India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
RAILTEL நிறுவனத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் நவரத்தினா அந்தஸ்து வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள நவரத்தின நிறுவனங்களின் பட்டியலில் இந்நிறுவனம் 22ஆவதாக இணைந்துள்ளது. அதேபோல, SECI, NHPC, SJVN ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த நவரத்தின நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நவரத்தினா அந்தஸ்து வழங்கப்படும்.
மகளிர் உரிமைத் தொகை (₹1000) திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இத்திட்டத்தில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, அரசு, கார்ப்பரேஷன் வேலையில் உள்ள பெண்கள் தவிர, மற்ற அனைவருக்கும் ₹1000 வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும், புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசு பணியில் இருந்து காலமான ஆண்களின் மனைவிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிகிறது.
‘தி கோட்’ படத்தின் 4ஆவது பாடலுக்கு ‘மட்ட’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலை எழுதிய கவிஞர் விவேக், பாடலின் சில வரிகளையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘மச்சி கெடா மஞ்ச சட்ட.. மம்டி வரான் பள்ளம் வெட்ட.. மட்ட மட்ட ராஜ மட்ட.. எங்க வந்து யாரு கிட்ட..’ என வரிகளை பகிர்ந்து, ஆட்டநாயகனின் நடனத்திற்காக காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார். நாளை மாலை 6 மணிக்கு பாடல் வெளியாக உள்ளது.
வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் துடிப்பான, நேர்மறையான, மகிழ்ச்சியானவராக இருப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். விவாதங்களில் இருந்து விலகி இருப்பார்கள். ஆனால், பேச வேண்டிய நேரத்தில் ஒளிமறைவின்றி வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள். பார்ட்டி, ஷாப்பிங் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவராகவும் இருப்பார்கள் என்கிறார்கள். உங்க குணநலம் Match ஆகுதா? கமெண்ட்ல சொல்லுங்க.
சீரியலில் ஒரு காட்சியை கஷ்டப்பட்டு நடித்து கொண்டிருந்தபோது, அருகில் இருந்த ஒரு நடிகை காதலனுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தது தனக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். உயிரை கொடுத்து நடிக்கும் போது சிரித்து பேசலாமா என கேட்டபோது, ”எப்படியும் டப்பிங் தான பேச போறீங்க” என அலட்சியமாக கூறியதால், நடிப்புக்கு மரியாதை இல்லை என நடிப்பில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார்.
பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான வழக்கறிஞர்கள் 4 பேருக்கும் தடை விதித்து தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொலையில் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் முக்கிய மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், 4 பேரும் வழக்கு முடியும் வரை வழக்கறிஞர்களாக பணியாற்றக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கலைக்க வேண்டும் என அம்மாநில பாஜக MLA விஜேந்தர் குப்தா, குடியரசு தலைவரிடம் மனு அளித்தார். டெல்லி அரசு அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். குடியரசு தலைவர் புகாரை ஏற்றுக்கொண்டு, டெல்லி அரசு மீது நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாகவும் நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக APP-BJP இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.
லேண்ட் ரோவர் நிறுவனத்திடம் 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு ‘தூம்’ பட நடிகை நிமி சென் வழக்கு தொடர்ந்தார். 2020இல் வாங்கிய தனது கார் அடிக்கடி பழுதாவதாகவும், காரின் சன்ரூஃப், சவுண்ட் சிஸ்டம், கேமரா உள்ளிட்டவை சரியாக செயல்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். கார் நிறுவனம் இது தொடர்பாக முறையாக விளக்கமளிக்கவில்லை என்றும், தனது காரை மாற்றிக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி புரூனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப். 3 – 4ல் புரூனேவுக்கும், 4 – 5ல் சிங்கப்பூருக்கும் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புரூனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் ரஷ்யா, உக்ரைன், போலந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (9 மணி வரை) 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி நாமக்கல், மயிலாடுதுறை, தென்காசி, குமாரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். எனவே, வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.