India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகின் தலைசிறந்த டாப் 50 சிக்கன் ரெசிபி வகைகளை Taste Atlas நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் முதல் 10 இடங்களில், பட்டர் சிக்கன் (4), டிக்கா (6), தமிழ்நாட்டின் சிக்கன் 65 (10) ஆகிய 3 இந்திய உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன. முதலிடத்தில் கொரியன் சிக்கின் உள்ளது. தமிழ்நாட்டின் வாரயிறுதி நாட்களில் கோழிக்கறி என்பது ஓர் அங்கமாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். உங்களுக்கு பிடித்த சிக்கன் ரெசிபி என்ன?
இந்தி எதிர்ப்பு என்றால் அது தமிழ்நாடு தான் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், இந்தியை ஒருபோதும் தமிழகம் எதிர்த்ததில்லை என்பதே நிதர்சனம். இந்தி திணிப்பை மட்டுமே தமிழகம் எதிர்த்திருக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம்தான் இந்த செய்தி. அதாவது, இந்தி பிரச்சார சபா வாயிலாக இந்தி தேர்வுகளை எழுதியதில் தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. இந்திக்கு தமிழர்கள் எதிரி அல்ல என்பதற்கு இதுவே சான்று.
மலையாள நடிகர்கள் மீது நடிகைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து, நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து மோகன் லால் ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் குறித்து பேசிய அவர், “நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. இங்கேதான் இருக்கிறேன். சில காரணங்களால் தற்போது கேரள திரையுலகத்தின் பெயர் கலங்கப்படுகிறது. நடிப்புக்கும், கலைக்கும் கேரள சினிமா பெயர் போனது. அதை இழிவுப்படுத்தாதீர்கள்” எனக் கூறினார்.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாள்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. வட தமிழகத்தில் 30 – 40 KM வேகத்தில் வலுவாக தரைக்காற்று வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது. மேலும், சென்னையில் 2 நாள்களுக்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இன்று 10.15 மணிக்கு <<13981948>>Current Affairs<<>>இல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவை. 1. Little Man and Fat Boy. 2. அமெரிக்கா. 3. இரண்டாம் பகதூர் ஷா. 4. குளவி. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள்தான் சமூகத்தில் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. பெண்களின் பாதுகாப்புக்காக பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை தீவிரமாக செயல்படுத்துவதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து குஷ்பு அளித்துள்ள ஒரு பேட்டியில், “பல வருடங்களுக்கு முன் ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளர் ஒருவர் என் ரூமுக்குள் வந்து அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசினார். உடனே, என் செருப்பைக் கழட்டி, இதோட சைஸ் 41. இதை நான் கழட்டட்டுமா என்று கேட்டேன். அவர் அங்கே இருந்து சென்று விட்டார்” எனக் கூறினார்.
ஷம்பு எல்லையில் நடைபெற்றுவரும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் 200 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் களத்திற்கே வந்து போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார். டெல்லிக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்ததையடுத்து, விவசாயிகள் பிப். 13 முதல் அங்கு போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் இருந்து சேவாக்கை நீக்கிவிடுவதாக சவுரவ் கங்குலி மிரட்டியதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கிரிக்கெட் தாதா’ கங்குலி குறித்து பேசிய அவர், “2003இல் கங்குலி கேப்டனாக இருந்தபோது, தொடர்ந்து 9 போட்டிகளில் சேவாக் அரைசதம்கூட அடிக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த கங்குலி, அவரை மிரட்டினார். தொடர்ந்து, மொஹாலியில் சேவாக் 130 ரன் எடுத்தார்” எனத் தெரிவித்துள்ளார்
செல் நிறுவனங்களில் பதிய வங்கிகளுக்கு அளித்த அவகாசத்தை செப். 30 வரை TRAI நீட்டித்துள்ளது. மோசடி URL, OTT லிங்க் கொண்ட SMS-களை தடுக்கும் நோக்கில் அனைத்து செல் நிறுவனங்களிலும் ஆக.31க்குள் பதிய TRAI உத்தரவிட்டு இருந்தது. இதனால் வங்கிகளின் SMSகள் வராது பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. எனினும், சிஸ்டமில் அப்டேட் செய்ய வங்கிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று TRAI அவகாசம் அளித்ததால், SMS சேவை பாதிக்கப்படாது.
Sorry, no posts matched your criteria.