news

News September 24, 2024

மீண்டும் கார் ரேஸில் அஜித்

image

நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் தனது இன்ஸ்டாவில், விரைவில் துபாயில் நடைபெறவுள்ள GT Racing போட்டியில் அஜித் பங்கேற்க உள்ளதாகவும், இதற்காக கடுமையாக உழைத்து வருவதாகவும்” அவர் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் போர்ஷே GT3 RS ரக காரை அஜித் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 24, 2024

லட்டு விவகாரம்: உ.பியில் அதிரடி விதிகள் அமல்

image

திருப்பதி லட்டு விவகாரம் எதிரொலியாக உ.பியில் உள்ள அனைத்து உணவகங்களிலும் CCTV கேமராக்கள் பொருத்த அம்மாநில அரசு ஆணையிட்டுள்ளது. சமையல் செய்பவர்கள், உணவு பரிமாறுபவர்கள் கட்டாயம் முகக்கவசம், கையுறைகள் அணியவும் அறிவுறுத்தியுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. போலீஸ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

News September 24, 2024

மன்னிப்பு கேட்டார் சூர்யா

image

‘மெய்யழகன்’ பட புரமோஷனில் தனது தம்பி லட்டு குறித்து பேசியதற்காக நடிகர் சூர்யா மன்னிப்பு கோரினார். கார்த்தியின் பேச்சுக்கு, லட்டை வைத்து காமெடி பண்ணாதீர்கள் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், தனது தம்பியின் பேச்சுக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், 3 நாள்கள் தீக்ஷா (Deeksha) செய்யவுள்ளதாகவும் சூர்யா தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News September 24, 2024

விசிகவில் வெடித்தது பஞ்சாயத்து

image

விசிகவில் உட்கட்சிப் பிரச்னையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் விசிகவில் இணைந்த லாட்டரி அதிபரின் மருமகன் ஆதவ் அர்ஜூனாவுக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் வெற்றிபெற முடியாது என அவர் கூறியது கட்சிக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. அவருக்கு ரவிக்குமார், வன்னியரசு உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

News September 24, 2024

மோகன்ஜியை விடுதலை செய்க: ராமதாஸ்

image

இயக்குநர் மோகன்ஜி கைது செய்யப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பஞ்சாமிர்தம் தொடர்பாக பொதுமக்கள் நலன் கருதி, அவர் கூறியதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பழனி கோயில் பஞ்சாமிர்தத்தில் கருக்கலைப்பு மருந்து பயன்படுத்துவதாக மோகன்ஜி தெரிவித்திருந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

News September 24, 2024

இலங்கை புதிய பிரதமர் ஹரிணி அமரசூரியா

image

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசநாயக்கே வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தனே ராஜினாமா செய்தார். இந்நிலையில், அந்நாட்டு இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் கட்சியின் எம்.பி. ஹரிணி அமரசூரியா இன்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கையின் 3-வது பெண் பிரதமர் ஹரிணி அமரசூரியா என்பது குறிப்பிடத்தக்கது.

News September 24, 2024

போலீஸாருக்கு ‘செக்’ வைத்த ரயில்வே துறை..!

image

பொதுமக்கள் மட்டுமின்றி போலீஸார் பலரும் டிக்கெட் இல்லாமல் ரயில்களில் பயணிப்பது அதிகரித்து வருவதாக ரயில்வே துறை கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு டிக்கெட் இன்றி ரயில்களில் பயணிக்கும் போலீஸாரை பாரபட்சமின்றி பிடித்து அபராதம் வசூலிக்கும்படி அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

News September 24, 2024

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. நாடு எங்கே செல்கிறது?

image

குஜராத்தில் பலாத்காரம் செய்ய முயன்றபோது சத்தம் போட்டதால், பள்ளி முதல்வரே 6 வயது சிறுமியை கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. முதல்வர் கோவிந்த் நாத், காரில் வன்கொடுமை செய்ய முயன்றபோது இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. உடலை காரில் மறைத்து வைத்துவிட்டு, வழக்கம் போல் பள்ளி சென்று பாடம் நடத்தியுள்ளார். பள்ளி முடிந்து மாணவர்கள் சென்றதும், உடலை பள்ளி வளாகத்தில் புதைத்த கோவிந்த் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

News September 24, 2024

ஒரே கட்டடத்தில் வசிக்கும் நகரவாசிகள்

image

அலாஸ்காவில் உள்ள விட்டீர் நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் Begich Towers என்ற ஒரே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த 14 மாடி குடியிருப்பில் 153 வீடுகள் உள்ளது. காவல் நிலையம், மருத்துவமனை, பள்ளி, தேவாலயம் என அனைத்தும் இந்த குடியிருப்பில் உள்ளது. மொத்தம் 272 பேர் அந்த நகரத்தில் வாழ்கிறார்கள். 1964ல் சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து, அனைவரும் ஒரே குடியிருப்புக்குள் குடிபெயர்ந்தனர்.

News September 24, 2024

விருதுடன் ₹10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

image

கலைஞரின் நூற்றாண்டு நினைவைப் போற்றிடும் வகையில் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ₹10 லட்சம் ரொக்கம், நினைவுப் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி CM ஸ்டாலின் இவ்விருதினை வழங்குகிறார்.

error: Content is protected !!