India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த 3 சட்டங்களுக்கும், ஹிந்தியில் பெயர் வைத்திருப்பதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மனு தொடுத்திருந்தது. இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், மனு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
விஜய் கன்னத்தில் அவரது தந்தை சந்திரசேகர் பளார் என அறைந்ததாக இயக்குநர் களஞ்சியம் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் நடித்தபோது, தனியாக தங்க அறை ஒதுக்காததால் கோபமடைந்து விஜய் சென்று விட்டார். இதையடுத்து அங்கு வந்த சந்திரசேகர், அனைவர் முன்பும் விஜய் கன்னத்தில் பளார் என அறைந்து அறிவுரை வழங்கியதாக களஞ்சியம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை அக்.6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அக்.2 வரை காலாண்டு விடுமுறை விடப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடுமுறை குறுகிய நாளே இருப்பதால் விடைத்தாளை திருத்த கூடுதல் நாள் தேவை என ஆசிரியர்கள் காேரிக்கை வைத்தனர். இதை பரிசீலித்து விடுமுறையை நீட்டித்து, அக். 7இல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்ததாகத் தகவல் வெளியானது. இத்தகவலை மறுத்துள்ள அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை காவல்துறை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளுக்கு கட்சி சார்பில் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
விற்பனையாளர்களுக்கான தளமாக அமேசான் சிறப்பாக செயல்படுவதாக அந்நிறுவனத்தின் இந்திய துணைத் தலைவர் அபினவ் சிங் தெரிவித்துள்ளார். அதிக தள்ளுபடிகள் தங்கள் விற்பனையை பாதிக்கின்றன என்ற சில்லறை விற்பனையாளர்களின் குற்றச்சாட்டுகள் தவறானதெனக் கூறிய அவர், வியாபாரிகள் மட்டுமே கொள்முதல் ஆர்டர்கள், மார்ஜின்கள் & விலையை அதிகாரப்பூர்வமாக நிர்ணயம் செய்வதாகத் தெரிவித்தார்.
தயாநிதி மாறன் தாெடுத்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளார். தொகுதி வளர்ச்சி நிதியை அவர் முறையாக செலவிடவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார். இதில் இபிஎஸ் தாக்கல் செய்த மனு மீது அக்.16இல் உத்தரவிடப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
பழனி பஞ்சாமிர்தம் குறித்த சர்ச்சை கருத்துக்காக இயக்குனர் மோகன்ஜி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழனிமலை அடிவாரத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கோயில் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றது உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் பதிவான வழக்கில் மோகன்ஜி நேற்று கைதாகி, பின்பு விடுதலை ஆனது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் விரிசல் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், திமுக கூட்டணியில் விரிசலா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணியில் விரிசலோ, சலசலப்பாே இல்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை என்று கூறினார். எக்ஸ் பக்க வீடியோவை விவாதத்துக்கு பலரும் எடுத்து கொண்டதாகவும், அந்த வீடியாேவால் கூட்டணிக்கு சிக்கல் இல்லை என்றும் தெரிவித்தார்.
நாளை மறுநாள் கான்பூரில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பல்வேறு சாதனைகளை படைக்க காத்துள்ளார் அஸ்வின். நான்காவது இன்னிங்சில் 1 விக்கெட் வீழ்த்தினால், 4வது இன்னிங்சில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவர். டெஸ்டில் தற்போது 522 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள அஸ்வின் இன்னும் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினால் நாதன் லயனை (530) பின்னுக்கு தள்ளி 7வது இடம் பிடிப்பார்.
தவெக மாநாடு குறித்து அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், அணி தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும், மாநாட்டிற்கான ஏற்பாடு, தொண்டர்களை அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. தவெக முதல் மாநாடு, விக்கிரவாண்டியில் அக்.27இல் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.