news

News September 25, 2024

சீனா மட்டும் தான் கெத்தா.. தயாராகும் இந்தியா..!

image

நீண்ட தூரம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை இந்தியா சோதனை செய்ய உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை சோதனை நடத்தப்பட உள்ளது. 1,700 கி.மீ தூரம் என்ற அளவில் சோதனை மண்டலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை சீனா சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

News September 25, 2024

பல இடங்களில் சதம் அடித்த வெயில்!

image

தமிழகத்தில் பல இடங்களில் வெயில் சதம் அடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மேலும், ஈரோடு 102, தூத்துக்குடி 101, கரூர் பரமத்தியில் 101, நெல்லையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெயில் சுட்டெரித்தாலும், சில பகுதிகளில் மழை பெய்தது.

News September 25, 2024

ஆசியாவின் 3வது சக்திவாய்ந்த நாடு இந்தியா

image

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி, இளைஞர் சக்தி, உலக அளவில் அரசின் செல்வாக்கு போன்ற அளவீடுகளின்படி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின், பொருளாதார வளர்ச்சியில் 4.2 புள்ளிகள் உயர்ந்து இந்தியா வலுவான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

News September 25, 2024

கைதிகள் வீடியோ காலில் பேசலாம்!

image

சிறைக் கைதிகளுக்கு வங்கிக் கணக்கு மற்றும் வீடியோ கால் பேசும் வசதி அக். 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயால் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. கைதிகள் உறவினர்களுடன் மாதத்திற்கு 120 நிமிடம் வரை வீடியோ மற்றும் ஆடியோ காலில் பேச வழிவகை செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

News September 25, 2024

SPB பெயரில் சாலை: அறிவித்தார் முதல்வர்

image

பாடகர் SPB வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள வீதிக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். எஸ்பிபி-யின் 4ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவர் வாழ்ந்த வீதிக்கு SPB சாலை என பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று, நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவுக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 25, 2024

SBI வங்கியில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு

image

SBI வங்கியில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள 800 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்.சி. முடித்த 25 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் அக். 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ₹48,480 முதல் ₹93,960 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் sbi.co.in/web/careers என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News September 25, 2024

RSS vs BJP: இது எங்க குடும்ப பிரச்னை..!

image

RSS-ன் தயவு இல்லாமல் பாஜகவால் தனித்து இயங்க முடியும் என ஜெ.பி.நட்டா சில மாதங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இந்நிலையில், RSS மூத்த தலைவர் சுனில் அம்பேத்கர் நட்டாவின் கருத்துக்கு தற்போது பதிலளித்துள்ளார். இது குடும்ப பிரச்னை எனவும், இது தங்களுக்குள்ளாகவே தீர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கூறியுள்ளார்.

News September 25, 2024

மேயர் பிரியாவிற்கு லிப்ஸ்டிக்கில் டஃப்.. பணியிட மாற்றம்

image

சென்னை மாநகராட்சியின் முதல் தபேதார், மேயர் பிரியாவுக்கு டஃப் கொடுத்ததால் தூக்கியடிக்கப்பட்ட சம்பவம் சோஷியல் மீடியாவில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. பிரியாவின் தபேதார் மாதவி (50) “லிப்ஸ்டிக்” பூசி பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரிடம் லிப்ஸ்டிக் போட்டு பணிக்கு வர வேண்டாம் என உத்தரவை மீறியதால், மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் சிங்காரச் சென்னையை சுழன்றடிக்கிறது.

News September 25, 2024

சாம்சங் பிரச்னை தொடர்பாக முதல்வருக்கு கடிதம்

image

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்த பிரச்னையை விரைவாக தீர்க்க முதல்வர் ஸ்டாலினை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ள அவர், உற்பத்தி துறையில் பாதிப்பு ஏற்படாத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், விரைவான, இணக்கமான தீர்விற்கு மாநில அரசு தலையிட வேண்டுமெனவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

‘கேம் சேஞ்சர்’ 2ஆவது பாடல் அப்டேட்

image

‘கேம் சேஞ்சர்’ படத்தின் 2வது பாடல் “ரா மச்சா மச்சா…” ப்ரோமோ வீடியோ வரும் 28ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

error: Content is protected !!