news

News September 28, 2024

கொள்கை எதிரிகளுக்கு எங்களை கண்டு பொறாமை

image

நாடாளுமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முடியாதவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தலை பற்றி பேசுவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக பவள விழாவில் சிறப்புரையாற்றிய அவர், அன்றைய இந்தியாவும் இன்றைய இந்தியாவும் ஒன்றா? எனக் கேள்வி எழுப்பி ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது என்றார். மேலும், திமுக கூட்டணியின் ஒற்றுமையை கண்டு கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக இருப்பதாகவும் கூறினார்.

News September 28, 2024

சமூக நீதியை சவக்குழிக்கு அனுப்ப நினைக்கிறார்கள்

image

பாஜக ஆட்சியை அகற்றும் வரை நமது வெற்றியை நோக்கி பயணிப்போம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திமுக பவள விழாவில் பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல், புதிய கல்வி கொள்கை என கூட்டாட்சி தத்துவத்திற்கு பாஜக நெருக்கடியை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், சமூக நீதியை சவக்குழிக்கு அனுப்ப வேண்டும் என செயல்பட்டு வருவதாகவும், அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாஜக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றார்.

News September 28, 2024

அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவு

image

தமிழகத்தில் பருவமழை தொடங்கவுள்ள சூழலில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பராமரிப்புப் பணி மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மின் இணைப்புகளை கண்காணித்தல், வடிகால்களை சுத்தம் செய்தல், பள்ளி மேற்கூரை மற்றும் வளாகத்தில் மழை நீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுத்தல், பள்ளி சுற்றுச்சுவரின் தன்மையை ஆராய்தல் போன்ற பணிகளை உடனே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 28, 2024

தலை கொடுக்கவும் தயங்க மாட்டோம்

image

விண்ணும், மண்ணும் இருக்கும் வரை திமுக நிலைத்திருக்கும் என வைகோ தெரிவித்துள்ளார். திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவை அழித்துவிடலாம் என இந்துத்துவா சக்திகளும், சனாதன சக்திகளும் திட்டம் தீட்டுவதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், ஒரே நாடு ஒரே மொழி போன்ற திட்டங்களை மத்திய அரசு திணிக்க நினைத்தால், தலை கொடுக்கவும் தயங்க மாட்டோம் என தனக்கே உரித்தான நடையில் முழங்கினார்.

News September 28, 2024

சுனிதாவை மீட்கப்போகும் நம்பிக்கை கீற்று!

image

தொழில்நுட்பக்கோளாறால், 110 நாட்களாக சர்வதேச விண்வெளி மையத்தில்(ISS) தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்க, டிராகன் விண்கலம் இன்றிரவு 10.47 மணிக்கு ஏவப்படுகிறது. புளோரிடாவிலிருந்து Falcon-9 ராக்கெட் மூலம் ஏவப்படும் இந்த விண்கலத்தில் ஹேக், கோர்புனோ என்ற 2 வீரர்கள் ISS செல்கின்றனர். 5 மாத ஆய்வுக்கு பின், சுனிதா, வில்மோரை அழைத்துக்கொண்டு, பிப்ரவரியில் பூமி திரும்புகின்றனர்.

News September 28, 2024

பல மாவட்டங்களில் கனமழை

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி திருப்பத்தூர், மயிலாடுதுறை, தருமபுரி, விழுப்புரம், திருச்சி, தென்காசி, புதுக்கோட்டை, தேனி, குமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 28, 2024

உடல் எடை குறைக்க உதவும் பழங்கள்

image

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பசியைக் குறைக்கக்கூடிய பழங்களை சாப்பிடலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். திராட்சையில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து பசியை குறைக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி இருப்பது எடை இழப்புக்கு உதவுகிறது. பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து பசியை குறைத்து, எடை இழப்புக்கு உதவுகிறது என்கிறார்கள். இவை தவிர, ஸ்ட்ராபெரி சாப்பிடவும் பரிந்துரைக்கப்படுகிறது.

News September 28, 2024

அரசியல் முதிர்ச்சி கொண்ட இயக்கம் திமுக

image

தேர்தல் அரசியலை முன்னிறுத்தி, அதிகாரத்தை நோக்கி இயங்குகிற சராசரி இயக்கமல்ல திமுக என திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார். திமுக பவள விழாவில் பேசிய அவர், 75 ஆண்டுகளாக இக்கட்சி வீறுநடை போடுவதாக தெரிவித்தார். அனைத்து கட்சிகளுக்கும் வழிகாட்டுகிற கட்சியாக திமுக இருப்பதாக தெரிவித்த அவர், பெரியாரின் கொள்கையில் தொடந்து இயங்கி வருவதாகவும், அரசியல் முதிர்ச்சி கொண்டிருப்பதாகவும் கூறினார்

News September 28, 2024

நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு

image

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்த புகாரில் FM நிர்மலா சீதாராமன் மற்றும் ED மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டி பாஜகவுக்கு நன்கொடை பெற்றதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு பெங்களூரு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

News September 28, 2024

அந்த வார்த்தைக்கே மரியாதை இல்லாம பண்ணீட்டாங்க: EPS

image

தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுதலையான நிலையில், அவரது தியாகம் போற்றத்தக்கது என CM ஸ்டாலின் கூறியிருந்தார். இதனை விமர்சித்த இபிஎஸ், SBஐ கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தவர்களே தற்போது அவரது விடுதலையை வரவேற்பதாக சாடினார். மேலும், தமிழகத்தில் கொலை சம்பவம் அரங்கேறாத நாளே இல்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

error: Content is protected !!