India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 7,951 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இளநிலை பொறியாளர்கள்(7,934 Vacancy) மற்றும் டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர், கெமிக்கல் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <
*பூமி – உலகம், புவி, பார், வையகம், அகிலம், தரணி, குவலயம்
*சந்திரன் – திங்கள், மதி, பிறை, நிலவு, நிலா, அம்புலி
*அழகு – எழில், வனப்பு, கவின், வடிவு, அணி
*குழந்தை – மகவு, சேய், பிள்ளை, குழவி, சிசு, மழலை
வயல் – பழனம், கழனி, கமம்
*இரத்தம் – குருதி, உதிரம், சோரி, கறை
*வனம் – காடு, ஆரணியம், கானகம், அடவி
ICC தலைவராக ஜெய் ஷாவை நியமிக்ப்பட்டது தெரிந்ததே. இந்நிலையில், அவருக்கு ஆதரவாக 15 பேர் வாக்களித்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மையம் வாக்களிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதால் PCBயின் எதிர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 36 வயதில் ஜெய் ஷா ICC தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
12ம் வகுப்பு, ITI முடித்த 1,500 பெண்களை வேலைக்கு தேர்வு செய்யும் சிறப்பு முகாம், இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையம், டாடா எலெக்ட்ரானிக்ஸ் சார்பில் இந்த முகாம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. SHARE IT
*தேவையான அளவு (250 Gm ) கருவேப்பிலையை நன்கு காய வைத்து பொடியாக அரைக்கவும்.
*அந்தப் பொடியை 2ஆகப் பிரித்து, 2 வெள்ளைத் துணிகளில் தனித்தனியாக கட்டவும்.
*1 லி. தேங்காய் எண்ணெய்யை 2ஆகப் பிரித்து, அதில் கருவேப்பிலை முடிச்சினை ஊறவிடவும்.
*அந்த எண்ணெய் தீரும்வரை, நாள்தோறும் இரவு தூங்கச் செல்லும் முன்பு தலையில் தேய்த்து வந்தால், உங்கள் முடி ஸ்திரத்தன்மை அடைவதுடன் வேகமாக வளரும். Share It Now
தமிழகம் முழுவதும் இன்று, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி நடைபெற உள்ளது. 19 வயதுக்குட்பட்ட சிறார், 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ‘அல்பெண்டசோல்’ என்ற குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். கடந்த வாரம் 94% பேருக்கு இந்த மாத்திரைகளை வழங்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று, மீதமுள்ளோருக்கு வழங்கப்பட உள்ளது. தேசிய குடற்புழு நீக்க நாள் பிப்ரவரி, ஆகஸ்ட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல் ▶குறள் எண்: 37 ▶குறள்: அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
▶பொருள்: அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.
தியான் சந்த் எனும் மாயாஜால மாந்த்ரீகனின் 119வது பிறந்த நாள் இன்று. ஹாக்கி வரலாற்றில் தனி முத்திரை பதித்த தியான், நிலா வெளிச்சத்தில் பயிற்சி செய்ததால் ‘சந்த்’ என சேர்த்து அழைக்கப்பட்டதாக கூறப்படுவதுண்டு. இவரது வருகைக்குப்பின், 1928, 1932, 1936 என தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக்கில் IND அணி தங்கம் வென்றது. தயான் சந்த் நினைவாக, அவரது பிறந்த நாளான ஆக.29ம் தேதி, தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
*1905 – இந்திய ஹாக்கி வீரர் தியான் சந்த் பிறந்த நாள்
*1943 – தமிழ் சினிமா பிரபலம் விஜயகுமார் பிறந்த நாள்
*1959 – தெலுங்கு ஸ்டார் அக்கினேனி நாகார்ஜுனா பிறந்த நாள்
*1977 – தமிழ் சினிமா ஹீரோ விஷால் பிறந்த நாள்
*1985 – தமிழ் நாடக, திரைப்பட நடிகர் எம்.கே.ராதா நினைவு நாள்
*இந்தியாவின் தேசிய விளையாட்டு நாள்
அண்ணாமலை போன்ற படித்த இளைஞர்கள், அரசியலில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என துரை வைகோ MP வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக முறையில், கொள்கை ரீதியிலான தாக்குதல் இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட தாக்குதல்கள் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், அதுபோன்ற போக்கு அவருக்கும், பாஜகவுக்கும் நல்லதல்ல எனக் கூறினார். அரசியல் களத்தில் தற்போது இபிஎஸ்-அண்ணாமலை இடையே மோதல் போக்கு நிலவுவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.