India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘கூலி’ படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென படக்குழு வட்டாரம் தெரிவிக்கிறது. பான் இந்திய திரைப்படமான இதில் நாகர்ஜூனா (தெலுங்கு), செளபின் சாஹிர் (மலையாளம்) ஆகியோர் நடிக்க கமிட்டாகி உள்ளனர். இந்தியிலிருந்து யார்இணைந்தால் மாஸாக இருக்கும் என கமெண்ட்டில் பதிவிடுங்கள்!
தமிழக பாஜகவை நிர்வகிக்க மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், சக்கரவர்த்தி, கனகசபாபதி, முருகானந்தம், ராம ஸ்ரீநிவாசன், SR சேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உயர்கல்விக்காக லண்டன் சென்றுள்ள நிலையில், அவரது பணிகளை கவனிக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6 பேரும் மாநில மையக் குழுவுடன் ஆலோசித்து ஒவ்வொரு மண்டலமாக கட்சிப் பணியை கவனிக்க உள்ளனர்.
கவிதாவுக்கு ஜாமீன் வழங்கியது குறித்த கருத்துக்காக சுப்ரீம் கோர்ட்டிடம் (SC) தெலுங்கானா CM ரேவந்த் ரெட்டி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திய நீதித்துறை மீது மிகுந்த மரியாதை, நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, AAP-யின் சிசோடியாவுக்கு 15 மாதம் கழித்து ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், கவிதாவுக்கு 5 மாதத்தில் வழங்கப்பட்டதாக ரெட்டி தெரிவித்த கருத்துக்கு SC அதிருப்தி வெளியிட்டிருந்தது.
2025ஆம் ஆண்டு முதல் தேர்வு அறைகளில் சிசிடிவி கேமரா பொருத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க முன்னெச்சரிக்கை எடுப்பது குறித்து ஜூன் மாதம் சிபிஎஸ்இ ஆலோசனை நடத்தியது. அப்போது தேர்வு மையங்கள், அறைகளை வீடியோ ரெக்கார்ட் செய்து, பதிவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சிசிடிவி கேமரா பொருத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. அதில் செலவில் பாதியை ஏற்பதாக கூறியுள்ளது.
ஜியோ நிறுவனம் ₹448 கட்டணத்தில் புது ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் 28 நாள்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு வசதி, தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை ஜியோ அளிக்கிறது. இத்திட்டத்தின்கீழ், சோனி லிவ், ஜீ 5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன்நெக்ஸ்ட், ஜீயோ சினிமா உள்ளிட்ட 13 ஓடிடிகளை இலவசமாக அளிக்கிறது. SHARE IT
உடலில் வாய்வு அதிகமாக சேரத் தொடங்கினால் உடலில் பல இடங்களில் குத்தலும், குடைச்சலுமாக வேதனை தரும். இவர்கள் 6 பூண்டு பற்களை எண்ணெய் எதுவும் சேர்க்காமல் வறுத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு, வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் செய்து வந்தாலே வாய்வு தொல்லை காணாமல் போகும். கொழுப்பை கரைப்பதற்கும், ரத்த அழுத்தத்திற்கும் கூட பூண்டு மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
காசாவில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி செலுத்த இடைக்கால போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க இஸ்ரேல் மறுத்துள்ளது. காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த UNRWA அமைப்பு திட்டமிட்டிருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக காசாவில் உள்ள குழந்தை ஒன்று டைப்-2 வகை போலியோ வைரசால் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக WHO புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் ₹1,000 கோடி வசூலித்து, பிரமாண்ட வெற்றிப்பெற்ற ‘கல்கி 2898 AD’ 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்குமென அப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் தெரிவித்துள்ளார். மாஸ்கோ திரைப்பட விழாவில் பேசிய அவர், கல்கி முதல் பாகத்தைவிட 2ஆம் பாகம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றார். கல்கி-2 மட்டும் இருவேறு பாகங்களாக 2028ஆம் ஆண்டில் வெளியாகுமென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டிராய்டு போன்களை ஒப்பிடுகையில், ஐபோன்களை புதிதாக பயன்படுத்துபவர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க திணறுவார்கள். உங்கள் ஐபோனில் Setting-க்குள் சென்று Accessibility என்பதை தேர்ந்தெடுங்கள். அதில் Touch-க்குள் சென்று Back Tap-ஐ செலக்ட் செய்து Double Tap அல்லது Triple Tap-இல் Screen Shot-ஐ Assign செய்திடுங்கள். இப்போது போனின் பின்னால் இரு முறை தட்டினாலே ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவிடும்.
ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிஷோர் என்பதும், சென்னை OMRல் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. நேற்றைய தினம் அவரின் புகைப்படத்தை ரயில்வே காவல்துறை வெளியிட்டிருந்தது. கடந்த 25ம் தேதி ரயிலில் சென்னை வந்த <<13964303>>பெண் என்ஜீனியர்<<>> பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Sorry, no posts matched your criteria.