news

News September 27, 2024

ஜெகனை யாரும் தடுக்கவில்லை: சந்திரபாபு

image

ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளவர்கள் திருமலைக்கு வரலாம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தான் திருமலைக்கு செல்வதை ஆந்திர அரசு தடுப்பதாக ஜெகன் மோகன் குற்றஞ்சாட்டிய நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்த சந்திரபாபு நாயுடு, அவரை யாரும் தடுக்கவில்லை என்றார். மேலும், இந்து மத உணர்வு புண்படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

News September 27, 2024

பாரம்பரியம், ஆன்மிகம்: TN-க்கு 2 விருதுகள்

image

இரண்டு தமிழக கிராமங்களுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டி 2024-க்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் 8 பிரிவுகளின் கீழ் 36 கிராமங்கள் வெற்றி பெற்றுள்ளன. பாரம்பரியம் பிரிவில் கீழடி, ஆன்மிக மற்றும் ஆரோக்யம் பிரிவில் மேல் கலிங்கப்பட்டி ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

News September 27, 2024

மிரட்டலான ‘தண்டகாரண்யம்’ போஸ்டர்

image

‘தண்டகாரண்யம்’ படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. அட்டகத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகும் இப்படத்தை, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ பட இயக்குநர் அதியன் ஆதிரை இயக்குகிறார். ஒரு நாட்டை பாதுகாக்க வெறும் துப்பாக்கி, பீரங்கி, அணுகுண்டுகளால் மட்டுமே முடியாது என்ற வாசகத்தை குறிப்பிட்டு, இந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

News September 27, 2024

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. திருவள்ளூர், விருதுநகர், திருப்பத்தூர், வேலூர், தி.மலை, ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

News September 27, 2024

2025 IPL: பிசிசிஐ திடீர் ட்விஸ்ட்..!

image

2025 IPL சீசனில் 74 போட்டிகளை நடத்த BCCI முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2023-27 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்தை கடந்த 2022ல் BCCI விற்றது. அதில் 2025-ல் 84 போட்டிகள் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. அதில் இருந்து 10 போட்டிகளை தற்போது குறைத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 ஜூனில் நடைபெற உள்ளதால், வீரர்களின் வேலைப்பளுவை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

News September 27, 2024

55,000 ஆசிரியர்களுக்கு விரைவில் டேப்லெட்

image

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட கையடக்கக் கணினி (TAB) வழங்கும் பணி விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு TAB வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்டமாக 79,723 பேருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 55,478 பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

News September 27, 2024

Joint Ventureஇல் இணையும் மஹிந்திரா – ஃபோக்ஸ்வேகன்

image

மஹிந்திரா, ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் வணிக ரீதியான இணைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் ஸ்கோடா தனது 50% உரிமப் பங்குகளை மஹிந்திராவுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது. மேலும், மஹிந்திரா சுமார் ₹5,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலை குறைவதுடன், மஹிந்திரா கார்களின் உற்பத்தி திறனும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

News September 27, 2024

கார் ரேஸுக்கு தயாராகும் அஜித்

image

துபாயில் நடைபெற உள்ள யூரோப்பியன் ரேஸிங் தொடரில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் குமார் தயாராகி வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்களை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், ஒரு புதிய ஹெல்மெட்டையும் அவர் அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிகிறது. வெள்ளை சிவப்பு நிறத்தில் உள்ள இந்த ஹெல்மெட் டிரெண்ட் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

News September 27, 2024

எந்த மாற்றமும் ஏற்படவில்லை: மனு பாக்கர்

image

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பிறகு தனது வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என மனு பாக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான X பதிவில், “நான் மனு பாக்கர் தான், எனது இடைவேளையை அனுபவிக்கிறேன். நவம்பரில் மீண்டும் பயிற்சியை தொடங்குவேன். உங்கள் அன்பு, கவனத்திற்கு நன்றி” எனக் கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்றதால், வாழ்க்கை மாறிவிட்டதா என கேட்டு சிலர் அவரை நச்சரித்ததாக தெரிகிறது.

News September 27, 2024

அலெர்ட்: மேலும் ஒருவருக்கு MPOX

image

கேரளாவில் 2ஆவது குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எந்த வைரஸின் திரிபு என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. முன்னதாக, கடந்த 18ஆம் தேதி மலப்புரத்தில் ஒருவருக்கு MPOX பாதிப்பு இருப்பது தெரியவந்தது. வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!