news

News September 1, 2024

கிளாசிக் 350 பைக்கை அறிமுகம் செய்தது ராயல் என்பீல்ட்

image

கிளாசிக் 350 மாடலின் 2024ம் ஆண்டு வேரியண்டை ராயல் என்பீல்ட் அறிமுகம் செய்துள்ளது. 5 வேரியண்ட்களில் மொத்தம் 7 நிறங்களில் பைக் அறிமுகமாகியுள்ளது. அந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.1,99,500 ஆகும். அதன் புக்கிங், டெஸ்ட் டிரைவ் இன்று (செப்.1) முதல் ஆரம்பமாகியுள்ளது. இளைஞர்கள் இடையே கிளாசிக் 350 மாடலுக்கு தனி வரவேற்பு உண்டு. எனவே அவர்களை மேலும் ஈர்க்கும் வகையில் சில மாற்றம் இதில் செய்யப்பட்டுள்ளது.

News September 1, 2024

ரஷ்யா மீது இரவில் ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்

image

உக்ரைனின் 11 ட்ரோன்களை வானிலேயே தடுத்து, ரஷ்ய ராணுவம் அழித்ததாக மாஸ்கோ நகர மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தும் நோக்கில் நேற்றிரவு இந்த ட்ரோன்கள் ஏவப்பட்டதாக அறியமுடிகிறது. ரஷ்யா மீது நடத்தப்பட்ட பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படும் சூழலில், இதில் யாருக்கும் பாதிப்போ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

News September 1, 2024

விஷக்கடிக்கு வேர்கட்டும் கோயில்

image

1,000 ஆண்டுகள் பழைமையான திருவாரூர் சதுரங்கவல்லப நாதர் திருக்கோயிலில் சாமுண்டீஸ்வரி தனிச் சந்நிதி (மைசூருக்கு அடுத்து) கொண்டிருக்கிறார். ஞாயிறன்று இங்கு வந்து, விரதமிருந்து, க்ஷீர புஷ்கரணியில் நீராடி, மூலிகை வேரைக் கையில் கட்டிக்கொண்டு, சாமுண்டிக்கு அர்ச்சனை செய்து, 27 நெய் விளக்கேற்றி, பூசாரி தரும் மிளகை வாங்கிச் சாப்பிட்டால் எலி & பூச்சிக்கடி போன்றவற்றின் விஷம் உடலில் இருந்து இறங்கி விடுமாம்.

News September 1, 2024

இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மழை

image

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடதமிழகத்தில் வலுவான தரைக்காற்று மணிக்கு 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும், 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

News September 1, 2024

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மோடி

image

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாவட்ட நீதித்துறை தொடர்பான தேசிய கருத்தரங்கில் பேசிய அவர், சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு தீவிர பிரச்னையாக திகழ்கிறதென்றும், ஆதலால் பெண்கள் தொடர்பான வழக்குகளில் நீதித்துறை விரைந்து தீர்வு காண்பது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்கும் என்று கூறினார்.

News September 1, 2024

ஆப்பிள் பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது ஏன் தெரியுமா?

image

ஆப்பிள் பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் 4 இலக்க எண்கள் இருந்தால், அவை பூச்சிக்கொல்லிகள், ரசாயனங்கள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்டவை என்று அர்த்தம். 5 இலக்க எண்கள் ஒட்டப்பட்டிருந்தால், அவை மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. 9 என்ற எண்ணில் தொடங்கும் 5 இலக்க எண்கள் இருந்தால், அவை இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவை என்று அர்த்தம். இந்த தகவல் உங்களுக்கு உபயோகரமானதாக இருந்தால் கமெண்ட் பண்ணுங்க.

News September 1, 2024

மோடி ஆட்சி யாருக்கானது?: செல்வப்பெருந்தகை

image

பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும் நிலையில், அவரது ஆட்சி யாருக்கானது என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். 2023ல் 259ஆக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, நடப்பாண்டில் 334ஆக அதிகரித்து இருப்பதாகவும், சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 25% குறைந்திருக்கும் நிலையில், இந்தியாவில் 29% அதிகரித்து இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News September 1, 2024

தமிழ் மொழியின் வரலாறு அறிவோம்.. (2)

image

*புறத்திணைகள் 12: தும்பைத்திணை- அரசர்கள் இருவரும் எதிர் எதிரே நின்று போர் புரிவது. *வாகைத்திணை- அரசர் தன் பகைவரை வெல்லுதல். *பாடான்திணை- மன்னனின் கல்வி, வீரம், புகழ், அருள் ஆகியவற்றை போற்றி புகழ்வது. *பொதுவியல்திணை- வெட்சி முதல் பாடாண் வரை கூறாத பொதுவான கருத்துகளை கூறுவது. *கைக்கிளை- ஒருதலைக் காமம். ஆண்பாற்கூற்று, பெண்பாற்கூற்று. *பெருந்திணை- பொருந்தாக் காமம். பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று.

News September 1, 2024

வணிக பயன்பாடு சிலிண்டர் விலை அதிகரிப்பு

image

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ₹38 உயர்த்தி உள்ளன. கடந்த மாதம் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹7.50 உயர்த்த பட்டது. அதையடுத்து ₹1,817க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் மீண்டும் ₹38 உயர்த்தப்பட்டு, ₹1,855க்கு விற்கப்படுகிறது. இதையும் சேர்த்து கடந்த 2 மாதங்களில் வணிக சிலிண்டர் விலை ₹45.50 அதிகரிக்கப்பட்டு உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

News September 1, 2024

தமிழ் மொழியின் வரலாறு அறிவோம்.. (1)

image

*புறத்திணைகள் 12: வெட்சித்திணை- பகைவர் ஆநிரைகளை கவர்வது. *கரந்தைத்திணை- பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டு வருவது. *வஞ்சித்திணை- பகைவர் நாட்டை கைப்பற்ற கருதியது. *காஞ்சித்திணை – தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனை தடுத்து போரிடல். *நொச்சித்திணை- பகைவர் உள்ளே நுழையாதவாறு மதிலைக் காப்பது. *உழிஞைத்திணை – பகைவர் மதிலை நாற்புறமும் வளைத்துக் கைப்பற்றுதல்.

error: Content is protected !!