செயற்கை நுண்ணறிவு) தனது உயிரை காப்பாற்றியதாக பிரான்ஸ் நாட்டு பெண் மார்லி (27) தெரிவித்துள்ளார். அதிக வியர்வை, சரும எரிச்சல் போன்றவற்றால் அவதிப்பட்ட அவர், மருத்துவர்களிடம் சோதனை செய்தபோது ஏதும் இல்லையென்று கூறிவிட்டனராம். ஆனால், அவருக்கு அரிய வகை கேன்சர் இருக்கலாம் என்று ChatGPT சொல்ல, மீண்டும் மருத்துவரை அணுகி அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

News April 27, 2025

IPL: RCB அணிக்கு 163 ரன்கள் இலக்கு

image

புது டெல்லியில் நடைபெற்று வரும் IPL போட்டியில், RCB அணிக்கு DC அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற RCB கேப்டன் பட்டிதார் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து, களமிறங்கிய DC அணி வீரர்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. ராகுல் மட்டும் நிதானமாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். பின்னர், 20 ஓவர்கள் முடிவில் DC அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.

News April 27, 2025

தங்க விற்பனையில் மாறும் டிரெண்ட்!

image

தங்கம் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக நகை வாங்கும் பழக்கம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறையினர், தங்கத்தை முதலீடு நோக்கத்திலேயே அணுகுவதால் காயின், தங்கக் கட்டி வாங்குவதாக கூறியுள்ளனர். அதனை பணத் தேவையின் போது சிறிதளவும் மதிப்பு குறையாமல் விற்பனை செய்யலாம். ஆனாலும், இப்படி செய்வதால் நகை செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

News April 27, 2025

25 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்.. கணவரின் திட்டம்!

image

வரதட்சணையாக ₹50 லட்சமும், 100 பவுன் நகையும் பெற்றுக்கொண்டு கேரளாவின் ஷாகா குமாரியை (52) அருண் (27) 2020-ல் திருமணம் செய்கிறார். கல்யாண போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிடும் ஷாகா, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அருணை வற்புறுத்துகிறார். ஆனால், ந்த இரண்டுலுமே அருணுக்கு விருப்பமில்லை. இதனால், ஷாகாவை கரண்ட் ஷாக் வைத்து கொலை செய்த நிலையில், அவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

போலி சான்றிதழ் வழக்கு…உ.பி. Dy. CM-க்கு செக்

image

உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு எதிரான போலி சான்றிதழ் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிட, போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்தார் என பாஜகவை சேர்ந்த திவாகர் நாத் திரிபாதி என்பவர் 2021-ல் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ள நிலையில், மவுரியாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை மே 6-ல் அலகாபாத் ஐகோர்ட்டில் நடைபெறவுள்ளது.

News April 27, 2025

பணமோசடி வழக்கு…மகேஷ் பாபு ஆப்செண்ட்

image

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் ED சம்மன் அளித்திருந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபு ஆஜராகவில்லை. பணமோசடி தொடர்பாக, சாய் சூர்யா, சுரானா நிறுவனங்களில் ED சோதனை மேற்கொண்டது. அப்போது, மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்குக்கு அவற்றில் இருந்து ₹11.4 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், வேறொரு நாளில் விசாரணைக்கு ஆஜராக அனுமதி கோரி மகேஷ் பாபு ED-க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

News April 27, 2025

பஹல்காம் தாக்குதல்; பாஜக ஆதாயம்…TMC எம்பி அட்டாக்

image

பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஊடகங்களில் அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த விவாதங்களுக்கு பதிலாக, பாஜக ஆதாயம் அடையும்படியான செய்திகள் வெளியாகின்றன சாடியுள்ளார்.

News April 27, 2025

BREAKING: செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா

image

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். செந்தில் பாலாஜியின் வசம் இருந்த மின்சாரத்துறை சிவசங்கருக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. பொன்முடி வசமிருந்த வனத்துறை ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!