India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் முதல்முறையாக F4 கார் ரேஸ் பந்தயம் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்த உதயநிதியை, கமல் மற்றும் A.R.ரஹ்மான் வாழ்த்தியுள்ளனர். F4 பந்தயத்தால் உற்சாகம், தமிழக விருந்தோம்பல், விளையாட்டுத் திறனை காண ஆவலாக உள்ளதாக கமல் கூறியுள்ளார். இதேபோல சென்னை F4 ரேஸ், இந்தியாவிற்கே உற்சாகம் அளிக்கிறது என ரஹ்மான் தனது X பதிவில் வாழ்த்தியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்டல சொல்லுங்க.
தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு, அபாயகரமான அளவுக்கு அதிகரித்து வருவதாக ஆளுநர் R.N.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில், போதை பொருள் புழக்கத்தை குறைக்க வேண்டும் என நினைக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், முற்றிலும் அதனை ஒழித்து வெளியேற்ற வேண்டும் என மாணவர்களிடம் கோரிக்கை வைத்தார். முன்னதாக, சென்னை WCC கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது இதனைப் பேசினார்.
*நாள்தோறும் 3 முதல் 5 கேரட் சாப்பிடுவதால், உடலின் நிறம் மாறும், கண் பிரச்னை நீங்கும், முடி வளர்ச்சி பெறும், ஆண்மை அதிகரிக்கும்.
*நாள்தோறும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் மாயமாகிப் போகும்.
*இரவில் சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து, அந்த நீரை நாள்தோறும் பருகி வர (ஓராண்டுக்கு) சர்க்கரை வியாதி உங்களை அண்டாது.
*கமலா ஆரஞ்ச் கிடைக்கும்போதெல்லாம் உண்டால், உதடு புற்றுநோய் (Mouth cancer) வராது
இபிஎஸ்ஸுக்கு பதில், முன்னாள் சபாநாயகர் தனபாலை CM ஆக்கலாம் என சசிகலாவிடம் கூறியதாக, அவரது சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். தனது இந்தக் கருத்தை விசிக தலைவர் திருமாவளவன் ஆதரித்த நிலையில், அதிமுகவில் இருந்த 35 தலித் MLAக்கள் அதனை ஏற்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா ஜெயிலுக்கு சென்ற நிலையில், இபிஎஸ்ஸை அவர் TN முதலமைச்சராக்கினார்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல்
▶குறள் எண்: 38
▶குறள்: அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
▶பொருள்: தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.
இந்திய ஆண்களிடம் ஏதோ ஒரு பிரச்னை உள்ளதாக சசிதரூர் MP தெரிவித்துள்ளார். நாள்தோறும், பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த அவர், இந்த விஷயத்தை நம்மால் நிறுத்த முடியவில்லை என்றால் கண்டிப்பாக ஏதோ பிரச்னை இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி நிர்பயா கேஸ் முதல் மே.வங்கம் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வரை அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், சச்சின் டெண்டுல்கரை சந்தித்து ஆசி பெற்றார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், சச்சினின் பயணம் எனக்கும், இலக்கை நோக்கி பயணிப்பவர்களுக்கும் உந்து சக்தி எனக் கூறியுள்ளார். இதேபோல, பெரிய இலக்குகளை நோக்கி கனவுகளுடன் முன்னேறும் இளம் பெண்களுக்கு மனுவின் வெற்றி உந்து சக்தி என சச்சின் தெரிவித்துள்ளார்.
*1969 – இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜவகல் ஸ்ரீநாத் பிறந்த நாள்
*1979 – சினிமா இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள்
*1950 – இந்திய கணிதவியலாளர் சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை நினைவு நாள்
*1957 – ஐக்கிய ராஜ்ஜியத்திடம் இருந்து மலேசியா விடுதலை பெற்றது
*1997 – வேல்ஸ் இளவரசி டயானா, பாரிசில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார்.
பாகிஸ்தானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்திய காலமெல்லாம் முடிந்துவிட்டது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இனிமேல் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினை இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒருசேர நடக்காது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார். மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாதம் என்பது தொழில்முறையாக மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
▶ஆகஸ்ட்-31 (ஆவணி 15) ▶வெள்ளிக்கிழமை ▶நல்ல நேரம்: 10:45-11:45 AM & 04:45-05:45 PM ▶கெளரி நேரம்: 12:15-01:15 AM & 09:30-10:30 PM ▶இராகு காலம்: 09:00-10:30AM ▶எமகண்டம்: 01:30-03:00 PM ▶குளிகை: 06:00-07:30 AM ▶திதி: 04.42 AM வரை துவாதசி பின்பு திரியோதசி ▶நட்சத்திரம் 10.14 PM வரை பூசம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶அமிர்தாதி யோகம்: மரணயோகம், சித்தயோகம், ▶சந்திராஷ்டமம்: 10.14PM வரை மூலம்.
Sorry, no posts matched your criteria.