India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விற்பனை செய்யப்படும் உணவு அல்லது பானங்களில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதை முதல் முறையாக புரியும் நபருக்கு 6 மாதங்கள் சிறை அல்லது ₹10,000 அபராதம் விதிக்கப்படலாம். 2ஆவது முறை சட்டத்தை மீறினால், 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை & உரிமம் ரத்து செய்யப்படலாம். மனித நுகர்வுக்குத் தகுதியற்ற & கலப்பட உணவை விற்றால், விற்பனையாளர் தண்டனைச் சட்டத்தின் 320 பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவர்.
நடிகர்கள் மீதான பாலியல் புகார்களால் கேரள திரையுலகமே ஆடிப் போயுள்ளது. நடிகர் சங்க பதவியிலிருந்து மோகன்லால் உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் மம்முட்டி, “ஹேமா கமிட்டி பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இனியும் கொடுமைகளை வேடிக்கை பார்க்க முடியாது. குற்றம் செய்தவர்களுக்கான தண்டனையை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. வலுவான தரைக்காற்று மணிக்கு 30 – 40KM வேகத்தில் வீசக்கூடும் என்றும் அடுத்த 6 நாள்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில், 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது.
பசுமை ஆற்றல் எரிசக்தி உற்பத்தித் துறையில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும் வகையில், ‘மல்டி-ஜங்ஷன்’ சோலார் செல்களை ஆக்ஸ்போர்டு பல்கலை., ஆராய்ச்சி வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர். ஒரு மைக்ரான் தடிமன் அளவிலான இந்த செல் மனித முடியைவிட 100 மடங்கு மெலிதானதாக இருக்கும். இது, 27% ஆற்றலை ஈர்த்து அளிக்கும் (5மடங்கு அதிகம்) என சான்றளிக்கப்பட்டுள்ளது. இதை கார், கைபேசி போன்றவற்றில் ஸ்டிக்கர் போல ஒட்டிக்கொள்ளலாம்.
தவெகவின் முதல் மாநாடு இம்மாதம் நடைபெற உள்ளது. அப்போது, திராவிடக் கட்சிகளை சேர்ந்த முக்கிய புள்ளிகள் சிலர் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அதிருப்தியில் உள்ள அனுபவம் வாய்ந்த தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் தவெக தரப்பு இறங்கியுள்ளது. DMKவில் டெல்டாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ADMKவில் திருச்சி, மதுரையை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் இணைவதற்கு தயாராக உள்ளதாக தெரிகிறது.
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் மட்டனுக்கு முக்கிய இடம் இருக்கிறது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் மனிதர்களுக்கு நல்லது. அதிலும் குறிப்பாக ஆட்டு மூளையில் எண்ணற்ற வைட்டமின்கள் இருக்கின்றன. இதயத்திற்கு இன்றியமையாத ஓமேகா 3 கொழுப்புகள், கிட்னியில் உள்ள கசடுகளை நீக்கும் பாஸ்பரஸ், ஹீமோகுளோபினை அதிகரிக்கும் B12 சத்துக்கள், ஆண்மையை அதிகரிக்கும் ஜிங்க் சத்துக்கள் ஆகியவை ஆட்டு மூளையில் நிரம்பியுள்ளன.
அணுகுண்டு இருந்தால் ஆக்கிரமிப்பையும், தாக்குதலையும் தவிர்க்கலாம் என கருதி வல்லரசு நாடுகள், அதை குவித்துள்ளன. இதில் ரஷ்யா, இஸ்ரேலும் அடங்கும். அந்த அணுகுண்டுகளை கண்டே ரஷ்யாவிடம் இருந்து மேலை நாடுகளும், இஸ்ரேலிடம் இருந்து அரேபிய நாடுகளும் விலகி இருக்கின்றன. ஆனால், தேசப்பற்றுக்காக சண்டையிடுவோருக்கு அணுகுண்டு ஒரு பொருட்டல்ல என்பதை உக்ரைன் போர் களமும், காசா போர் களமும் கண்முன் காட்டியுள்ளன.
உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில் ரஷ்யா போர் தொடுத்தபோது முதலில் பின்வாங்கிய அந்நாட்டு ராணுவம், தற்போது துணிந்து எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் குர்ஸ்கில் 500 சதுர கி.மீ. பரப்பளவை பிடித்துள்ளது. இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவியும், அதிரடி தாக்குதலையும் ஹமாஸ் நடத்தியது. இதில் ரஷ்யத் தரப்பில் பல ஆயிரம் பேரும், இஸ்ரேல் தரப்பில் நூற்றுக்கணக்கிலும் பலியானதாக புள்ளி விவரம் கூறுகிறது.
கரணம் தப்பினால் மரணம் என்பது அணுகுண்டுக்கும் பொருந்தும். அது தாக்குதலுக்கு ஆளாகும் நாடு, தயாரிக்கும் நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும். உக்ரைன், ஹமாஸ் எதிர் தாக்குதல்கள், அணுகுண்டு அச்சுறுத்தல் இனி எடுபடாது என்ற செய்தியை உலகிற்கு உணர்த்தியுள்ளன. ஆதலால் ஆபத்தான அணுகுண்டை தயாரிப்பதும், சேமிப்பதும் இனி அவசியம்தானா என்று சிந்திக்கும் நேரம் உலகிற்கு வந்துள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை பதிவிடுங்க.
தமிழக தொழிலதிபர்களில், சென்னையை சேர்ந்த ஆர்.ஜி. சந்திரமோகன் மிக முக்கியமானவர். ஆரம்பத்தில் தள்ளுவண்டி வியாபார ஐஸ் தொழில் செய்த அவர், பின்னர் அருண் ஐஸ்க்ரீம், ஆரோக்யா பால், ஹட்சன் பிராண்டில் தயிர், பன்னீர், நெய் உள்ளிட்டவற்றை விற்று ₹29,208 கோடி சாம்ராஜ்யமாக மாற்றினார். கணித தேர்வில் தோல்வியடைந்ததால், தினசரி ₹65 சம்பளத்தில் வேலை, பிறகு தொழில் என இடர்பாடுகளை சந்தித்தே உயர்ந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.