news

News September 26, 2024

‘பரிதாபங்கள்’ கோபி – சுதாகருக்கு சிக்கல்!

image

திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பாக ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த வீடியோவை பரிதாபங்கள் டீம் நீக்கியது. இந்நிலையில், இந்த வீடியோவால் தங்கள் மனம் புண்பட்டதாக கூறி பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது ஆந்திர போலீஸ் டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News September 26, 2024

BREAKING: செந்தில் பாலாஜி விடுதலையாவதில் சிக்கல்

image

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பம் உள்ளதாக சென்னை அமர்வு நீதிமன்றம் கூறியுள்ளது. பிணை உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம், ED விசாரணை அதிகாரி முன் தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்த, விசாரணை அதிகாரி முன் எப்படி தாக்கல் செய்ய முடியும் என செந்தில் பாலாஜி தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலையாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

News September 26, 2024

அரசு கலைக் கல்லூரிகளில் ஓய்வறை அமைக்க உத்தரவு

image

தமிழகம் முழுவதும் உள்ள Arts காலேஜில் மாணவிகள் ஓய்வெடுக்க, தனி அறை அமைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓய்வறை கட்டுவதற்காக ₹8.55 கோடியை 3 வாரங்களில் ஒதுக்கவும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. முன்னதாக, அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள சானிடரி நாப்கின் எந்திரங்கள் பராமரிப்பின்றி இருப்பதாக வெளியான செய்தி அடிப்படையில், ஐகோர்ட் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது.

News September 26, 2024

Recipe: சாமை கீர் செய்வது எப்படி?

image

வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ், பாதம், பிஸ்தா, ஏலக்காய் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை கிளறி, வறுத்து தனியே எடுத்து கொள்ளவும். மற்றொரு வாணலியில் சாமையை போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு அதனை மூழ்குமளவுக்கு பால் விட்டு வேகவிடவும். அதனுடன் சர்க்கரை, பால் கோவா, மில்க் மெய்ட் சேர்த்து கிளறவும். இத்துடன் வறுத்து வைத்த கலவையை சேர்த்து, சிறிது நேரத்துக்கு பின் இறக்கினால் சுவையான சாமை கீர் ரெடி.

News September 26, 2024

சற்று முன்பு டெல்லி புறப்பட்டார் ஸ்டாலின்!

image

தமிழக CM ஸ்டாலின் சற்று முன் டெல்லி புறப்பட்டார். தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி கொடுக்காமலும், அனுமதி வழங்காமலும் மத்திய அரசு இருந்து வருவதாக அமைச்சர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், டெல்லிக்கு செல்லும் ஸ்டாலின், நாளை காலை 11 மணிக்கு பிரதமரை நாளை சந்திக்கவுள்ளார். அப்போது தமிழக திட்டங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் பேசுவார் எனத் தெரிகிறது.

News September 26, 2024

விரதம்லாம் இல்ல.. உடல் எடையை குறைக்க பயிற்சி

image

உடல் எடையை குறைக்கவே பவன் கல்யாண் விரதம் இருப்பதாக சீமான் விமர்சித்துள்ளார். திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்தி நாகரீகமாக பதிலளித்ததாகவும், யாரையும் காயப்படுத்தும் நோக்கில் அவர் பேசவில்லை எனவும் குறிப்பிட்ட சீமான், இதற்காக பவன் கல்யாண் கோபப்பட்டதில் அர்த்தமில்லை என்றார். முன்னதாக மெய்யழகன் பட தெலுங்கு புரமோஷனில் லட்டு குறித்து கார்த்தி பேசியதை பவன் கல்யாண் கண்டித்திருந்தார்.

News September 26, 2024

சற்று நேரத்தில் வெளியே வருகிறார் செந்தில் பாலாஜி!

image

பண மோசடி வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, ஜாமீன் நடைமுறைகளை முடித்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வரவுள்ளார். அவரை வரவேற்பதற்காக புழல் சிறை வாசலில் நூற்றுக்கணக்கான திமுகவினர் மலர் மாலைகள், பட்டாசுகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

News September 26, 2024

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது: அரசு

image

காலாண்டு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.28 முதல் அக்.6 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், பள்ளி திறக்கும் நாள் அன்றே திருத்திய விடைத்தாள்களை மாணவர்களுக்கு அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

News September 26, 2024

பீகாரில் சோகம்: நீரில் மூழ்கி 46 பேர் பலி

image

பீகாரில் ஜீவித்புத்ரிகா என்ற புனித நீராடும் நிகழ்வின்போது, 46 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் 15 மாவட்டங்களில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடலின்போது இத்துயரங்கள் நிகழ்ந்துள்ளன. பலியானவர்களில் 37 குழந்தைகளும் அடக்கம். இத்துயர சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள அம்மாநில அரசு, இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதாக கூறியுள்ளது.

News September 26, 2024

முன்பு துரோகி இப்போது தியாகியா? தமிழிசை

image

செந்தில் பாலாஜி உறுதியானவர் என ஸ்டாலின் பாராட்டுவது வேடிக்கையாக உள்ளதாக தமிழிசை விமர்சித்துள்ளார். இது குறித்து Xஇல் பதிவிட்டுள்ள அவர், எதிர்க்கட்சியில் இருந்தபோது துரோகியாக தெரிந்த SB, திமுகவில் சேர்ந்த பிறகு தியாகியாகிவிட்டாரா என வினவியுள்ளார். மேலும் எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்துகொண்டு, எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என CM கூறுவதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!