news

News September 25, 2024

இன்று இடி-மின்னலுடன் மழை: RMC

image

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலோடு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக RMC கணித்துள்ளது. வடதமிழகம், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பொழிய வாய்ப்புள்ளது என்று RMC தெரிவித்துள்ளது. நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், 27, 28ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் RMC கூறியுள்ளது. SHARE IT

News September 25, 2024

இட்லி கடை படத்தில் நான் இல்லை..

image

தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில், ”எனக்கும் தனுஷ் சார் மிகவும் பிடிக்கும், அவருடைய மிகப் பெரிய ரசிகன். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப் படுகிறேன் ஆனால் இப்பொழுது அவர் கொண்டிருக்கும் இட்லி கடை படத்தில் நடிக்கவில்லை” என பதிவிட்டுள்ளார். அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் விளக்கமளித்துள்ளார்.

News September 25, 2024

சத்தீஸ்கரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

image

சத்தீஷ்கர் மாநிலம் சுக்மாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் பாதுகாப்புப்படை வீரர்களின் உதவியுடன் தனிப்படை போலீசார் சிந்தவாகு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு மறைந்து இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புபடையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டதில் 2 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.

News September 25, 2024

செப் 25: வரலாற்றில் இன்று

image

1862 – செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1962 – அல்ஜீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது.
1978 – சான் டியாகோவில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில் 144 பேர் உயிரிழந்தனர்.
1992 – செவ்வாய்க் கோளை நோக்கிய “செவ்வாய் நோக்கி” என்ற விண்கலத்தை நாசா ஏவியது.
2003 – ஜப்பானின் ஒக்காய்டோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 800 பேர் காயமடைந்தனர்.
2020 – எஸ். பி. பாலசுப்ரமணியம் நினைவு தினம்

News September 25, 2024

உக்ரைனை கைவிட மாட்டோம்: ஜோ பைடன்

image

அமைதி நிலவும் வரை உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். U.N பொதுச் சபை கூட்டத்தில் பேசிய பைடன், நேட்டோ அமைப்பு ஒன்றாக நின்றதால் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தோல்வியடைந்தது என்ற அவர், அமெரிக்கா உக்ரைனை ஒருபோதும் கைவிடாது என்றார். மேலும் சூடானில் 17 மாதங்களாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

வருத்தம் தெரிவித்த பரிதாபங்கள் யூடியூப் சேனல்

image

திருப்பதி லட்டு குறித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டு, பின்னர் நீக்கியது குறித்து பரிதாபங்கள் டீம் விளக்கம் அளித்துள்ளது. அதில், கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளியான வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலரின் மணம் புண்பட்டிருப்பதால் வருத்தம் தெரிவித்து காணொளியை நீக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

News September 25, 2024

மீண்டும் கேப்டன் ஆகும் ருதுராஜ்

image

மும்பை அணிக்கு எதிராக இரானி கோப்பையில் விளையாட உள்ள ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் தலைமையிலான அணியில் ஈஸ்வரன், சாய் சுதர்சன், படிக்கல், ஜூரல், இஷான், சுதர், சரண்ஷ் ஜெயின், பிரசித், முகேஷ், யாஷ் தயாள், ரிக்கி புய், ஷஷ்வத், கலீல், ராகுல் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மும்பை – ரெஸ்ட் ஆஃப் இந்தியா இடையிலான போட்டி அக்.1ஆம் தேதி தொடங்க உள்ளது.

News September 25, 2024

நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள்

image

*என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *இந்த உலகில் வாழும் அனைவருக்குமான ஒரு சிறந்த உலகை உருவாக்குவது உங்கள் கைகளில் உள்ளது.
*இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.

News September 25, 2024

விரைவில் அமைதி திரும்பும்..

image

ரஷ்யா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ரஷியா உடனான போரில் அமைதிக்கு மிக அருகில் நெருங்கியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எனவே போரை முடிவுக்குக் கொண்டு வரும் தருவாயில் உள்ளோம் என கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது.

News September 25, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: மக்கட்பேறு. ▶ குறள் எண்: 63 ▶ குறள்: தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். ▶ பொருள்: தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

error: Content is protected !!