India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி எஸ்.பி. வருண்குமாரையும், அவரது மனைவியான புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டேவையும் நாதக கட்சியினர் சிலர் வலைதளங்களில் மிக மோசமாக விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய கனிமொழி, “எந்த சூழலிலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. வந்திதா பாண்டே மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வருபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை படமாக எடுப்பது தொடர்கிறது. அந்த வரிசையில், ராமதாஸின் வாழ்க்கை வரலாறை சேரன் படமாக எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள சேரன், தயாரிப்பு நிறுவனம் முறைப்படி அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும், அதுவரை தம்மால் எதுவும் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு பெண் எந்தவொரு பாலினத்தை சேர்ந்த குழந்தையையும் தத்தெடுக்கலாம். ஆனால், திருமணமாகாத ஒரு ஆண், பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது. குறைந்தது 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதி எந்த பாலின குழந்தையையும் தத்தெடுக்க முடியும். அதே நேரம் குழந்தைக்கும், தத்தெடுப்பவர்களுக்கும் 21 வயது வித்தியாசம் இருக்க வேண்டுமென Adoption Regulations 2017 கூறுகிறது. இந்த தகவல் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க.
விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெக மாநாட்டுக்கு அனுமதி கோரி விழுப்புரம் எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த மனுவை வழங்கி, மாநாட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து, விக்கிரவாண்டி டோல்கேட் அருகே சுமார் 150 ஏக்கர் நிலத்தில் இடமும் தேர்வாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோரின் Count அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும், 30 – 40 வயதுக்கு உட்பட்ட பலர் பாதிப்பதாக கூறப்படுகிறது. High BP, நீரிழிவு, புகைப்பிடித்தல், ஜர்தா, குட்கா மெல்லுதல், மது பழக்கம், குடும்பத்தின் பக்கவாத வரலாறு ஆகியவை ஆபத்து காரணிகளாகும். கெட்ட பழக்கங்களில் இருந்து தள்ளி இருந்தாலே இதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். Share it.
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால், ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இபிஎஸ், “அரசியல் கொள்கைகளை கல்வித்துறையில் திணித்து மனித வளத்தை சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.
பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல் தொந்தரவை சந்திப்பதாக, பாஜக பிரமுகர் குஷ்பு பகீர் கிளப்பியுள்ளார். பெண்கள் சந்திக்கும் பாலியல் தொந்தரவு குறித்து குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர், ஆண்களும் பாலியல் தொந்தரவை சந்திப்பதாகவும், பாலியல் தொந்தரவை சந்திப்போர் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கீழே பதிவிடுங்கள்.
ரேஷன் கடைகளுக்கு வருகை தரும் குடும்ப அட்டைதாரர்களிடம், இன்முகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என ஊழியர்களுக்கு, அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். புதிய ரேஷன் கார்டு கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களுக்கு, விரைந்து மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இதற்கான களவிசாரணை, விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியினை விரைவுபடுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தருமபுரியில் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நீட் தேர்வை தட்டித் தூக்கி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். தண்டுக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலிகளான குழந்தை – மாதம்மாள் தம்பதியரின் 3 பிள்ளைகளான சந்தியா, ஹரிபிரசாத், சூர்யபிரகாஷ் ஆகியோர் தான் இந்த சாதனையாளர்கள். நீட் கோச்சிங் செல்ல பண வசதி இல்லாததால், யூடியூப் மூலமாக பயின்று, நீட் தேர்வில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
டோல்கேட்டில் செய்தியாளர் வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பதாக, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது டோல்கேட்டில் சிலரது வாகனம் மட்டுமே கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், பத்திரிகையாளர்களுக்கு சலுகை வழங்கக்கோரி நாகை எம்.பி. செல்வராஜ் எழுதிய கடிதத்திற்கு, பரிசீலிப்பதாக கட்கரி கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.