news

News September 1, 2024

சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலானது

image

தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. செப்.1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 5 முதல் 7% வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் ₹5 முதல் ₹150 வரை ஏற்கனவே இருந்த கட்டணத்தை விட கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 1, 2024

பிளேட்டோவின் பொன்மொழிகள்

image

*உண்மையைப் பேசுபவனை விட வேறு யாரும் அதிகமாக வெறுக்கப்படுவதில்லை. *ஒரே நேரத்தில் மிகுந்த செல்வந்தராகவும், நல்லவராகவும் இருப்பது சாத்தியமில்லை. *அதிகாரத்தை விரும்பாதவனே அதை அடையத் தகுதியானவன். *வறுமை வருவது செல்வம் குறைவதால் அல்ல, ஆசைகள் அதிகரிப்பதால் தான். *அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் உள்ளது. *தனக்கு என்ன தெரியாது என்பதை அறிந்தவனே புத்திசாலி. * ஒரு கெட்ட நண்பனை விட ஒரு நல்ல எதிரியே மேலானது.

News September 1, 2024

‘கங்குவா’ ரிலீஸ் தள்ளிவைப்பு: சூர்யா

image

‘வேட்டையன்’ படம் அக்.10ல் வெளியாவதால், அதற்கு வழிவிடும் வகையில் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். 50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாளமாக சூப்பர்ஸ்டார் இருப்பதால், அவர் படம் வருவதுதான் சரியாக இருக்கும் எனவும், ‘கங்குவா’ ஒரு குழந்தை என்பதால் ரிலீஸ் ஆகும்போது ரசிகர்கள் அதை பண்டிகை போல் கொண்டாடுவார்கள் என நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News September 1, 2024

அந்த வலி அப்படியே இருக்கு: செல்வராகவன்

image

ஆயிரத்தில் ஒருவன் படம் கொடுத்த ரணங்கள் இன்றும் வலித்துக் கொண்டே இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் செல்வராகவன் வேதனை தெரிவித்துள்ளார். அவ்வளவு வலியை யாரும் அனுபவித்து இருக்க மாட்டார்கள் எனவும், பணிபுரிந்தவர்களின் அசுரத்தனமான உழைப்பிற்கு எவ்வித அங்கீகாரமும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பட்ஜெட் எகிறியதால் தானே வட்டிக்கு பணம் வாங்கி படத்தை முடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News September 1, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல் ▶குறள் எண்: 40 ▶குறள்: செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. ▶பொருள்: பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

News September 1, 2024

பதக்கங்களை தட்டி தூக்கிய இந்திய வீரர்கள்

image

ஜெர்மனியில் நடைபெற்ற 2ஆவது உலக காதுகேளாதோருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்திய வீரர்கள் 4 பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர். மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் அனுயா பிரசாத் தங்கமும், ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் அபினவ் தேஷ்வால் வெள்ளியும் வென்றனர். குழு போட்டியில் அபினவ், சுபம் வஷிஸ்த், சேட்டன் ஆகியோர் வெள்ளியும், ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் சுபம் வெண்கலமும் வென்றனர்.

News September 1, 2024

செப்டம்பரில் செம்ம மழை இருக்குமாம்!

image

செப்டம்பரில் இயல்பைவிட அதிகமான மழை பொழிவு இருக்குமென IMD கணித்துள்ளது. இது நீண்ட கால சராசரியை விட 109% அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் அதீத கனமழையும், வடகிழக்கு மாநிலங்கள், தென்னிந்தியாவில் சில பகுதிகளில் இயல்பான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரி அளவை விட அதீத வெப்பநிலை இருக்கக்கூடும் என IMD தெரிவித்துள்ளது.

News September 1, 2024

செப்டம்பர் 1: வரலாற்றில் இன்று

image

*1593 – முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் பிறந்தநாள். *1604 – சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்த் பொற்கோவிலில் முதல் தடவையாக வைக்கப்பட்டது. *1939 – ஊனமானவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணை கொலை செய்யும் திட்டத்திற்கு ஹிட்லர் ஒப்புதல் அளித்தார். *1929 – நவீன தமிழ் இலக்கிய முன்னோடி ஜி. நாகராஜன் பிறந்தநாள். *1987 – தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவிய தமிழரசன் உயிரிழந்த நாள்.

News September 1, 2024

அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்கள்

image

அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் CEO-க்களின் பட்டியலில் 10ஆவது இடத்தில் Palo Alto Networks நிறுவனத்தின் இந்திய CEO நிகேஷ் ஆரோரா இருக்கிறார். பெண் CEO-க்களின் பட்டியலில் 8ஆவது இடத்தில் இந்திய வம்சாவளியும், HubSpot CEO-மான யாமினி இருக்கிறார். ஆரோரா 151.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பளமாக பெறுகிறார். 25.88 மில்லியன் டாலர்கள் சம்பளம் பெறும் யாமினி, கோவை பாரதியார் பல்கலை.யில் படித்தவர் ஆவார்.

News September 1, 2024

‘தி கோட்’ படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

image

‘தி கோட்’ படத்தின் மொத்த பட்ஜெட் GST-யுடன் சேர்த்து ₹400 கோடி ஆனதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். ‘பிகில்’ படத்திற்கு பிறகு விஜய்யின் மார்கெட் எகிறிய காரணத்தால் அவருக்கு ₹200 கோடி சம்பளம் கொடுக்க வேண்டி இருந்ததாகவும் அர்ச்சனா கூறியுள்ளார். மேலும், டீன் ஏஜ் விஜய்யின் தோற்றம் விமர்சிக்கப்பட்டதை அடுத்து, கூடுதலாக வேலை செய்ய வேண்டி இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!