India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தேவையில்லாதது என்ற ஐகோர்ட்டின் பரிந்துரையை அரசு ஏற்றதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், வேறு வழக்குகள் நிலுவையில் இல்லையெனில், உடனடியாக அவரை பிணையில் விடுவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டாஸ் பாய்ந்தது.
வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை கிளறி, வறுத்து தனியே எடுத்து வைக்கவும். மற்றொரு வாணலியில் வரகு அரிசியை போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு அதனை மூழ்குமளவுக்கு பால் விட்டு வேகவிடவும். அதனுடன் சர்க்கரைப் பாகினை வடிகட்டி சேர்த்து கிளறவும். இத்துடன் வறுத்து வைத்த கலவையை சேர்த்து, இறக்கினால் சுவையான வரகரிசி பாயாசம் ரெடி.
ஒவ்வொரு தனி நபருக்கும் கருத்து சொல்ல சுதந்திரம், உரிமை உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக இல்லாமல் திமுக கூட்டணி வட மாவட்டங்களில் வெல்ல முடியாது என ஆதவ் அர்ஜூனா பேட்டி அளித்தது விவாதப் பொருளானது. இது குறித்து பேசிய திருமாவளவன், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கருத்து இருந்தாலும், இறுதியில் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்சி கட்டுப்படும் என்றார்.
ஹிமாச்சலில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர் பெயர், முகவரி ஆகிய விவரங்களை காட்சிப்படுத்துமாறு அம்மாநில காங். அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை அமல்படுத்த 7 பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உ.பி. அரசு உணவகங்களின் வேலையாட்கள் முகக்கவசம், கையுறை அணிவதை கட்டாயமாக்கியது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தான் வென்ற 2 வெண்கலப் பதக்கங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது என மனு பாக்கர் தெரிவித்துள்ளார். தன்னை எந்த நிகழ்ச்சிக்கு அழைத்து பதக்கங்களைக் காட்டச் சொன்னாலும், அதை பெருமையுடன் செய்வதாகக் கூறிய அவர், தனது அழகான பயணத்தை பகிர்ந்து கொள்ள இதுதான் வழி எனத் தெரிவித்துள்ளார். எங்கு சென்றாலும் பதக்கத்தை காட்டிக் கொண்டிருப்பதாக சிலர் விமர்சித்தது குறித்து அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் புகையிலைக்கு அடிமையாகாமல் இருக்க, முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை விற்கப்படுவதை தடுத்து, தயாரிப்பு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், குட்கா விற்பனை தொடர்பாக சட்டத்திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன்’ படத்தில் நடித்தவர். அவருக்கும், தொழில் அதிபரான மொஹ்சின் அக்தர் மிர் என்பவருக்கும் 2016ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இந்நிலையில், காதல் கணவரை பிரிய ஊர்மிளா முடிவெடுத்துள்ளார்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நடைமுறை யதார்த்ததோடு சமூகத்தை அணுகுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அன்பான மனமும், பிறருக்கு உதவும் இரக்க குணமும் இருந்தாலும் முன்கோபத்தில் வார்த்தைகளை கொட்டித்தீர்த்து விடுவீர்கள். ஆடம்பரமாகச் செலவு செய்து, தேசாந்திரியாக ஊர் சுற்றுவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பீர்கள் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
குஜராத் மாணவர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் 498 ரன்கள் குவித்து சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். பள்ளிகளுக்கு இடையே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், செயின்ட் சேவியர்ஸ் வீரர் துரோனா தேசாய் 320 பந்தில் 498 ரன்கள் விளாசினார். இதில் 86 பவுண்டரிகள், 7 சிக்சர்களும் அடங்கும். இதற்குமுன்பு, தானாவடே (1,009), பிருத்வி ஷா (546), ஹவிவல்லா (515), சமன்லால் (506), அர்மான் (498) ரன்கள் குவித்துள்ளனர்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் வரும் 28ஆம் தேதி சிறப்பு பூஜை செய்யவுள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டில் மாட்டின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். இதை மறுத்துள்ள ஜெகன் மோகன், பொய்கள் மூலம் திருப்பதி கோயிலுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதற்காக மாநிலம் முழுவதும் பூஜைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.