news

News August 30, 2024

SGB திட்டத்தை மூடும் அரசு?

image

தங்கப் பத்திரங்களை (SGB) வெளியிடும் திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2.5% வட்டி, ஜீரோ GST வரி போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ள தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு (8 ஆண்டு காலம்) முதிர்வுத் தொகையை அரசு வழங்க வேண்டியுள்ளது. தங்கம் மதிப்பு (40%) உயர்வு, நிதிச்சுமையால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவதால், அரசு இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News August 30, 2024

லாபத்தை அள்ளி தரும் டாப் 5 முதலீடுகள்!

image

பணத்தை சேர்த்து வைப்பதை விட முதலீடு செய்தால், அது பல மடங்கு பெருகும். டாப் 5 முதலீடுகள்: 1. பங்குகளில் முதலீடு. எந்த பங்கு நல்ல லாபம் தரும் என்பதை பார்த்து அதில் முதலீடு செய்யலாம். 2. தங்கத்திலோ அல்லது தங்கப் பத்திரத்திலோ முதலீடு செய்யலாம். 3. ரியல் எஸ்டேட் முதலீடு. 4. அதிக தொகை இருந்தால் வங்கி இருப்பில் (FD) போடலாம். 5. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

News August 30, 2024

USல் இருந்து மேலும் முதலீடுகள் ஈர்க்கப்படும்: ஸ்டாலின்

image

San Franscisco சென்ற முதல் நாளிலேயே நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலீடுகள் கிடைத்துள்ளதாக CM ஸ்டாலின் நெகிழ்ந்துள்ளார். 4,100 வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் ₹900 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் உறுதி தெரிவித்தார். மேலும், முதலீட்டை ஈர்க்கும் வேகம் தீவிரப்படுத்தப்படும் என்றும் x பதிவில் கூறியுள்ளார்.

News August 30, 2024

வக்ஃபு வாரிய திருத்த மசோதா: கருத்து கேட்கும் நிலைக்குழு

image

வக்ஃபு வாரிய திருத்த மசோதா 2024 குறித்து நாட்டு மக்களிடம் நாடாளுமன்ற நிலைக்குழு கருத்து கேட்டுள்ளது. மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த மசோதா, ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் குழு, பொதுமக்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை தபால் மூலம் அனுப்ப கேட்டு கொண்டுள்ளது. உங்கள் கருத்து என்ன?

News August 30, 2024

Current Affairs: கேள்விகளுக்கு பதிலளியுங்கள்

image

1. கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ் என்றழைக்கப்படும் நகரம் எது? 2. இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையான பொக்ரானை எந்த ரகசிய குறியீட்டில் அழைத்தார்கள்? 3. எத்தனை வயதுக்குட்பட்ட குழந்தைகளை அபாயகரமான வேலைகளில் அமர்த்துவதை இந்திய சட்டம் தடுக்கிறது? 4. பூமியின் நுரையீரல் என எதை அழைக்கிறோம் ? விடைகளை கமெண்ட் பண்ணுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News August 30, 2024

வங்கதேச அணி லேசுப்பட்டது அல்ல… ரெய்னா எச்சரிக்கை

image

வங்கதேச அணி லேசுப்பட்டது இல்லை என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா எச்சரித்துள்ளார். வங்கதேச அணி வரும் 19ம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதுகுறித்து பேசிய ரெய்னா, வங்கதேசத்திடம் சிறந்த சுழல்பந்து வீச்சு உள்ளது. எனவே, சாதாரணமாக கருதக்கூடாது. வங்கதேச தொடர், ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக இந்தியாவுக்கு உதவும் என கூறினார். உங்கள் கருத்து என்ன?

News August 30, 2024

6 மாதங்களில் 3ஆவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்

image

கடற்படையில் இன்னும் 6 மாதங்களில் 3ஆவது அணுசக்தி நீர்மூழ்கி இணைக்கப்பட உள்ளது. 2ஆவது அணுசக்தி நீர்மூழ்கி INS ARIGHAT நேற்று இணைக்கப்பட்டது. இதையடுத்து, 3ஆவது நீர்மூழ்கி INS ARIDHAMAN தயாரிக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறுகிறது. INS ARIGHATஇல் 3,500 கி.மீ. தூரம் ஏவக்கூடிய ஏவுகணை கொண்டு செல்லலாம், ஆனால் INS ARIDHAMANஇல் அதைக் காட்டிலும் கூடுதல் தூர ஏவுகணையை எடுத்து செல்ல முடியும்.

News August 30, 2024

மா.செக்கள் மீது இபிஎஸ் அதிருப்தி

image

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மீது இபிஎஸ் கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் குறித்து அண்ணாமலை மிக மோசமாக விமர்சித்திருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கு அதிமுக தலைவர்கள் அதிகம் எதிர்வினையாற்றவில்லை. ஒருசில தலைவர்களே கண்டனம் தெரிவிக்க, சில மாவட்டங்களிலே போராட்டம் நடந்ததும், அவரது அதிருப்திக்கு காரணம் என தெரிகிறது.

News August 30, 2024

ரஷித் கான் விலகலுக்கு இதுதான் காரணம்?

image

NZ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள AFG அணியில் நட்சத்திர வீரர் ரஷித் கானின் பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து ஆப்கன் கிரிக்கெட் வாரியம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில், அதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. T20 Shpageeza Leagueஇல் விளையாடியபோது ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர், NZ தொடரில் இருந்து விலகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News August 30, 2024

சோஷியல் மீடியாவில் பாஜகவினர் மோதல்

image

அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் சமூகவலைதளத்தில் பரஸ்பரம் விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இபிஎஸ் மீதான அண்ணாமலையின் குற்றச்சாட்டை தமிழிசை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதைக் கண்டித்து அண்ணாமலையின் ஆதரவாளரான பாஜக மாநிலச் செயலாளர் சூர்யா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவருக்கு தமிழிசையின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!